11th MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் நியமனம்
- தமிழ்நாடு மாநிலத் தோதல் ஆணையராக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.பழனிகுமாா், 2021-ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டாா். இரண்டு ஆண்டுகள் பணிக்காலத்துக்குப் பிறகு, கடந்த ஆண்டு மே மாதம் மீண்டும் அதே பதவியில் ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டாா்.
- அவரது, நீட்டிக்கப்பட்ட பணிக் காலம் வரும் சனிக்கிழமையுடன் (மாா்ச் 9) நிறைவடைகிறது. சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால், பணி நாளான வெள்ளிக்கிழமையுடன் பணி நிறைவு பெற்றார்.
- இதையடுத்து, புதிய தோதல் ஆணையரை நியமிக்கும் நடவடிக்கைகளை மாநில அரசு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமணம் செய்யப்பட்டுள்ளார்.
- நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு இன்று (மார்ச் 11) அறிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது தொடர்பான அறிவிப்பை அரசிதழில் உள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
- கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் 2019 டிசம்பர் 12-ல் ஒப்புதல் அளித்தார்.
- இந்தச் சட்டமானது, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பா் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது.
- அதாவது ஹிந்து, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகளுக்கு குடியுரிமை வழங்குகிறது.
- நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 112 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை ஹரியானா மாநிலம் குருகிராமில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
- நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கானோர் தொழில்நுட்பம் மூலம் இந்த நிகழ்ச்சியுடன் இணைந்தனர்.
- ஆந்திராவில் ரூ.14,000 கோடி மதிப்பிலான பெங்களூரு - கடப்பா - விஜயவாடா விரைவுச் சாலையின் 14 தொகுப்புகள்; கர்நாடகாவில் ரூ. 8,000 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை 748A இன் பெல்காம் – ஹங்குந்த் – ராய்ச்சூர் பிரிவின் ஆறு தொகுப்புகள்; ஹரியானாவில் ரூ .4,900 கோடி மதிப்புள்ள ஷாம்லி - அம்பாலா நெடுஞ்சாலையின் மூன்று தொகுப்புகள்; பஞ்சாபில் ரூ.3,800 கோடி மதிப்பில் அமிர்தசரஸ் - பதிண்டா வழித்தடத்தின் இரண்டு தொகுப்புகள்; மேலும், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ரூ.32,700 கோடி மதிப்பிலான 39 இதர திட்டங்களும் செயல்படுத்தப்படும்.
- உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடா்ந்து, அதுவரை அணிசேரா நிலையைக் கடைப்பிடித்து வந்த அண்டை நாடுகளான பின்லாந்தும், ஸ்வீடனும் தங்களது பாதுகாப்புக்காக நேட்டோவில் இணைய விண்ணப்பித்தன.
- ஆனால், ஸ்வீடன் நேட்டோவில் இணைய மற்றொரு நேட்டோ உறுப்பினரான துருக்கி தடையாக இருந்து வந்தது.
- இஸ்லாமிய மதத்துக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கவில்லை என்றும், பயங்கரவாத குா்து இனக் குழுக்களை ஆதரிப்பதாகவும் ஸ்வீடன் மீது குற்றஞ்சாட்டி வரும் துருக்கி, அந்நாட்டை நேட்டோவில் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து வந்தது.
- இந்நிலையில், துருக்கியின் ஆட்சேபணை காரணமாக, ஸ்வீடனின் அண்டை நாடான பின்லாந்து மட்டும் நேட்டோ அமைப்பின் 31-வது உறுப்பு நாடாக கடந்த ஏப்ரல் மாதம் இணைந்தது.
- இதனிடையே, உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பைத் தொடர்ந்து, ஸ்வீடனை நேட்டோவில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.
- இந்த நிலையில், நேட்டோ கூட்டமைப்பில் ஸ்வீடனை இணைப்பதற்கான ஆட்சேபணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று துருக்கியிடம் அந்த அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் வலியுறுத்தியிருந்தார்.
- இதனைத் தொடர்ந்து, நேட்டோ உறுப்பு நாடுகளில் ஒன்றாக கடந்த 7-ஆம் தேதி ஸ்வீடன் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, பெல்ஜியத்தின் ப்ரஸ்ஸல்ஸ் நகரில் அமைந்துள்ள நேட்டோ தலைமையகத்தில் ஸ்வீடன் தேசியக்கொடி இன்று(மார்ச். 11) ஏற்றப்பட்டது.
- ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் மற்றும் நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ஆகியோர் கொடியேற்றத்தின்போது உடனிருந்தனர்.
- உலகின் நம்பர் 1 பேட்மிண்டன் ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் இந்தியாவின் சிராக் ஷெட்டி ஜோடி, சீன தைபேயின் லீ ஜே-ஹூய் மற்றும் யாங் போ-ஹ்சுவான் ஜோடியை 21-11, 21-17 என்ற கணக்கில் தோற்கடித்து, 2024 ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் சூப்பர் 750 சீசனின் முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது.
- சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் இன்று BWF பிரெஞ்ச் ஓபன் 2024 பட்டத்தை வென்றதன் மூலம் சீசனின் முதல் வெற்றியை ருசித்துள்ளனர்.
- குடியரசுத் தலைவர், 2024 பிப்ரவரி 9 தேதியிட்ட அறிவிக்கை மூலம் மற்றும் மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்புக் குழு சட்டம், 2003-ன் பிரிவு 4(1)-ன் கீழ், வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில், மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்புக் குழு ஆணையராக திரு ஏ.எஸ்.ராஜீவை நியமித்துள்ளார்.
- மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்புக் குழு சட்டம் 2003-ன் பிரிவு 5(3)-ல் உள்ள விதிமுறைக்கு இணங்க, குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையர் முன்பாக திரு ஏ.எஸ்.ராஜீவ் (2024, மார்ச் 11) இன்று ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.