13th MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உத்தரகாண்ட் மாநில பொது சிவில் சட்ட மசோதாக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்
- மத்திய பாஜக அரசின் முக்கிய கொள்கைகளில் ஒன்றான பொது சிவில் சட்டம், பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
- எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், ஜெய்ஸ்ரீராம், வந்தே மாதரம் போன்ற ஆளும் பாஜக எம்.எல்.ஏ.க்களிம்ன் முழக்கங்களுடன் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி பொது சிவில் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
- இதன் மீதான விவாதம் நடந்த நிலையில், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனை சட்டமாக்க குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும் என்பதால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.
- இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம், நாட்டிலேயே பொது சிவில் சட்டம் அமலாக உள்ள முதல் மாநிலமாக உத்தரகாண்ட் ஆகவுள்ளது.
- முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலின்போது, தனது தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.
- அதன்படி, வெற்றி பெற்றதும் பொது சிவில் சட்ட மசோதாவைத் தயாரிக்க, உத்தரகாண்ட் அரசு, 2022ல், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில், ஓய்வுபெற்ற நீதிபதி பிரமோத் கோஹ்லி, சமூக ஆர்வலர் மனு கவுர், முன்னாள் தலைமைச் செயலர் சத்ருகன் சிங், டூன் பல்கலைக்கழக துணைவேந்தர் சுரேகா டங்வால் ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழுவை அமைத்தது.
- அக்குழுவினர், நான்கு தொகுதிகளாக 740 பக்கங்கள் கொண்ட ஒரு விரிவான வரைவைத் தயாரித்து அரசிடம் சமர்ப்பித்தனர். அதனடிப்படையில், உத்தரகாண்ட் பொது சிவில் சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு, தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு, தற்போது ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
- பொது சிவில் சட்டம் யாருக்கும் எதிரானது அல்ல எனவும், இது சமத்துவம், மற்றும் சம உரிமைகள் கொண்டது எனவும் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் அப்போதைய ஹைதராபாத் பகுதிக்கு விடுதலை கிடைக்கவில்லை. அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேலின் முயற்சியால் "ஆபரேஷன் போலோ' என்று பெயரிலான காவல் துறையினரின் நடவடிக்கை மூலம் 13 மாதங்களுக்குப் பிறகு 1948-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி ஹைதராபாத் மாநிலத்துக்கு நிஜாம் ஆட்சியிலிருந்து விடுதலை கிடைத்தது.
- இதை நினைவுகூரும் விதமாக, செப்டம்பர் 17-ஆம் தேதியை ஹைதராபாத் விடுதலை தினமாக அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன.
- இந்த நிலையில், ஹைதராபாத் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையிலும், இளைஞர்கள் மனதில் தேசப்பற்றை ஏற்படுத்தும் நோக்கிலும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் தேதியை ஹைதராபாத் விடுதலை தினமாகக் கொண்டாட மத்திய அரசு தீர்மானித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஹைதராபாத் சமஸ்தானம் பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் அல்லது தனி நாடாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நடைபெற்ற பிரிவினைவாத போராட்டம் காரணமாக அப்பகுதி இந்தியாவுடன் இணைவதில் தாமதம் ஏற்பட்டது.
- இந்தியாவின் தொழில்நுட்பம்: வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான சிப் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, சுமார் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான மூன்று செமிகண்டக்டர் திட்டங்களுக்கு இன்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
- குஜராத்தின் தோலேரா சிறப்பு முதலீட்டு மண்டலத்தில் செமிகண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை, அசாம் மாநிலம் மோரிகானில் அவுட்சோர்சிங் செமிகண்டக்டர் தயாரிப்பு மற்றும் சோதனை தொழிற்சாலை, குஜராத் மாநிலம் சனந்தில் அவுட்சோர்சிங் செமிகண்டக்டர் தயாரிப்பு மற்றும் சோதனை தொழிற்சாலை ஆகியவை இன்று தொடங்கி வைக்கப்பட்ட வசதிகளாகும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய அரசுக்கும், ஐக்கிய அரபு அமீரக அரசுக்கும் இடையே 2024 பிப்ரவரி 13-ம் தேதி நடைபெற்ற உயர்மட்ட பயணத்தின்போது கையெழுத்தான அரசுகளுக்கு இடையிலான கட்டமைப்பு ஒப்பந்தத்திற்கு நடைமுறைக்கு பிந்தைய ஒப்புதல் இன்று வழங்கப்பட்டது.
- இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதும், துறைமுகங்கள், கடல்சார் மற்றும் சரக்கு போக்குவரத்து துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும் இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
- இந்தியா-மத்திய கிழக்கு ஐரோப்பிய பொருளாதார வழித்தடத்தின் வளர்ச்சி தொடர்பான எதிர்கால கூட்டு முதலீடு மற்றும் ஒத்துழைப்புக்கான கூடுதல் சாத்தியக்கூறுகளை ஆராயும் நோக்கத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான பகுதிகளை இந்த ஒப்பந்தம் உள்ளடக்கியுள்ளது.
- இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்புக்கான விரிவான கட்டமைப்பு உள்ளது. நாடுகளின் அதிகார வரம்பு தொடர்புடைய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுடன் இசைந்து செல்லும் வகையில் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்கைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் ஒப்பந்தங்களின் தொகுப்பின் அடிப்படையில் இந்த ஒத்துழைப்பு இருக்கும்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தில்லி மெட்ரோவின் நான்காம் கட்டத் திட்டத்தின் இரண்டு புதிய வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவை தேசியத் தலைநகரில் மெட்ரோ இணைப்பை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இரண்டு வழித்தடங்கள் - இந்தர்லோக் - இந்திரபிரஸ்தா 12.377 கி.மீ, லஜ்பத் நகர் - சாகேத் ஜி பிளாக் 8.385 கி.மீ.
- தில்லி மெட்ரோவின் நான்காம் கட்டத் திட்டத்தின் இந்த இரண்டு வழித்தடங்களின் மொத்த திட்ட மதிப்பு ரூ.8,399 கோடியாகும். இதற்கான நிதியை மத்திய அரசு, தில்லி அரசு மற்றும் சர்வதேச நிதி முகமைகள் அளிக்கும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவிலிருந்து பூடானுக்கு பெட்ரோலியம், எண்ணெய், மசகு எண்ணெய் மற்றும் அது சார்ந்த பொருட்களை சப்ளை செய்வது தொடர்பாக இந்தியாவுக்கும், பூடானுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- பாலினம், வர்க்கம் அல்லது வருமான பாகுபாடுகளைப் பொருட்படுத்தாமல், குறிப்பாக ஹைட்ரோ கார்பன் துறையில் பூடானுடன் மேம்பட்ட பொருளாதார மற்றும் வணிகத் தொடர்புகளுடன் இந்தியாவுக்கும், அதன் குடிமக்களுக்கும் பயனளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.