Type Here to Get Search Results !

12th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


12th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவாவில் ரூ. 7,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
  • மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவாவில் சுமார் ரூ.7,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 
  • இன்றைய இந்த வளர்ச்சித் திட்டங்கள் இப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு பயனளிக்கும். அப்பகுதியில் குடிநீர் விநியோகத்தை வலுப்படுத்தும். 
  • அதே நேரத்தில் மத்தியப் பிரதேசத்தில் சாலை, ரயில், மின்சாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கும் இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் ஊக்கமளிக்கும். 
  • குறிப்பாக பின்தங்கிய பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பெண் பயனாளிகளுக்கு ஆஹார் அனுதான் எனப்படும் ஊட்டச்சத்து மேம்பாட்டுக்கான மாதாந்திர தவணைத் தொகையைப் பிரதமர் வழங்கினார். 
  • ஸ்வாமித்வா திட்டத்தின் பயனாளிகளுக்கு 1.75 லட்சம் அதிகார் அபிலேக் எனப்படும் உரிமைப் பதிவுகளை அவர் வழங்கினார். பிரதமரின் முன்மாதிரி கிராமத் திட்டத்தின் (ஆதர்ஷ் கிராம திட்டம்) கீழ் 559 கிராமங்களுக்கு ரூ.55.9 கோடியை அவர் வழங்கினார்.
  • வளர்ச்சியின் பயன்கள் பழங்குடியின சமூகத்தினரைச் சென்றடைவதை உறுதி செய்வது மத்திய அரசின் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாகும். 
  • சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் பழங்குடியின சமுதாயத்தில் பெரும்பகுதியினர் அரசுத் திட்டப் பலன்களைப் பெற முடியவில்லை. 
  • இதன் அடிப்படையில், இந்தப் பிராந்தியத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு பயனளிக்கும் பல்வேறு திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
வேலைவாய்ப்பு விழாவில் அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாகப் பணியில் சேர்ந்தவர்களுக்குப் பணி நியமனக் கடிதங்களைப் பிரதமர் வழங்கினார்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். 
  • புதுதில்லியில் ஒருங்கிணைந்த வளாகமான "கர்மயோகி பவன்" கட்டடத்தின் முதல் கட்ட கட்டுமானப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். 
  • இந்த வளாகம் கர்மயோகி இயக்கத்தின் பல்வேறு துறைகளுக்கிடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும்.
மொரீஷியஸ் பிரதமருடனும் இலங்கை அதிபருடனும் இணைந்து யுபிஐ சேவைகளைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
  • இலங்கை அதிபர் திரு ரனில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜக்நாத் ஆகியோருடன் இணைந்து இலங்கை, மொரீஷியஸில் யுபிஐ சேவைகளையும், மொரீஷியஸில் ரூபே அட்டை சேவைகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
  • ஃபின்டெக் கண்டுபிடிப்பு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இந்தியா முன்னோடியாக உருவெடுத்துள்ளது. நமது வளர்ச்சி அனுபவங்களையும், புதிய கண்டுபிடிப்புகளையும் நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார். 
  • இலங்கை, மொரீஷியஸுடன் இந்தியாவின் வலுவான கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்பு, விரைவான, தடையற்ற, டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவம் அந்நாட்டு மக்களுக்குக் கிடைக்கும்.
  • இலங்கை, மொரீஷியஸுக்கு பயணிக்கும் இந்தியக் குடிமக்களுக்கும், இந்தியாவுக்குப் பயணிக்கும் மொரீஷியஸ் நாட்டினருக்கும் யுபிஐ சேவைகள் கிடைக்க இந்தத் தொடக்கம் உதவும். 
  • மொரீஷியஸில் ரூபே அட்டை சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம், மொரீஷியஸில் ரூபே முறையின் அடிப்படையில் மொரீஷியஸ் வங்கிகள் அட்டைகளை வழங்கவும், இந்தியா, மொரீஷியசில் ரூபே அட்டையைப் பயன்படுத்தவும் உதவும்.
யு19 உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா
  • வில்லோமூர் பார்க் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா யு19 அணி முதலில் பேட் செய்தது. சாம் கோன்ஸ்டாஸ் டக் அவுட்டானாலும், மற்றொரு தொடக்க வீரர் ஹாரி டிக்சன் 42 ரன், கேப்டன் ஹக் வெய்ப்ஜென் 48, ஹர்ஜஸ் சிங் 55, ஹிக்ஸ் 20, ஆலிவர் பீக் ஆட்டமிழக்காமல் 46 ரன் எடுத்தனர். 
  • ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன் குவித்தது. இந்தியா யு19 பந்துவீச்சில் ராஜ் லிம்பானி 3, நமன் திவாரி 2, சவுமி பாண்டே, முஷீர் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
  • இதையடுத்து, 50 ஓவரில் 254 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி இந்தியா பியர்ட்மேன், ராப் மேக்மில்லன் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் தோல்வியின் பிடியில் சிக்கியது. 
  • ஓரளவு தாக்குப்பிடித்த ஆதர்ஷ் சிங் 47 ரன் (77 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), முஷீர் கான் 22, முருகன் அபிஷேக் 42 ரன் (46 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), நமன் திவாரி 14* ரன் எடுக்க, சக இந்திய பேட்ஸ்மேன்கள் கை கொடுக்கத் தவறினர். 
  • இந்தியா யு19 அணி 43.5 ஓவரில் 174 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பியர்ட்மேன், மேக்மில்லன் தலா 3, விட்லர் 2, சார்லி, ஸ்ட்ரேகர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். 
  • ஆஸ்திரேலியா 4வது முறையாக இளைஞர் உலக கோப்பையை முத்தமிட்டது (1988, 2002, 2010, 2024). 5 முறை சாம்பியனான இந்தியா இம்முறை 2வது இடத்துடன் திருப்தி அடைந்தது.
ஸ்டிரான்ட்ஜா' சர்வதேச குத்துச்சண்டை 75வது சீசன்
  • பல்கேரியாவில் 'ஸ்டிரான்ட்ஜா' சர்வதேச குத்துச்சண்டை 75வது சீசன் நடந்தது. ஆண்களுக்கான 51 கிலோ பைனலில் இந்தியாவின் அமித் பங்கல், கஜகஸ்தானின் சஞ்சார் தாஷ்கன்பே மோதினர். 
  • அபாரமாக ஆடிய அமித் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.ஆண்களுக்கான 57 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் சச்சின், உஸ்பெகிஸ்தானின் ஷக்சோட் முசாபரோவ் மோதினர். 
  • இதில் சச்சின் 5-0 என வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றார். பெண்களுக்கான 50 கிலோ பிரிவு பைனலில் இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் நிகாத் ஜரீன், உஸ்பெகிஸ்தானின் சபினாவிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.
  • மற்ற எடைப்பிரிவு பைனலில் ஏமாற்றிய இந்தியாவின் அருந்ததி சவுத்தரி (66 கிலோ), பருன் சிங் ஷகோல்ஷெம் (48 கிலோ), ரஜத் (67 கிலோ) வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர்.இத்தொடரில் இந்தியாவுக்கு 2 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கம் கிடைத்தன. ஆகாஷ், நவீன் தலா ஒரு வெண்கலம் வென்றனர்.
பா்கூா் ஆராய்ச்சி மையத்துக்கு விருது
  • நாட்டு மாடுகளைக் காக்கும் விதமாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மூலமாக ஈரோடு மாவட்டம், அந்தியூா் வட்டம், பா்கூா் பகுதியில் பா்கூா் நாட்டு மாடு இனங்களைப் பாதுகாக்க தனி மையத்தை தமிழக அரசு கடந்த 2015-இல் அமைத்து செயல்படுத்தி வருகிறது.
  • 2012-ஆம் ஆண்டு கணக்கின்படி பா்கூா் நாட்டு மாடுகள் 14,154 இருந்த நிலையில், இந்த மையத்தின் செயல்பாட்டுக்குப் பிறகு 2019-ஆம் ஆண்டு கணக்கின்படி 42,300 பா்கூா் நாட்டு மாடுகள் கணக்கிடப்பட்டிருக்கின்றன. 
  • மேலும் இந்த மையத்தில் 170 மாடுகள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இவை இனப்பெருக்கத்திற்காகவும், பால் மற்றும் பால் பொருள்களுக்காகவும், இன பாதுகாப்புக்காகவும் வளா்க்கப்படுகின்றன.
  • இதுபோன்று 3 இடங்களில் மொத்தம் 59 ஏக்கா் பரப்பளவில் பண்ணை அமைக்கப்பட்டு பா்கூா் நாட்டு மாடுகள் பராமரிக்கப்படுகின்றன. இங்கு பராமரிக்கப்படும் மாடுகள் விவசாயிகளிடமும், நாட்டு மாடு கேட்பவா்களிடமும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
  • இதை அங்கீகரிக்கும் வகையில் புதுதில்லியில் உள்ள தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாட்டு விலங்கின மரபு வாரியம் ஆகியவை இணைந்து இன பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், நாட்டு மாடு இனங்களைப் பாதுகாத்து இனப்பெருக்கத்தை தூண்டியதற்காகவும் இன பாதுகாப்பு விருது 2023-ஐ பா்கூா் நாட்டு மாடு இன ஆராய்ச்சி மையத்துக்கு வழங்கி உள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel