16th MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சென்னையில் 2025 ஜூனில் 2வது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
- நம் உயிருக்கு இணையான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025- ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- ஒவ்வொரு ஆண்டும், ராணுவ அகாடமிகளில் உள்ள இளம் வீரர்கள் ஆயுதப் படைகளில் அதிகாரிகளாக நியமிக்கப்படுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு கல்வி மற்றும் ராணுவ பயிற்சிகளைப் பெறுகிறார்கள்.
- தற்போதுள்ள விதிகளின்படி, அத்தகைய வீரர்கள், பயிற்சிகளுக்குப் பின்னரே அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். கடுமையான ராணுவப் பயிற்சிகளின்போது, சில வீரர்கள் ஊனமடைந்து மருத்துவ ரீதியாக ராணுவத்தில் செயல்பட முடியாத சூழல் ஏற்படுகிறது.
- அத்தகைய வீரர்களுக்கான (கேடட் - Cadet) எதிர்கால வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் முன்மொழிவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.
- இதன் மூலம் ராணுவத்தினரின் மறுவாழ்வு இயக்குநரகத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பலன்கள் இந்த பயிற்சி வீரர்களுக்கும் நீட்டிக்கப்படும்.
- மருத்துவ ரீதியாக ஊனமுற்று, ராணுவத்தில் செயல்பட முடியாத 500 பயிற்சி வீரர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள். இதனால் அவர்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் உறுதி செய்யப்படும்.
- இதேபோன்ற நிலையில் எதிர்காலத்தில் பயிற்சியின்போது வீரர்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களும் இதே பலன்களைப் பெறுவார்கள்.