Type Here to Get Search Results !

20th MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


20th MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஒன்றிய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் ராஜினாமா
  • மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக 2024, பீகாரின் ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சிக்கு ஓர் இடம் கூட கொடுக்கவில்லை. 
  • அதனால் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சர் மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரரும், ஒன்றிய அமைச்சருமான பசுபதி குமார் பராஸ் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். 
  • இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து பசுபதி குமார் பராஸ் ராஜினாமா செய்ததால், அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். 
  • அதனால் தற்போது கேபினட் அமைச்சராக இருக்கும் கிரண் ரிஜிஜுவுக்கு, கூடுதலாக பொறுப்பாக உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் பொறுப்பையும் ஒதுக்கி உத்தரவிட்டார்.
புதுதில்லி பாரத மண்டபத்தில் ஸ்டார்ட் அப் மகா கும்பமேளாவை பிரதமர் தொடங்கி வைத்தார்
  • புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று ஸ்டார்ட்-அப் எனப்படும் புத்தொழில் நிறுவன மகா கும்பமேளாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.
  • மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், மத்திய இணையமைச்சர்கள் திருமதி அனுப்பிரியா படேல், திரு சோம் பிரகாஷ் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
2024 ஜனவரியில் நாட்டின் கனிம உற்பத்தி - 5.9% வளர்ச்சி 
  • 2024 ஜனவரி மாதத்திற்கான கனிம உற்பத்தி குறியீடு (அடிப்படை: 2011-12=100) 144.1 ஆக உள்ளது. இது 2023 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 5.9% அதிகமாகும். 
  • இந்திய சுரங்க அலுவலகத்தின் தற்காலிக புள்ளிவிவரங்களின்படி, ஏப்ரல்-ஜனவரி, 2023-24 காலகட்டத்திற்கான ஒட்டுமொத்த வளர்ச்சி முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியை விட 8.3% சதவீதமாகும்.   
  • 2024 ஜனவரியில் முக்கியமான கனிமங்களின் உற்பத்தி அளவு: நிலக்கரி 998 லட்சம் டன், பழுப்பு நிலக்கரி 41 லட்சம் டன், இயற்கை எரிவாயு (பயன்படுத்தப்பட்டது) 3073 மில்லியன் கன மீட்டர், பெட்ரோலியம் (கச்சா) 25 லட்சம் டன், பாக்சைட் 2426 ஆயிரம் டன், குரோமைட் 251 ஆயிரம் டன், தாமிரம் 12.6 ஆயிரம் டன், தங்கம் 134 கிலோ கிராம், இரும்புத் தாது 252 லட்சம் டன், மாங்கனீசு தாது 304 ஆயிரம் டன், துத்தநாகம் 152 ஆயிரம் டன், சுண்ணாம்புக்கல் 394 லட்சம் டன், பாஸ்போரைட் 109 ஆயிரம் டன், மேக்னசைட் 13 ஆயிரம் டன்.
  • ஜனவரி 2023 ஐ விட ஜனவரி, 2024 -ல் நேர்மறையான வளர்ச்சியைக் காட்டும் முக்கியமான கனிமங்கள் பின்வருமாறு: மேக்னசைட் (90.1%), நிலக்கரி (10.3%), சுண்ணாம்புக்கல் (10%), பாக்சைட் (9.8%), மாங்கனீசு தாது (7.8%), இயற்கை எரிவாயு (U) (5.5%), இரும்புத் தாது (4.3%), பழுப்பு நிலக்கரி (3.6%), துத்தநாகம். (1.3%), மற்றும் பெட்ரோலியம் (கச்சா) (0.7%). எதிர்மறை வளர்ச்சியைக் காட்டும் பிற முக்கிய தாதுக்களில் தங்கம் (-23.4%), குரோமைட் (-35.2%) மற்றும் பாஸ்போரைட் (-44.4%) ஆகியவை அடங்கும்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், தனுகா வேளாண் தொழில்நுட்ப நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், தனுகா வேளாண் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 
  • இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் யு.எஸ். கவுதம், தனுகா வேளாண் தொழில்நுட்ப நிறுவனத் தலைவர் டாக்டர் ஆர்.ஜி. அகர்வால் ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
  • விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு இரு நிறுவனங்களின் திறனைப் பயன்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் ஆகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel