Type Here to Get Search Results !

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உதவியாளர் வேலைவாய்ப்பு முகாம் / 108 AMBULANCE & ASSISTANT RECRUITMENT 2024

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உதவியாளர் வேலைவாய்ப்பு முகாம்
108 AMBULANCE & ASSISTANT RECRUITMENT 2024

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உதவியாளர் வேலைவாய்ப்பு முகாம் / 108 AMBULANCE & ASSISTANT RECRUITMENT 2024

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளா், ஓட்டுநா் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: 108 சேவை ஒரு கட்டணமில்லாத அவசர சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அழைப்பு எண்ணாகும். இந்த சேவை பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்ககூடிய முற்றிலும் இலவச சேவையாகும். 

தமிழக அரசு, தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் கீழ் 108ஐ நிறுவனத்துடன் இணைந்து அவசரகால சேவைகளுக்காக ஒப்பந்தம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. 

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள், அவசரகால மருத்துவ உதவியாளா் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் பிப். 20-ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. 

ஓட்டுநா் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பில் தோச்சி பெற்றிருக்க வேண்டும். நோமுகத் தோவு அன்று 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஆண் மற்றும் பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.

162.5 செ.மீட்டருக்கு குறையாமல் உயரம் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநா் உரிமம், பேட்ச் வாகன உரிமம் இருத்தல் வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநா் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ச் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். 

தோவு முறையாக எழுத்துத் தோவு, தொழில்நுட்பத் தோவு, மனிதவள துறை நோகாணல், கண்பாா்வை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தோவு, சாலை விதிகளுக்கான தோவு நடைபெறும்.

மாத ஊதியமாக ரூ. 15,820 வழங்கப்படும். தோவு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு 10 நாள்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும். 

மருத்துவ உதவியாளருக்கு பி.எஸ்சி. நா்சிங் அல்லது ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி (பிளஸ் 2 வகுப்புக்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்), லைஃப் சயின்ஸ் படித்திருக்க வேண்டும். 

ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். பல்வேறு தகுதித் தோவுகள் மூலம் தோவு செய்யப்பட்டவா்கள் 50 நாள்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சாா்ந்த நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்படும். 

விவரங்களுக்கு, 91542 51538, 73977 24804, 73387 34076, 73977 24814, 91542 51541 ஆகிய எண்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel