23rd FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சென்னை மாநகராட்சியில் 500 இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- 2021-2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, யுமாஜின் (UMAGINE) - வருடாந்திர தொழில்நுட்ப தலைமை உச்சி மாநாட்டை சென்னையில் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, முதலாவது 'UmagineTN' மாநாடு 2023ம் ஆண்டு மார்ச் 23 முதல் 25 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
- அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) மூலம் 'UmagineTN 2024' எனும் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
- இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இலவச வைஃபை வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
- நிதிநிலை அறிக்கையில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 1,000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
- இதன் முதற்கட்டமாக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், கடற்கரைகள் போன்ற சென்னையின் 500 முக்கிய இடங்களில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- உத்தரப் பிரதேசம் வாராணசியில் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார்
- அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்தத் திட்டங்களில் பல சாலைகள், சமையல் எரிவாயு பாட்டில் ஆலை, பால் பதப்படுத்தும் அலகு, நெசவாளர்களுக்கான பட்டுத்துணி அச்சிடுவதற்கான பொது வசதி மையம் ஆகியவை அடங்கும்.
- இதோடு, வாராணசியில் ஜவுளித் துறைக்காக தேசிய ஃபேஷன் தொழில்நுட்பக் கழகத்தையும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் தேசிய முதியோர் மையத்தையும் மோடி அடிக்கல் நாட்டினார்.
- குரு ரவிதாஸின் சிலையைத் திறந்துவைத்த பிரதமர் மோடி, அவரது பிறந்தநாள் விழாவிலும் பங்கேற்றார். ரவிதாஸ் அருங்காட்சியகத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
- பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சன்சத் சமஸ்கிருத பிரதியோகிதா வெற்றியாளர்களுடன் அவர் உரையாடினார்.
- சூரியனை ஆய்வு செய்வதற்காக 'ஆதித்யா எல் 1' என்ற விண்கலத்தை கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இந்த ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்தும், சூரியினில் ஏற்படும் காந்த புயல்கள் குறித்தும் ஆய்வு செய்யும்.
- சூரியனுக்கு மிக அருகில் உள்ள, 'எல் 1' எனப்படும், லெக்ராஞ்சியன் புள்ளியில் தற்போது நிலை நிறுத்தப்பட்டுள்ளது.தற்போது ஆதித்யா எல்-1 சூரிய காற்றின் எலக்ட்ரான்கள் நிலையை கண்டறிந்துள்ளது.
- விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள பாப்பா (PAPA) என்னும் கருவி பிப். 10, 11 ஆகிய தேதிகளில் எலக்ட்ரான் நிலையை கண்டறிந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- சூரிய காற்றின் எலக்ட்ரான் மற்றும் அயனிகளை தொடர்ந்து ஆதித்யா எல்1 கண்காணித்து வருவதாகவும், விண்வெளி வானிலை நிலைகளை கண்காணிப்பதில் பாப்பா கருவி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.