Type Here to Get Search Results !

8th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


8th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

உத்தரகண்ட் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்
  • திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசுரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
  • அதற்குப் பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தைப் பின்பற்ற வழியமைக்கும் ‘பொது சிவில் சட்டத்தை’ நாடு முழுமைக்கும் கொண்டுவர மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இது தொடா்பாக சட்ட ஆணையம் மூலமாக நாட்டு மக்களிடமும் கடந்த ஆண்டு கருத்து கேட்கப்பட்டது.
  • இதனிடையே, பாஜக ஆட்சி நடைபெற்றுவரும் உத்தரகண்டில் பொது சிவில் சட்ட மசோதா வரைவை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 5 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு உருவாக்கிய 172 பக்கங்கள் கொண்ட பொது சிவில் சட்ட மசோதா 392 பிரிவுகளைக் கொண்டுள்ளது.
  • பொது சிவில் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்ய உத்தரகண்ட் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை கூட்டப்பட்டது. 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை பேரவை கூடியதும், பொது சிவில் சட்ட மசோதாவை மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி தாக்கல் செய்தாா்.
  • பேரவையில் விவாதத்துக்குப் பின்னா் பொது சிவில் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மை உறுப்பினா்களின் ஆதரவோடு புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
  • தொடா்ந்து, ஆளுநரின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்ததும், பொது சிவில் சட்டம் உத்தரகண்டில் அமலுக்கு வரும்.
  • உத்தரகண்ட் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது சிவில் சட்ட மசோதவில் பழங்குடி சமூகத்தினருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • இந்த மசோதாவில் பலதார திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுமணம், விவாகரத்து குறித்த பொது விதிகளை மசோதா கொண்டுள்ளது.
  • அதேபோல், திருமணங்களைப் போன்று, லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவோரும் அரசிடம் பதிவு செய்து கொள்வது கட்டாயாமாக்கப்பட்டுள்ளது. தவறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகர்கள் / மொத்த விற்பனையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள், பெருந்தொடர் சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் பதப்படுத்துபவர்களுக்கான கோதுமை இருப்பு வரம்பை மத்திய அரசு திருத்தியுள்ளது
  • ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பை நிர்வகிப்பதற்கும், பதுக்கல் மற்றும் நேர்மையற்ற ஊக வணிகத்தைத் தடுப்பதற்கும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வர்த்தகர்கள் / மொத்த விற்பனையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள், பெருந்தொடர் சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் பதப்படுத்துபவர்களுக்கு பொருந்தக்கூடிய கோதுமையின் இருப்பு வரம்புகளை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. 
  • குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் மீதான உரிமத் தேவைகள், இருப்பு வரம்புகள் மற்றும் இயக்கக் கட்டுப்பாடுகளை அகற்றுதல் (திருத்தம்) ஆணை, 2023 ஜூன் 12 அன்று வெளியிடப்பட்டது. இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2024, மார்ச் 31 வரை பொருந்தும். 
  • கோதுமையின் விலையை மிதப்படுத்தும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, கோதுமை இருப்பு வரம்பை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • இதன்படி வர்த்தகர்கள் / மொத்த விற்பனையாளர்கள் இருப்பு வரம்பு 1000 மெட்ரிக் டன் என்பதிலிருந்து 500 மெட்ரிக் டன் என மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு சில்லறை விற்பனை நிலையத்திற்கும் 5 மெட்ரிக் டன் என்பதில் மாற்றம் இல்லை.
  • பெருந்தொடர் சில்லரை விற்பனையாளர்களின் ஒவ்வொரு கிடங்குக்கும் 5 மெட்ரிக் டன் மற்றும் அனைத்துக் கிடங்குகளிலும் 1000 மெட்ரிக் டன் என்பது ஒவ்வொரு கிடகுக்கும் 5 மெட்ரிக் டன் மற்றும் அனைத்து கிடங்குகளிலும் 500 மெட்ரிக் டன் என திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட நிறுவனங்களிடம் உள்ள சரக்குகள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருந்தால், அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் அவர்கள் அதை பரிந்துரைக்கப்பட்ட இருப்பு வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். 
  • நாட்டில் கோதுமைக்கு செயற்கையான தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த இருப்பு வரம்புகள் அமலாக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணிப்பார்கள்.
  • மேலும், உணவு மற்றும் பொது விநியோகத் துறை, கோதுமை விலையைக் கட்டுப்படுத்தவும், நாட்டில் எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்யவும் கோதுமையின் இருப்பு நிலவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel