Type Here to Get Search Results !

28th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


28th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
  • பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும் இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார்.
  • இரண்டாவது நாளான இன்று தூத்துக்குடியில் ரூ. 17,300 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார்.
  • தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்கு பெட்டக முனையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
  • வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தை நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் துறைமுகமாக மாற்றும் வகையில் கட்டமைக்கப்பட இருக்கும் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை, ஹைட்ரஜன் உற்பத்தி மையம் போன்ற பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்கள் தொடங்கி வைத்தார்.  
  • முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் உள்நாட்டு நீா்வழிக் கப்பலின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். 
  • வாஞ்சி மணியாச்சி-நாகா்கோவில் ரயில் பாதை, வாஞ்சி மணியாச்சி-திருநெல்வேலி பிரிவு மற்றும் மேலப்பாளையம்-ஆரல்வாய்மொழி பிரிவு உள்பட இரட்டை ரயில் பாதை திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணித்தார். 
  • சுமாா் ரூ.1,477 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த இரட்டை ரயில் பாதை திட்டம், கன்னியாகுமரி, நாகா்கோவில் மற்றும் நெல்லையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரயில் பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்க உதவும்.
  • 4 சாலைத் திட்டங்களையும் பிரதமா் மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அா்ப்பணித்தார். தேசிய நெடுஞ்சாலை 844-இல் ஜித்தண்டஹள்ளி-தருமபுரி இடையே நான்குவழிப் பாதை, தேசிய நெடுஞ்சாலை 81-இல் மீன்சுருட்டி-சிதம்பரம் இடையே இருவழிப் பாதை, தேசிய நெடுஞ்சாலை 83-இல் ஒட்டன்சத்திரம்-மடத்துக்குளம் இடையே நான்குவழிப் பாதை, தேசிய நெடுஞ்சாலை 83-இல் நாகப்பட்டினம்-தஞ்சாவூா் இடையே இருவழிப் பாதை ஆகிய இந்தத் திட்டங்கள் சுமாா் ரூ.4,586 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளன. 
  • 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 கலங்கரை விளக்கங்களில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுற்றுலா வசதிகளையும் பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணித்தார்.
  • இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் சர்பானந்தா சோனோவால், எல்.முருகன், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் வணக்கம் எனக்கூறி பிரதமர் தன் உரையை தொடங்கினார்.
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
  • இஸ்ரோவின் வளர்ச்சி வேகமாக இருப்பதால், ஏற்கனவே ஸ்ரீஹரி கோட்டாவில் இருக்கும் 2 ராக்கெட் ஏவுதளத்தோடு சேர்த்து மூன்றாவது ஏவுதளம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. 
  • அதன் படி, அதிகாரிகளின் பல்வேறு கட்ட சோதனைக்குப் பிறகு தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது. 
  • குலசேகரன்பட்டினம் பகுதியில் சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் ராக்கெட் ஏவுதளம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. 
  • அமலாபுரம், எள்ளுவிளை, கூடல் நகர், அழகப்பபுரம், உள்ளிட்ட பல கிராமங்களில் 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடந்தன. 
  • மேலும், இப்பகுதியில் 2000 பரப்பளவில் விண்வெளி பூங்காவை தமிழ்நாடு அரசு அமைக்க உள்ளது. குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி இன்று அடிக்கல் நாட்டினார். 
  • இந்தியாவிலிருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் அனைத்துமே ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்துதான் ஏவப்படுகிறது. காரணம் இந்த இடம் பூமத்திய ரேகைக்கு நெருக்கமாக இருக்கிறது. 
  • ஆனால் இதைவிட பூமத்திய ரேகைக்கு நெருக்கமாக ஒரு இடம் இந்தியாவில் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அது தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரப்பட்டனம் பகுதிதான். இங்கிருந்து ராக்கெட்களை ஏவும்போது, அது இலக்கை குறைந்த எரிபொருளை கொண்டு அடைந்துவிடும்.
விண்ணில் வெற்றிக்கரமாக செலுத்தப்பட்டது ரோகிணி ராக்கெட்
  • திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் தயாரிக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க 'ஆர்.எச்.200 சவுண்டிங்' ரோகிணி ராக்கெட் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் குலசேகரன்பட்டினத்தில் தற்காலிகமாக கான்கிரீட் தளம் மூலம் அமைக்கப்பட்டு உள்ள சிறிய ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
WTO கூட்டத்தில் சேவைத்துறை தொடர்பான இந்தியா கொண்டு வந்த ஒப்பந்தம் நிறைவேற்றம்
  • உலக வர்த்தக அமைப்பின் (WTO) அமைச்சர்கள் மாநாட்டின் (World Trade Organization Ministerial Conference) முதல் நாளிலேயே இந்தியாவின் முன்னெடுப்பு மிகப்பெரிய பலனைக் கொடுத்துள்ளது.
  • சேவைத் துறையில் வணிகத்தை எளிதாக்குவதற்கு உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. சேவைத் துறை வர்த்தகம் தொடர்பான சிக்கல்களுக்கு ஒரு தீர்வு ஏற்பட்டுள்ளது. 
  • இதன் அடிப்படையில் இனிமேல், சேவைத் துறையில் புதிய விதிகள் உருவாக்கப்படும் என்று உலக வர்த்தக அமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. உலகின் 71 நாடுகள் இந்த புதிய ஒப்பந்தத்தில் இணைகின்றன.
  • சேவைத் துறையில் மைல்கல் என்று பார்க்கப்படும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவிற்கு நல்ல ஊக்கம் கிடைக்கும். இதற்குக் காரணம், இந்தியாவின் சேவைத் துறை வணிகம் உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது.
லோக்பால் தலைவராக ஏ.எம்.கான்வில்கா் நியமனம்
  • பிரதமா், மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்கள், மத்திய அரசுப் பணியாளா்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை லோக்பால் அமைப்பு விசாரிக்கும்.
  • லோக்பால் அமைப்பின் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கரை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நியமித்துள்ளாா். அந்த அமைப்பில் நீதித் துறையைச் சோ்ந்த உறுப்பினா்களாக முன்னாள் நீதிபதிகள் லிங்கப்பா நாரயாண சுவாமி, சஞ்சய் யாதவ், ரிது ராஜ் அவஸ்தி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். 
  • அந்த அமைப்பில் நீதித் துறை சாராத உறுப்பினா்களாக சுஷீல் சந்திரா (முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா்), பங்கஜ் குமாா், அஜய் திா்கே ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் பொறுப்பேற்கும் நாளில் இருந்து இந்த நியமனங்கள் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு முன்பு லோக்பால் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் பதவி வகித்தாா். அவா் கடந்த 2022-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்தாா். அதன் பின்னா், அந்த அமைப்புக்கு முன்னாள் நீதிபதி பிரதீப் குமாா் மொஹந்தி பொறுப்பு தலைவராக இருந்து வருகிறாா்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel