Type Here to Get Search Results !

1st MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

1st MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

மேற்கு வங்கத்தின் ஹூக்ளியில் உள்ள அரம்பாக் நகரில் ரூ. 7,200 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

  • பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கு வங்கத்தின் ஹூக்ளியில் உள்ள அரம்பாக் நகரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
  • இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் ரயில்வே, துறைமுகங்கள், எண்ணெய் குழாய்கள், சமையல் எரிவாயு விநியோகம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற துறைகளுடன் தொடர்புடையவையாகும். 
  • சுமார் ரூ. 2,790 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்தியன் ஆயிலின் 518 கி.மீ ஹால்டியா-பரவுனி கச்சா எண்ணெய்க் குழாயை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்தக் குழாய் பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் வழியாக செல்கிறது. 
  • இந்தக் குழாய் இணைப்பு பரவுனி சுத்திகரிப்பு ஆலை, போங்கைகான் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குவஹாத்தி சுத்திகரிப்பு ஆலைக்கு பாதுகாப்பான, செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் கச்சா எண்ணெயை வழங்கும்.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத்தில் ரூ.35,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
  • ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத்தில் உள்ள சிந்த்ரியில் ரூ.35,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். 
  • இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் உரம், ரயில்வே, மின்சாரம் மற்றும் நிலக்கரி ஆகிய துறைகளை உள்ளடக்கியது. எச்யுஆர்எல் மாதிரியை ஆய்வு செய்த பிரதமர், சிந்த்ரி ஆலை கட்டுப்பாட்டு அறையையும் பார்வையிட்டார்.
இந்துஸ்தான் உரம் & ரசாயன நிறுவனத்தின் சிந்த்ரி உரத் தொழிற்சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
  • ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத்தில் உள்ள சிந்த்ரியில் உள்ள இந்துஸ்தான் உரம் மற்றும் ரசாயன நிறுவனத்தின் சிந்த்ரி உரத் தொழிற்சாலையை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 2018-ம் ஆண்டு இந்த உரத் தொழிற்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். 
  • இந்த ஆலை இப்பகுதியில் 450 நேரடி மற்றும் 1௦௦௦ மறைமுக வேலை வாய்ப்புகளை வழங்கும். இது தவிர, தொழிற்சாலைக்கு பல்வேறு பொருட்களை வழங்குவதற்காக எம்.எஸ்.எம்.இ விற்பனையாளர்களை மேம்படுத்துவதன் மூலம் இப்பகுதி பயனடையும்.
மத்திய அரசின் ஆய்வு அமைப்பான சி-டாட், தற்சார்பு இந்தியாவை வலுப்படுத்தும் நோக்கில் குவால்காம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2024 எனப்படும் உலக கைபேசி உற்பத்தியாளர் சங்க மாநாடு அண்மையில் நிறைவடைந்தது. 
  • இந்த மாநாட்டின் போது மத்திய அரசின் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப பொது நிதியுதவி ஆராய்ச்சிக்கான டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையமான சி.டாட் (C-DOT), குவால்காம் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்தியாவில் புதுமைகளை ஊக்குவிக்கும் வகையில் உத்திசார் ஒத்துழைப்புகளை ஏற்படுத்தவும், புதுமையான தயாரிப்புகள் மற்றும் பயன்பாட்டு அம்சங்களில் இந்தியாவை மையமாகக் கொண்ட புத்தொழில் நிறுவனங்களை ஆதரிக்கவும் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கான 3வது தவணை நிதியை மத்திய அரசு ஒதுக்கியது
  • மத்திய அரசுக்கு பல்வேறு வரிகள் மூலம் கிடைக்கும் வரி வருவாயில் மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கான 3வது தவணை நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 
  • இதில், அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூ.25,495 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்துக்கு ரூ.25,495 கோடியும், பீகாருக்கு 14,295 கோடியும், மத்திய பிரதேசக்கு ரூ.11,157 கோடியும், மேற்குவங்கத்திற்கு ரூ.10,692 கோடியும், மகாராஷ்டிரா ரூ. 8,978 கோடியும், ராஜஸ்தான் ரூ.8,564 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.6,435 கோடி, தமிழ்நாட்டுக்கு ரூ.5,797 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.5,752 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ 5,183 கோடியும், குஜராத்துக்கு ரூ.4,943 கோடியும், சட்டீஸ்கருக்கு ரூ.4,842 கோடியும், ஜார்கண்ட் மாநிலத்திற்கு ரூ.4,700 கோடியும், அசாமிற்கு ரூ.4,446 கோடியும், தெலங்கானாவிற்கு ரூ.2,987 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • மேலும், கேரளாவுக்கு ரூ.2,736 கோடியும், பஞ்சாப் ரூ.2,568 கோடியும், அருணாசல பிரதேசத்திற்கு ரூ.2,497 கோடியும், உத்தர்கண்ட் மாநிலத்திற்கு ரூ.1,589 கோடியும், அரியானாவுக்கு ரூ. 1,553 கோடியும், இமாச்சல் பிரதேசத்திற்கு ரூ.1,180 கோடியும், மேகாலயாவுக்கு ரூ.1,090 கோடியும், மணிப்பூருக்கு ரூ.1018 கோடியும், திரிபுராவுக்கு ரூ.1,006 கோடியும், நாகலாந்துக்க ரூ.809 கோடியும், மிசோரமுக்கு ரூ.711 கோடியும், சிக்கிமிற்கு ரூ.551 கோடியும், கோவாவுக்கு ரூ.549 கோடி என மொத்தம் ரூ.1,42,122 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • ஏற்கனவே கடந்த 12ம் தேதி மாநிலங்களுக்கு ரூ.72,961 கோடி வரிப்பகிர்வு வழங்கப்பட்ட நிலையில் தற்போது பிப்ரவரி 3வது தவணையாக கூடுதலாக ரூ.1,42,122 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் GDP 8.4% ஆக அதிகரிப்பு
  • 2023-24 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நிலையான (2011-12) விலையில் ஜிடிபி ரூ 43.72 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-23 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ 40.35 லட்சம் கோடியாக இருந்தது, இது 8.4 சதவீத வளர்ச்சி விகிதத்தைக் காட்டுகிறது. 
  • மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டிருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து வேகமாக விரிவடைந்து வருவதாக அரசாங்கத்தின் புள்ளி விவரங்கள் காட்டுகிறது. 
  • கட்டுமானத் துறையின் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதம் (10.7 சதவீதம்), அதைத் தொடர்ந்து உற்பத்தித் துறையின் நல்ல வளர்ச்சி விகிதம் (8.5 சதவீதம்) FY24 இல் GDP வளர்ச்சியை உயர்த்தியுள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரியில் சரக்கு மற்றும் சேவைவரி வருவாய்
  • பிப்ரவரி 2024-ல் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,68,337 கோடியாக இருந்தது. இது 2023-ல் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 12.5 சதவீதம் அதிகமாகும்.
  • மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி): ரூ.31,785 கோடி, மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி): ரூ.39,615 கோடி, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி): இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு வசூலிக்கப்பட்ட ரூ. 38,593 கோடி உட்பட ரூ .84,098 கோடி, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு வசூலிக்கப்பட்ட ரூ. 984 கோடி உட்பட ரூ. 12,839 கோடித. மிழ்நாட்டைப் பொறுத்தவரை 2024 பிப்ரவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ. 9,713 கோடியாக இருந்தது.
  • இது கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடுகையில் 11 சதவீத வளர்ச்சியாகும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ. 8,774 கோடி வருவாய் கிடைத்தது.
பாதுகாப்புத் துறையில் தற்சார்புக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ரூ.39,125.39 கோடி மதிப்புள்ள ஐந்து ஒப்பந்தங்களில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது
  • பாதுகாப்பு துறையில் தற்சார்பை அடைவதன் ஒரு பகுதியாகவும், இந்தியாவில் உற்பத்தி செய்யும் (மேக்-இன்-இந்தியா) முன்முயற்சியை மேலும் ஊக்குவிக்கவும், பாதுகாப்பு அமைச்சகம் இன்று (மார்ச் 1, 2024) புதுதில்லியில் ரூ. 39,125.39 கோடி மதிப்புள்ள ஐந்து முக்கிய கொள்முதல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. 
  • பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்புத்துறைச் செயலாளர் திரு கிரிதர் அரமானே ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
  • மிக்-29 விமானங்களுக்கான ஏரோ-இன்ஜின்களை கொள்முதல் செய்வதற்காக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. 
  • சிஐடபிள்யூஎஸ் ஆயுத அமைப்பு கொள்முதல் மற்றும் உயர் சக்தி ரேடார் (எச்பிஆர்) கொள்முதல் செய்வதற்காக லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் நிறுவனத்துடன் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரம்மோஸ் ஏவுகணைகள் தொடர்பாக பிரமோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel