25th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
- கடந்த மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் படி தூத்துக்குடியில் வியட்நாம் நாட்டைச் சோந்த வின் ஃபாஸ்ட் என்ற நிறுவனம் மின்சார கார் தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர். மு க ஸ்டாலின் முன்னிலையில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொழுத்தனது.
- இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி சில்லாநத்தம் பகுதியில் உள்ள சிப்காட் வளாகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வின் ஃபாஸ்ட் நிறுவனம் அமைக்க உள்ள தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், கடந்த டிசம்பர் மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்றது.
- இந்த தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழாவில் எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவினர் கலந்துகொண்டனர். அவரின் தூத்துக்குடி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குஜராத்தின் துவாரகாவில் 4150 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
- குஜராத்தின் துவாரகாவில் ரூ.4150 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- ஓகா நிலப்பரப்பையும் பேட் துவாரகாவையும் இணைக்கும் சுதர்சன் சேது, வடினார் மற்றும் ராஜ்கோட்-ஓகா, ராஜ்கோட்-ஜெட்டல்சர்-சோம்நாத் மற்றும் ஜெட்டல்சார்-வான்ஸ்ஜாலியா ரயில் மின்மயமாக்கல் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- தேசிய நெடுஞ்சாலை-927 இன் தோராஜி-ஜம்கண்டோர்னா-கலவாட் பகுதியை அகலப்படுத்துவதற்கும், ஜாம்நகரில் உள்ள பிராந்திய அறிவியல் மையம் மற்றும் ஜாம்நகரில் உள்ள சிக்கா அனல் மின் நிலையத்தில் வெளியேறும் உமிழ்வுகளிலிருந்து கந்தகக் கலவைகளை அகற்றும் செயல்முறை அமைப்பு நிறுவலுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
- பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது சொந்த மாநிலமான குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். ஓகா அருகே உள்ள பேட் துவாரகா தீவுக்கு சென்ற பிரதமர் மோடி கிருஷ்ணர் கோவில் பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
- இதனைத் தொடர்ந்து ஓகா துறைமுகத்தையும் பேட் துவாரகையையும் இணைக்கக் கூடிய சுதர்சன் சேது கேபிள் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். துவாரகையில் உள்ள துவாரகாதீஷ் கோவிலுக்கும் பிரதமர் மோடி சென்று வழிபாடு நடத்தினார்.
- ஓகா பெருநிலப்பகுதியையும், பேட் துவாரகா என்ற அரபின் கடலின் கட்ச் வளைகுடாவில் உள்ள தீவையும் இணைக்கும் வகையில் சுமார் ரூ.980 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது சுதர்சன் சேது கேபிள் பாலம். சுமார் 2.32 கி.மீ நீளமுள்ள இந்த பாலம்தான் இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலம்.
- சுதர்சன் சேது ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இதில் ஸ்ரீமத் பகவத் கீதையின் வசனங்கள் மற்றும் இருபுறமும் பகவான் கிருஷ்ணரின் படங்களால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதை உள்ளது. நடைபாதையின் மேல் பகுதிகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு, ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
- இந்த பாலம் போக்குவரத்தை எளிதாக்குவதோடு, துவாரகா மற்றும் பேட்-துவாரகா இடையே பயணிக்கும் பக்தர்களின் நேரத்தை கணிசமாகக் குறைக்கும்.
- பாலம் கட்டப்படுவதற்கு முன்பு, யாத்ரீகர்கள் பேட் துவாரகாவை அடைய படகு போக்குவரத்தை நம்ப வேண்டியிருந்தது. இந்த பாலம் தேவபூமி துவாரகாவின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் செயல்படும்.
- மேலும் ராஜ்கோட் - ஓகா, ராஜ்கோட் - ஜெதல்சார் - சோம்நாத் மற்றும் ஜெதல்சார் - வன்ஜாலியா ரயில் மின்மயமாக்கல் திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- தேசிய நெடுஞ்சாலை எண் 927-ன் தோராஜி - ஜம்கந்தோர்னா - காலவாட் பிரிவை அகலப்படுத்தும் பணிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
- இந்தியா - ஜப்பான் ராணுவம் இடையேயான வருடாந்திர கூட்டு ராணுவ ஒத்திகைப் பயிற்சி பிப்.25ல் தொடங்கியது.
- ராஜஸ்தானின் மஹாஜன் மைதானத்தில் 2 வாரம் நடைபெறும் இந்த ராணுவப் பயிற்சியில், இரு நாடுகளிருந்தும் 40 வீரர்கள் வீதம் மொத்தம் 80 வீரர்கள் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
- இந்தியா - ஜப்பான் ஒத்துழைப்பின் ஒருபகுதியாக இந்த ராணுவப் பயிற்சி ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த முறை ஜப்பானில் நடைபெற்ற இந்த ஒத்திகைப் பயிற்சி இம்முறை இந்தியாவில் நடைபெறுகிறது.
- இருநாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்நிகழ்வின் ஒருபகுதியாக, ராணுவ ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை காட்சிப்படுத்தும் கண்காட்சியும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.