நோக்ரெக் உயிர்க்கோளக் காப்பகம் / NOKREK BIOSPHERE RESERVE: மேகாலயா மாநிலத்தின் மேற்குப் பகுதியில் 820 ச.கி.மீட்டரில் இக்காப்பகம் பரவியுள்ளது. உயிர்க்கோளக் காப்பகமாக 1988ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
மேற்கு கேரோ மலைகள், கிழக்கு கேரோ மலைகள், தெற்கு கேரோ மலைகள் போன்ற மூன்று மாவட்டங்களில் பரவிக் காணப்படுகிறது.
இதன் மைய மண்டலம் 47.48 ச.கி. மீட்டர் பரப்பளவு கொண்டது. இக்காப்பகம் பல ஜீவநதிகள் மற்றும் ஊற்றுகளின் ஆதாரப்பகுதியாக விளங்குகிறது. சிம்சங் ஆறு, கெனால் ஆறு, பகி ஆறு, தாரங் ஆறு மற்றும் ரோங்டிக் ஆறு போன்றவை முக்கிய ஆறுகளாகும்.
முக்கிய ஆறுகளின் நீர்பிடிப்பு பகுதியாக திகழ்வதும் எலுமிச்சை இனங்கள் மிகுந்து காணப்படுவதும் இக்காப்பகத்தின் சிறப்பு அம்சங்களாகும்.
தாவரங்கள்
நோக்ரெக் உயிர்க்கோளக் காப்பகம் / NOKREK BIOSPHERE RESERVE: உயரத்தை அடிப்படையாகக் கொண்டு வெப்பமண்டலம் மற்றும் பகுதி வெப்பமண்டலம் என இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
மேலும் பசுமைமாறாக் காடு, பகுதி பசுமை மாறாக்காடு, மற்றும் மூங்கில் புதர்கள், புல்வெளிகள் மற்றும் ஆற்றோரங்களை உள்ளடக்கிய இலையுதிர் காடுகளில் பல தாவர வகைகள் மிகுந்து காணப்படுகின்றன.
விலங்குகள்
நோக்ரெக் உயிர்க்கோளக் காப்பகம் / NOKREK BIOSPHERE RESERVE: பன்றிவால் குரங்கு, இமாலய கருங்கரடி, புலி சிறுத்தை, யானை மற்றும் பறக்கும் அணில் போன்ற விலங்கினங்கள் இங்கு வாழ்கின்றன.
நிலக்கரி, சுண்ணாம்புக்கல் மற்றும் ஜிப்சம் போன்ற தாதுவளம் மிக்க இவ்வுயிர்க்கோளத்தில் சுமார் 40,000 மக்கள்தொகை கொண்ட, 128 கேரோ சமுதாய கிராமங்கள் உள்ளன.
இக்காப்பகத்தில் 16.4 விழுக்காடு பரப்பில் காடழித்து பயிர்செய்வதால் மண்ணரிப்பு அதிகமாக ஏற்படுகிறது.
ENGLISH
நோக்ரெக் உயிர்க்கோளக் காப்பகம் / NOKREK BIOSPHERE RESERVE: The reserve is spread over 820 sq km in the western part of Meghalaya state. It was declared a Biosphere Reserve in 1988. It is spread over three districts namely West Garo Hills, East Garo Hills and South Garo Hills.
Its central area is 47.48 sq. km. meters area. The reservoir is the source of many living rivers and springs. The main rivers are Chimsung River, Canal River, Bagi River, Tarang River and Rongtik River.
Being a catchment area of major rivers and abundant species of lemurs are the special features of this reserve.
Plants
NOKREK BIOSPHERE RESERVE: It is divided into two major divisions based on altitude namely tropical and subtropical.
Also many types of vegetation are abundant in deciduous forests including evergreen forest, semi-evergreen forest, and bamboo thickets, grasslands, and riverbanks.
Animals
NOKREK BIOSPHERE RESERVE: Fauna such as pig-tailed monkey, Himalayan black bear, tiger leopard, elephant and flying squirrel live here.
The biosphere, rich in minerals like coal, limestone and gypsum, has 128 Karo community villages with a population of about 40,000.
In this reserve, 16.4 percent of the forest area is cleared for cultivation, causing more soil erosion.