30th MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023ன் நிறைவு விழா
- உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பான எஃப்ஏஒ (FAO), சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு (IYM) -2023-ன் நிறைவு விழாவை நேற்று (29 மார்ச் 2024) இத்தாலியின் ரோமில் உள்ள எஃப்ஏஒ தலைமையகத்தில் ஏற்பாடு செய்திருந்தது. நேரிலும் காணொலி முறையிலும் என இரு வகைகளிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
- இதில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் கூடுதல் செயலாளர் திருமதி மணீந்தர் கவுர் திவேதி உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
- பல்வேறு நாடுகளில் சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023-ன் போது ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு வகையான நடவடிக்கைகள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளை எடுத்துரைக்கும் வகையிலான வீடியோவும் இந்த நிகழ்ச்சியின்போது திரையிடப்பட்டது.
- சர்வதேச சிறுதானிய ஆண்டின் வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உலக உணவு மற்றும் வேளாண் அமைப்பின் துணைத் தலைமை இயக்குநர் திருமதி பெத் பெக்டோலின் நிறைவுரையாற்றினார்.
- உலகெங்கிலும் உள்ள சிறுதானியங்களின் மதிப்பு கூட்டப்பட்ட உணவு வகைகளின் காட்சிப்படுத்தல் மற்றும் நேரடி சமையல் ஆகியவற்றைக் கொண்ட சிறப்பு கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- இந்தியாவின் முன்மொழிவைத் தொடர்ந்து, 70 க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, மார்ச் 2021-ல் அதன் 75 வது அமர்வில், 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்தது.
- சிறுதானியங்களின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள், குறித்த விழிப்புணர்வு 2023-ம் ஆண்டு முழுவதும் ஏற்படுத்தப்பட்டது.
- தேசிய மின்சக்திப் பயிற்சி நிறுவனமும் (NPTI - என்பிடிஐ), பவர் டிரான்ஸ்ஃபர் கார்ப்பரேஷன் (PTC) இந்தியா நிறுவனமும் நீடித்த வளர்ச்சி இலக்குகளை ஊக்குவிப்பதை மையமாகக் கொண்டு, எரிசக்தி துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான சிறப்பு மையம் ஒன்றை உருவாக்க உள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
- இதன் மூலம் தேசிய மின்சக்திப் பயிற்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளின் பயன்கள் மின்துறைக்கு பரவலாக கிடைக்கும்.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், என்பிடிஐ மற்றும் பிடிசி இந்தியா ஆகியவை இணைந்து ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் அறிவுப் பகிர்வை சிறப்பு மையத்தின் மூலம் மேற்கொள்ளும்.