Type Here to Get Search Results !

20th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


20th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

மராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு - சட்டசபையில் நிறைவேற்றம்
  • மஹாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா அம்மாநில சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது.
  • மஹாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசு பணிகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு தரக்கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
  • இதனை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு ஏற்றுக் கொண்டு, இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
  • இந்நிலையில், இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான சட்டசபை சிறப்புக் கூட்டத்தொடர் இன்று நடந்தது. சட்டசபையின் இரு அவைகளிலும் மராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கொண்டு வந்தார். 
  • எதிர்க்கட்சியும் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தது. இதனையடுத்து மசோதா ஒரு மனதாக நிறைவேறியது.
ஜம்மு காஷ்மீரில் ரூ.32,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
  • ஜம்முவில் உள்ள மவுலானா ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ரூ. 32,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டினார்.
  • மேலும், ஜம்மு காஷ்மீரில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 1,500 பேருக்கு பணி நியமன ஆணைகளைப் பிரதமர் வழங்கினார். 'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ஜம்மு' திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார்.
  • நாடு முழுவதும் கல்வி மற்றும் திறன் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, சுமார் ரூ.13,375 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்து, தொடங்கி வைத்தார். 
  • ஐஐடி பிலாய், ஐஐடி திருப்பதி, ஐஐடி ஜம்மு, ஐஐடிடிஎம் கர்னூல், கான்பூரில் உள்ள இந்திய திறன் நிறுவனம்(ஐஐஎஸ்), மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் இரண்டு நிரந்தர வளாகங்கள் - தேவ்பிரயாக் (உத்தராகண்ட்) மற்றும் அகர்தலாவில் (திரிபுரா) ஆகிய முக்கிய கல்வி நிறுவனங்களின் வளாகங்கள் தொடங்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.
  • ஐஐஎம் ஜம்மு மற்றும் ஐஐஎம் புத்த கயா, ஐஐஎம் விசாகப்பட்டினம் ஆகிய மூன்று ஐஐஎம் வளாகங்களை பிரதமர் தொடங்கிவைத்தார். இதுதவிர நாடு முழுவதும் கேந்திர வித்யாலயாவின் 20 புதிய கட்டடங்களையும், 13 புதிய நவோதயா வித்யாலயா கட்டடங்களையும் தொடங்கிவைத்தார். 
  • நாடு முழுவதும் 5 கேந்திர வித்யாலயா வளாகங்கள், ஒரு நவோதயா வித்யாலயா வளாகம் மற்றும் நவோதயா வித்யாலயாவுக்கான 5 பன்னோக்கு அறைகள் ஆகியவற்றுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
  • ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு விரிவான, தரமான, முழுமையான மருத்துவ சேவைகளை வழங்கும் நடவடிக்கையாக, ஜம்முவின் விஜய்பூர் (சம்பா) பகுதியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தைப் பிரதமர் திறந்து வைத்தார். 
  • பானிஹால் - காரி - சம்பர் - சங்கல்தான் (48 கிலோமீட்டர்) மற்றும் புதிதாக மின்மயமாக்கப்பட்ட பாரமுல்லா - சிருங்கர் - பானிஹால் - சங்கல்தான் பிரிவு (185.66 கிலோமீட்டர்) இடையேயான புதிய ரயில் பாதை உட்பட ஜம்மு காஷ்மீரில் உள்ள பல்வேறு ரயில் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
  • காஷ்மீர் பள்ளத்தாக்கில் முதலாவது மின்சார ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சங்கல்தான் ரயில் நிலையம், பாரமுல்லா ரயில் நிலையம் இடையேயான ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • ஜம்முவையும், கத்ராவையும் இணைக்கும் தில்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச் சாலையின் இரண்டு தொகுப்புகள் (44.22 கிலோமீட்டர்) உள்ளிட்ட முக்கிய சாலைத் திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
  • ஜம்முவில் பொதுப் பயன்பாட்டு பெட்ரோலிய கிடங்கு வசதியை உருவாக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.  
  • புல்வாமா மாவட்டங்களில் ஒன்பது இடங்களில் 62 சாலை திட்டங்கள், 42 பாலங்கள், போக்குவரத்து தங்குமிடங்களை மேம்படுத்துவதற்கான திட்டம் - 2816 குடியிருப்புகள் ஆகியவற்றுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கு இந்தியா 1 மில்லியன் டாலர்கள் நிதியுதவி
  • இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகள் இணைந்து வறுமை ஒழிப்புத் திட்டத்தை முன்னெடுத்து, கடந்த 2004-ஆம் ஆண்டு உருவாக்கிய ஐ.பி.எஸ்ஏ நிதிக் குழுவிற்கு இந்தியா 1 மில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
  • இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா( ஐ.பி.எஸ்ஏ) இணைந்து உருவாக்கிய நிதிக் குழுவிற்கு மூன்று நாடுகளும், ஆண்டுதோறும் தலா 1 மில்லியன் டாலர்கள் நிதியுதவி அளித்து வருகின்றன. 
  • இந்த நிதியுதவி மூலம் ஆப்பிரிக்கா உள்ளடங்கிய 37 நாடுகளில், சுத்தமான குடிநீர், உணவுப் பாதுகாப்பு, எய்ட்ஸ் நோய் பரவல் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
  • அந்த வகையில், வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கான இந்தியாவின் பங்களிப்பாக இதுவரை 18 மில்லியன் டாலர்கள் நிதியளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • சண்டிகர் மேயர் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆம் ஆத்மி சார்பாக குலதீப் குமார் போட்டியிட்டார்.
  • பாஜக சார்பில் மனோஜ் சோன்கர் போட்டியிட்டார். இதில், பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாகவும், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமாருக்கு ஆதரவாக பதிவான 20 வாக்குகளில் 8 வாக்குக்கள் செல்லாத வாக்குகள் என அறிவித்தார் தேர்தல் அதிகாரி அனில் மசிஹ். தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் வாக்கு சீட்டுகளை திருத்தும் வீடியோ வெளியாகி வைரலானது.
  • இதனை அடுத்து தேர்தல் முடிவுகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையானது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னர் விசாரணை செய்யப்பட்டது. இதில் ஆரம்பம் முதலே தேர்தல் அதிகாரிக்கு எதிரான கருத்துக்களை தான் நீதிபதிகள் கூறிவந்தனர்.
  • இன்று இதன் இறுதி கட்ட விசாரணையில், வீடியோ ஆதார பதிவில் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு பதிவான வாக்குகளை திருத்தம் செய்த தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் என்பதை உறுதிப்படுத்தினர். பின்னர் இந்த தேர்தல் வழக்கில் தேர்தல் அதிகாரி குற்றவாளி என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
  • மேலும், தேர்தலை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றியாளர் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டனர்.
ஜே.பி. நட்டா, எல். முருகன் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு
  • மாநிலங்களவைத் தோதலில் போட்டியிட ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, குஜராத்தில் இருந்து பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய பிரதேசத்தில் இருந்து மத்திய இணையமைச்சா் எல்.முருகன் ஆகியோா் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து இருந்தனர்.
  • பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, மாநிலங்களவைத் தோதலில் போட்டியிட குஜராத் மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் செய்தாா். 
  • மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் மாநிலங்களவை தோதலில் மத்திய பிரதேசத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தாா். மத்திய இணையமைச்சா் எல். முருகன் இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்டார்.
  • ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது.
  • இந்த நிலையில், இரண்டாவது முறையாக மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக மத்திய இணையமைச்சர் எல். முருகன் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார் மற்றும் குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக ஜே.பி. நட்டா இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel