18th MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்தியா அமெரிக்கா படைகள் இடையேயான கூட்டு பேரிடர் நிவாரணப் பயிற்சி - TIGER TRIUMPH 24
- இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே முப்படைகள் பங்கேற்கும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பயிற்சியான TIGER TRIUMPH – 24, கிழக்கு கடல் பகுதியில் இன்று முதல் (மார்ச் 18) 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.
- இந்தியக் கடற்படை கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், இந்தியக் கடற்படை விமானங்கள், இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ வாகனங்கள், இந்திய விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மற்றும் விரைவு அதிரடி மருத்துவக் குழு ஆகியவை இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.
- அமெரிக்க ராணுவ வீரர்கள், அமெரிக்க கடற்படையினர் மற்றும் அந்நாட்டுக் கடற்படைக் கப்பல்கள் அமெரிக்கா சார்பில் பங்கேற்கின்றனர். இந்தப் பயிற்சி, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண செயல்பாடுகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இதில் துறைமுக கட்டப் பயிற்சியை மார்ச் 18 முதல் 25 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இரு நாடுகளின் கடற்படைப் பணியாளர்களும் இதில் பங்கேற்பார்கள்.
- துறைமுகக் கட்டம் நிறைவடைந்ததும், கப்பல்களில் வீரர்கள் கடலுக்குச் சென்று மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் தொடர்பாக கடல்சார் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
- உலகிலேயே மிகப்பெரிய நாடாக ரஷ்யா உள்ளது. ஆனாலும் இங்கு மக்கள் தொகை 15 கோடி தான். அங்கே ஒவ்வொரு 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது.
- அந்த வகையில், ரஷ்யாவில் அதிபர் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாய்றுக்கிழமை வரை மொத்தம் மூன்று நாட்கள் வாக்குப்பதிவு நடைபெற்றது.
- நாடு முழுவதும் ஒரு லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பாட்டு தேர்தல் நடத்தப்பட்டது. வெளிநாடுகளில் வாழும் ரஷ்யர்கள் வாக்களிக்க அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள், துணை தூதரகங்களில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
- மின்னஞ்சல் மூலமும் மக்கள் வாக்களித்தனர். ரஷ்யாவில் இருக்கும் 11 மண்டலங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. அதிபர் புதின் சுயேட்சையாக போட்டியிடும் நிலையில் தேசிய சுதந்திர ஜனநாயக கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன.
- நடந்து முடிந்த அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கைந் நடைபெற்று வருகிறது. அதில் பதிவான வாக்குகளில் 87.8% வாக்குகளை புதின் பெற்றுள்ளதாகவும் மீண்டும் அவர் அதிபராக தேர்வாகியுள்ளதாக முதல் கட்ட தேர்தல் முடிவுகள் தெரிவித்துள்ளது. சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு ரஷ்யாவில் ஒருவருக்கு கிடைக்கும் அதிகபடச வாக்கு இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- 1999 ஆம் ஆண்டு அதிபராக பதவியேற்ற புதின் ரஷ்யாவில் மிகவும் சக்திவாய்ந்த நபராக உள்ளார். ரஷ்யா மற்றும் சோவியத் ஒன்றியத்தில் கடந்த காலங்களில் அதிக முறை ஆதிகாரத்தில் இருந்த ஜோசப் ஸ்டாலினின் சாதனையை தற்போது புதின் முறியடுத்துள்ளார்.
- அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட் செய்தது. டெல்லி கேப்பிடல்ஸ் 18.3 ஓவரில் 113 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. ஆர்சிபி பந்துவீச்சில் ஷ்ரேயங்கா பாட்டீல் 4, சோபி மோலினியூக்ஸ் 3, ஆஷா சோபனா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- அடுத்து களமிறங்கிய ஆர்சிபி 19.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்து வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்கு முதல் பரிசாக ரூ.6 கோடி, டெல்லி அணிக்கு 2வது பரிசாக ரூ.3 கோடி வழங்கப்பட்டது. டெல்லியுடன் 5 முறை மோதியதில், ஆர்சிபி முதல் முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- முதன்முறையாக, இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ), இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (பிசிசிஐ) இணைந்து, இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் சங்க (ஐடிசிஏ) அணி மற்றும் தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்க (டிடிசிஏ) அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டியை நடத்தியது.
- வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல் என்ற நோக்கத்துடன் இந்த விளம்பர கண்காட்சி கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போட்டி நேற்று (மார்ச் 16, 2024) புது தில்லியில் உள்ள கர்னைல் சிங் மைதானத்தில் நடைபெற்றது.
- இந்த நிகழ்ச்சியில், புகழ்பெற்ற பாரா வில்வித்தை வீராங்கனையும், அர்ஜுனா விருது பெற்றவருமான செல்வி ஷீத்தல் தேவி மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக அறிவிக்கப்பட்டார்.