15th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
அபுதாபியின் முதல் இந்து கோவிலைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்
- பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றிருந்தார். இதற்காக டெல்லியில் இருந்து நேற்று சிறப்பு விமானம் மூலம் பிரதமர் மோடி அமீரகம் சென்றடைந்தார். அங்கே அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
- அங்கு அபுதாபியின் முதல் இந்து கோவிலைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா என்ற அமைப்பால் இந்த கோவில் ஆனது கட்டப்பட்டது.
பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ.1756 கோடி முதலீட்டில் 300 மெகாவாட் பார்சிங்சார் சூரிய மின் உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்பதற்கும், கரியமில வாயு உமிழ்வை முற்றிலுமாக தவிர்ப்பதை நோக்கி முன்னேறுவதற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி 300 மெகாவாட் சூரிய மின்உற்பத்தி ஆலைக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
- நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள முன்னணி நவரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் மத்திய பொதுத்துறை நிறுவன திட்டத்தின் ஒரு பகுதியாக ராஜஸ்தானின் பிகானீர் மாவட்டத்தில் உள்ள பார்சிங்சரில் 300 மெகாவாட் சூரிய மின்சக்தித் திட்டத்தை நிறுவுகிறது.
- அரசு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். நாட்டில் 1 ஜிகாவாட் சூரியமின் உற்பத்தி திறன் மைல்கல்லை எட்டிய முதலாவது மத்திய பொதுத்துறை நிறுவனம் என்எல்சிஐஎல் ஆகும்.
- போட்டி ஏலம் மூலம் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை அறிமுகப்படுத்திய மத்திய பொதுத்துறை நிறுவன திட்டத்தின் இரண்டாம் கட்டம்-III-ல் நிறுவனம் 300 மெகாவாட் சூரிய சக்தி திட்ட திறனைப் பெற்றுள்ளது.
- உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பார்சிங்சர் அனல் மின் நிலையத்தின் மின் பரிமாற்ற வழிகள் மூலம் அனுப்பப்படும், இது ஆண்டுதோறும் சுமார் 750 மில்லியன் யூனிட் பசுமை மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வாழ்நாளில் கரியமில வாயு உமிழ்வில் சுமார் 18,000 டன் அளவிற்கு ஈடுசெய்கிறது.
- ராஜஸ்தான் உர்ஜா விகாஸ் நிகாம் நிறுவனத்துடன் அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.2.52 என்ற கட்டணத்தில் மின் பயன்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த திட்டம் 2024செப்டம்பர் மாதத்திற்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- இதன் மூலம் சுமார் 600 நபர்களுக்கு மறைமுகமாகவும், செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு கட்டத்தின் போது 100 பணியாளர்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டது.
- மேலும், இந்த திட்டம் ராஜஸ்தான் மாநிலம் அதன் புதுப்பிக்கத்தக்க கொள்முதல் கடமையை நிறைவேற்ற உதவும், அதே நேரத்தில் கரியமில வாயு உமிழ்வை தவிர்ப்பதற்கான நாட்டின் முயற்சிக்கு பங்களிக்கும்.
- கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இதன்படி பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.
- ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட வங்கி கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
- பொதுவாக ஒரு மாதத்தில் 10 நாட்களுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படும். எனினும் தேர்தல் காலத்தில் மட்டும் ஒரு மாதத்தில் 30 நாட்கள் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
- தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். ஒரு நபர், நிறுவனம் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கலாம்.
- இந்த பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது. 15 நாட்களுக்குள் பத்திரத்தை பணமாக மாற்ற வேண்டும்.
- இல்லையெனில் தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும். தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
- இந்த திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
- இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நீடித்தது. கடந்த ஆண்டு முதல் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்தது.
- தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது எனக் கூறி அவற்றை ரத்து செய்து உச்ச உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
- மேலும் தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். தேர்தல் பத்திர முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
- மேலும் அந்த உத்தரவில், "தேர்தல் பத்திர முறை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம். தற்போதைய விதிகளின்கீழ் தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமாக உள்ளது.
- தேர்தல் பத்திர முறை, தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அரசியல் சாசன பிரிவு 19(1) ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. தேர்தல் பத்திர முறை திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றால் அதனை ரத்து செய்யலாம்.
- கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்சிகளுக்கு நிதி தரும்போது அதற்கு கைமாறு எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளது. கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடைய தேர்தல் பத்திரங்களைத் தவிர வேறு வழிகள் உள்ளன.
- அரசிடம் கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என்பதை பல தருணங்களில் நீதிமன்றங்கள் சொல்லியுள்ளன. நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது.
- எனவே, தேர்தல் நன்கொடை அளிக்க வகை செய்த வருமான வரி திருத்தச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ திருத்தச் சட்டம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
- தேர்தல் பத்திர முறை தொடர்பான மற்ற சட்டத் திருத்த மசோதாக்களும் ரத்து செய்யப்படுகின்றன. தேர்தல் பத்திரம் சட்டம் மட்டுமின்றி, கம்பெனி சட்டத் திருத்த மசோதாவும் ரத்து செய்யப்படுகிறது.
- தேர்தல் பத்திர நிதி விவரங்களை வழங்காமல் இருப்பதற்கு உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை. 2019ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தோர் விவரங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும். தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களை மார்ச் 6க்குள் வழங்க வேண்டும்.
- அதேபோல், நன்கொடை கொடுத்தோர் குறித்த விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் ஏப்ரல் 13ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்" இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.