Type Here to Get Search Results !

நந்தாதேவி உயிர்க்கோளக் காப்பகம் / NANDA DEVI BIOSPHERE RESERVE

 • நந்தாதேவி உயிர்க்கோளக் காப்பகம் / NANDA DEVI BIOSPHERE RESERVE: நந்தாதேவி உயிர்க்கோளக் காப்பகம் 1988ஆம் ஆண்டு உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. நந்தாதேவி மற்றும் பூப்பள்ளத்தாக்கு தேசியப் பூங்காக்களை உள்ளடக்கி 5860 ச.கி.மீட்டரில் பரவியுள்ளது. 
 • இந்தியாவில் உயிர்ப்புவியியல் மண்டலங்களில் இமயமலை மண்டலத்தில் இக்காப்பகம் காணப்படுகிறது. உலகப் பாரம்பரியப் பகுதியாக 1992ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
 • நந்தாதேவி சிகரம் உட்பட தானகிரி, சங்பேங், திரிசூல் போன்ற பலசிகரங்கள் இங்கே காணப்படுகின்றன. உத்ராஞ்சல் மாநிலத்தின் சமோலி, பித்தரோகார் மற்றும் பாகேஸ்வர் போன்ற மாவட்டங்களில் இக்காப்பகம் பரவியுள்ளது. 
 • கார்வால் இமயமலைப் பகுதியில் உள்ள சமோலி மாவட்டத்தில் காப்பகத்தின் முக்கியப் பகுதிகள் பரவியுள்ளன. மக்கள் பொதுவாக விறகு, தீவனம், மரதடி மற்றும் இலைகளுக்காக இக்காப்பகத்தைச் சார்ந்துளளனர். பாரம்பரிய மருத்துவ முறைகளில் பல மூலிகை தாவரங்கள் பயன்படுகின்றன.

தாவரங்கள்

 • நந்தாதேவி உயிர்க்கோளக் காப்பகம் / NANDA DEVI BIOSPHERE RESERVE: வெப்பமண்டலக்காடு, பகுதி உயர்மலைக்காடு, உயர்மலைக்காடு மற்றும் பனிபடர்ந்த பல காடுவகைகளை உள்ளடக்கிய இக்காப்பகத்தில் இந்திய தாவரவியல் ஆய்வுத்துறையால் 800 தாவர இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

விலங்குகள்

 • நந்தாதேவி உயிர்க்கோளக் காப்பகம் / NANDA DEVI BIOSPHERE RESERVE: இந்திய விலங்கியல் ஆய்வுத்துறை மற்றும் பிற ஆராய்ச்சியாளர்களால் 18 வகையான பாலூட்டிகளில் 7 இனங்களும், 200 வகை பறவைகளில் 8 இனங்களும் அழியும் தருவாயில் உள்ள விலங்கினங்கள் இங்கு உள்ளன. 
 • பனிச்சிறுத்தை, கருங்கரடி, கஸ்தூரிமான் மற்றும் இமாலய வரையாடு போன்ற பாலூட்டிகள் காணப்படுகின்றன.

காப்பகத்தின் கலாச்சார பாரம்பரியம்

 • நந்தாதேவி உயிர்க்கோளக் காப்பகம் / NANDA DEVI BIOSPHERE RESERVE: இக்காப்பகத்தில் ஏழ்மையான மக்களே வாழ்ந்து வருகின்றனர். நகரங்களிலிருந்து வெகுதொலைவில் வாழ்வதால் கல்வியறிவு விகிதம் மிகக் குறைவாகவும் சொந்தமாக நிலம் வைத்திருப்போர்கள் குறைவாகவும் உள்ளனர். 
 • அவர்களுக்கென்று தனித்த கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மத நம்பிக்கைகளை கொண்டுள்ளனர். வேளாண்மையும் ஆடுவளர்ப்பும் முக்கிய தொழில்களாகும்.
 • புதியா பழங்குடியினர் 1962ஆம் ஆண்டுக்கு முன்னர் திபெத்தியர்களுடன் பண்டமாற்று வியாபார முறையில் சிறந்து விளங்கினர்.

அச்சுறுத்தல்

 • நந்தாதேவி உயிர்க்கோளக் காப்பகம் / NANDA DEVI BIOSPHERE RESERVE: மருத்துவத்திற்காக அழிந்து வரும் தாவர இனங்களை மிகுதியாக பயன்படுத்துதல், காட்டுத்தீ, வேட்டையாடுதல் மற்றும் யாத்திரீகர்கள் வருகை போன்றவை இச்சூழலமைப்பிற்கு அச்சுறுத்தல்களாகும்.

  ENGLISH

  • NANDA DEVI BIOSPHERE RESERVE: This reserve was declared as Biosphere reserve in 1988. It covers an area of 5860 sq. km including Nanda Devi and Bhupvalley National Parks. Among the biogeographical zones in India, this reserve is found in the Himalayan region. It was declared a World Heritage Site in 1992.
  • Many peaks like Thanagiri, Sangbang, Trishul including Nanda Devi peak are found here. The reserve is spread over the districts of Chamoli, Pitarogarh and Bagheswar in Uttarakhand state.
  • Major parts of the reserve are spread over Samoli district in the Garhwal Himalayas. People generally depend on this reserve for firewood, fodder, logs and leaves. Many herbal plants are used in traditional medicine.

  Plants

  • NANDA DEVI BIOSPHERE RESERVE: 800 plant species have been identified by the Botanical Survey of India in this reserve which includes tropical forest, semi-alpine forest, sub-alpine forest and several forest types.

  Animals

  • NANDA DEVI BIOSPHERE RESERVE: 7 species out of 18 species of mammals and 8 species out of 200 species of birds are listed as endangered by the Zoological Survey of India and other researchers.
  • Mammals such as snow leopard, black bear, musk deer and Himalayan gazelle are found.

  Cultural Heritage of the Archive

  • NANDA DEVI BIOSPHERE RESERVE: Poor people are living in this reserve. Literacy rates are very low and those who own land are few because they live far from cities.
  • They have their own distinct culture, tradition and religious beliefs. Agriculture and goat rearing are the main industries.
  • The Nahya tribe excelled in bartering with the Tibetans before 1962.

  Threat

  • NANDA DEVI BIOSPHERE RESERVE: Threats to this ecosystem include overexploitation of endangered plant species for medicinal purposes, forest fires, poaching and pilgrims.

  Post a Comment

  0 Comments
  * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

  Top Post Ad

  Below Post Ad

  Hollywood Movies

  close

  Join TNPSC SHOUTERS Telegram Channel

  Join TNPSC SHOUTERS

  Join Telegram Channel