12th MARCH 2024 TAMIL CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
அரியானா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக நயாப்சிங் சைனி தேர்வு
- பாஜக ஆளும் அரியானா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மனோகர்லால் கட்டார் இன்று காலை தனது பதவியை நாஜினாமா செய்தார்.
- இதனை தொடர்ந்து அரியானா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக நயாப்சிங் சைனி பாஜக எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யபட்டுள்ளார்.
- நயாப்சிங் சைனி அரியானா மாநிலத்தின் பாஜக மாநில தலைவரகா உள்ளார். மேலும் குருஷேத்ரா தொகுதியின் மக்களவை உறுப்பினராகவும் நயாப்சிங் சைனி பதவி வகித்துவருகிறார்.
- அரியானா மாநிலத்தை பொருத்தவரையில் மொத்தம் 90 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதில் பாஜகவுக்கு 41 எம்.எல்.ஏ.க்களும், ஜே.ஜே.பி கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். அவர்களுடன் இணைந்து பாஜக ஆட்சி நடத்திவந்தது.
- இந்த நிலையில், மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு காரணமாக ஜே.ஜே.பி கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியது. பெருமான்மைக்கு 45 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில், சுயட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று பாஜக மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது.
- ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இன்று முப்படைகளின் நேரடி பயிற்சியின் வடிவத்தில் உள்நாட்டுப் பாதுகாப்புத் திறன்களை ஒருங்கிணைத்து செய்யப்பட்ட செயல் விளக்கத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடியை பார்வையிட்டார்.
- நாட்டின் தற்சார்பு இந்தியா முன்முயற்சியை அடிப்படையாகக் கொண்ட நாட்டின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் 'பாரத் சக்தி' உள்நாட்டு ஆயுத அமைப்புகள் மற்றும் தளங்களின் வரிசையைக் கொண்டிருக்கும்.
- டி-90 (ஐஎம்) டாங்கிகள், தனுஷ் மற்றும் சாரங் கன் சிஸ்டம்ஸ், ஆகாஷ் ஆயுத அமைப்பு, லாஜிஸ்டிக்ஸ் ட்ரோன்கள், ரோபோடிக் மியூல்ஸ், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ஏ.எல்.எச்) மற்றும் இந்திய ராணுவத்தின் ஆளில்லா வான்வழி வாகனங்கள் உள்ளிட்ட முக்கிய உபகரணங்கள் மற்றும் ஆயுத அமைப்புகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றன.
- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பிரத்யேக சரக்கு வழித்தடத்தின் இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தில் ரூ.1,06,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் ரயில்வே கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. 10 புதிய வந்தே பாரத் ரயில்களையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தஹேஜில் பெட்ரோநெட் திரவ இயற்கை எரிவாயுவின் பெட்ரோ ரசாயன வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று 50 பாரதிய மக்கள் மருந்தக மையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் விரைவான மதிப்பீடுகள் 153.0 ஆக உள்ளது. ஜனவரி மாதத்திற்கான சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளுக்கான தொழில்துறை உற்பத்தியின் குறியீடுகள் முறையே 144.1, 150.1 மற்றும் 197.1 ஆக உள்ளன.
- தொழில் உற்பத்திக் குறியீட்டின் திருத்தக் கொள்கையின்படி, இந்த விரைவு மதிப்பீடுகள் அடுத்தடுத்த வெளியீடுகளில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும்.
- பயன்பாடு அடிப்படையிலான வகைப்பாட்டின்படி, ஜனவரி மாதத்தில் முதன்மை பொருட்களுக்கு 154.2, மூலதன பொருட்களுக்கு 109.2, இடைநிலை பொருட்களுக்கு 163.0 மற்றும் உள்கட்டமைப்பு / கட்டுமான பொருட்களுக்கு 185.0 குறியீடுகள் உள்ளன.
- மேலும், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் நுகர்வோர் அல்லாத நீடித்த பொருட்களுக்கான குறியீடுகள் ஜனவரி மாதத்தில் முறையே 120.7 மற்றும் 163.9 ஆக உள்ளன.
- அணு ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய ஏவுகணை சோதனைகளில், டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டுள்ளது.
- நீண்ட தொலைவு சென்று தாக்கக் கூடிய அக்னி வகை ஏவுகணைகளை, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் டி.ஆர்.டி.ஓ., தயாரித்து உள்ளது.
- இதன்படி, இதுவரை வெளிவந்துள்ள, அக்னி --1 முதல் 4 வரையிலான ஏவுகணைகள், 350ல் இருந்து, 3,500 கி.மீ., தொலைவு வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை.
- இதன் அடுத்தகட்டமாக, அக்னி -- 5 ஏவுகணை தயாரானது. 3,500 கி.மீ.,யை தாண்டி சென்று தாக்கக்கூடிய இந்த ஏவுகணை, ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
- தற்போது, எம்.ஐ.ஆர்.வி, எனப்படும், 'மல்டி இன்டிபென்டட்லி டார்கடெபிள் ரீயென்ட்ரி வெகிக்கிள்' எனப்படும், ஒரே நேரத்தில், பல அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன், அக்னி - 5 ஏவுகணையில் சேர்க்கப்பட்டுள்ளது.
- இந்த ஏவுகணை, 5,000 கி.மீ.,க்கும் அதிகமான துாரத்தில் உள்ள இலக்கையும் தாக்கக் கூடியது.கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அக்னி - 5 ஏவுகணையை இந்தியாவில் மத்திய பகுதியில் இருந்து செலுத்தினாலும், சீனாவின் வடக்கு எல்லை வரை தாக்க முடியும்.
- ஆசியா முழுதும், ஐரோப்பாவின் சில பகுதி வரை செலுத்த முடியும். 'மிஷன் திவ்யாஸ்த்ரா' என்ற பெயரில் இந்த திட்டம் நடந்து வந்தது.
- அதாவது, ஒரே ஏவுகணையில், பல அணு ஆயுதங்களை எடுத்துச் சென்று, ஆங்காங்கு உள்ள இலக்குகளை தாக்க முடியும். அதுவும் மிகத் துல்லியமாக தாக்குதல் நடத்தும் திறன் உள்ளது.
- இதன் பயன்பாட்டு சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்ததாக, டி.ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே இந்த தொழில்நுட்பத்துடன் கூடிய, கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளை வைத்துள்ளன.
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 போட்டிகளில் 712 ரன்கள் குவித்து அசத்தினார்.
- பிப்ரவரி மாதத்தில் அவர் பல சாதனைகளை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டி ஒன்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த நபர் என்ற வாசிம் அக்ரமின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்தார்.
- இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவர் 2 இரட்டை சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் அடித்தார். இந்த நிலையில், ஐசிசியின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஐசிசி பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் மற்றும் இலங்கை வீரர் பதும் நிசங்கா இடம்பெற்றிருந்த நிலையில் ஜெய்ஸ்வால் இந்த விருதினை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நாடு முழுவதும் மலிவான விலையில் மற்றும் அணுகக்கூடிய டிஜிட்டல் சேவைகளை பரப்புவதற்காக தொலைத் தொடர்புத் துறையின் (DoT) கீழ் உள்ள உலகளாவிய சேவை கடமை நிதி (USOF), பிரசார் பாரதி, டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க் ஆகியவற்றுடன் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
- யு.எஸ்.ஓ.எஃப்-ன் கீழ் பாரத்நெட் உள்கட்டமைப்பில் கிராமப்புற இந்தியாவிற்கான ஓடிடி மற்றும் இ- வணிக தளத்துடன் பிராட்பேண்ட் சேவைகளை இணைப்பதே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம்.
- பிரதமரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளுக்கு உகந்த சூழலை வளர்ப்பதற்கான அசைக்க முடியாத உறுதிப்பாடு, கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துவதற்காக இணைப்பு, உள்ளடக்கம் மற்றும் வர்த்தகத்தை ஒருங்கிணைக்கும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உண்மையிலேயே தனித்துவமான ஒத்துழைப்புக்கு அடித்தளமாக உள்ளது.
- தொலைத் தொடர்புத் துறை செயலாளர் டாக்டர் நீரஜ் மிட்டல் திரு நீரஜ் வர்மா, நிர்வாகி, யு.எஸ்.ஓ.எஃப்; திரு கோஷி, நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, ஓ.என்.டி.சி, திரு ஏ.கே.ஜா, பிளாட்ஃபார்ம்ஸ், பிரசார் பாரதி மற்றும் தொலைத் தொடர்புத் துறையின் இணைச் செயலாளர் திரு சுனில் குமார் வர்மா ஆகியோர் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- நாட்டில் உள்ள கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் கிராமங்களில் அதிவேக அகண்ட அலைவரிசை மற்றும் மொபைல் இணைப்புகளை செயல்படுத்துவதில் யு.எஸ்.ஓ.எஃப் முக்கிய பங்கு வகிக்கிறது.
- இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரசார் பாரதி ஓடிடி சேவை, லைவ் டிவி மற்றும் தேவைக்கேற்ப உள்ளடக்கம் உள்ளிட்ட சேவைகளைச் செயல்படுத்தும், அதே நேரத்தில் யுஎஸ்ஓஎப் கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் திறமையான மற்றும் அதிவேக பிராட்பேண்ட் சேவைகளை உறுதி செய்யும்.
- தேசிய பொது சேவை ஒளிபரப்பாளரான பிரசார் பாரதி, இணையற்ற பாரம்பரிய உள்ளடக்கம் ஆகியவற்றுடன், அதன் ஓடிடி தளத்தில் இயங்கும் உள்ளடக்கத்தை ஆதாரமாகக் கொண்டு தயாரிப்பில் ஈடுபடும்.
- டிஜிட்டல் உள்கட்டமைப்பில் முன்னணி வகிக்கும் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலையமைப்பு (ONDC), தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் டிஜிட்டல் வர்த்தகத்தை செயல்படுத்துவதில் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தேவையான கட்டமைப்பை வழங்கும். கல்வி, சுகாதாரம், பயிற்சி, கடன், காப்பீடு, விவசாயம் போன்ற பல சேவைகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.