Type Here to Get Search Results !

7th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


7th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு 2024
  • தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜனவரி 6 மற்றும் 7 ஆம் தேதி சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடக்கிறது.இந்த மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
  • இந்நிலையில் தொழில்துறை செயலர் அருண் ராய் கூறுகையில், மாநாட்டில் 5.5 கோடி ரூபாய் முதலீடு ஈர்ப்பது என்ற இலக்கு முதல் நாளிலேயே எட்டப்பட்டது. முதல் நாளில் மட்டும் 100க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன என தெரிவித்துள்ளார்.
  • சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. 2 நாட்கள் நடக்கும் மாநாடு ஆகும்.
  • இன்று பல முக்கிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. அதில், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் காஞ்சிபுரத்தில் தொழிற்சாலை அமைக்க ₹6,180 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • தூத்துக்குடி, திருநெல்வேலியில் JSW நிறுவனம் ₹12,000 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து செய்யப்ப்பட்டு உள்ளது.
  • ஓசூரில் உள்ள ஐபோன் உதிரி பாக ஆலையில் விரிவாக்கம் செய்ய டாடா நிறுவனம் ரூ.12,800 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. . கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ₹12,082 கோடி மதிப்பில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவ உள்ளது
  • தூத்துக்குடியில் ₹16,000 கோடி முதலீட்டில் மின்சார வாகனம் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்க, வியட்நாமைச் சேர்ந்த VinFast நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 3,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு. இந்த ஆண்டிலேயே உற்பத்தி ஆலையின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளன
  • அமெரிக்காவின் First Solar நிறுவனம் - ₹5600 கோடி முதலீடு செய்ய உள்ளது. சென்னையில் பெகட்ரான் - ₹1000 கோடி முதலீடு (8000 பேருக்கு வேலைவாய்ப்பு) செய்ய உள்ளது. சென்னையில் மிட்சுபிசி எலக்ட்ரானிக்ஸ் - ₹200 கோடி முதலீடு செய்ய உள்ளது.
  • தமிழ்நாட்டில் டிவிஎஸ் நிறுவனம் கூடுதலாக ரூ.5,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. தமிழ்நாட்டில் ஹூண்டாய் நிறுவனம் கூடுதலாக ரூ.6,000 கோடி முதலீடு செய்ய உள்ளது;.
  • சென்னையில் நடக்கும் தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாட்டில் கோத்ரெஜ் நிறுவனம் தொடங்க இருக்கும் light house project நிறுவனத்துக்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையொப்பம் ஆனது.
  • இந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 5% பேர்கள் LGBTQ & Differently Abled ஆக இருக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. முதலீட்டாளர் மாநாட்டில் கோத்ரெஜ் நிறுவனம் தொடங்க இருக்கும் light house project (Global FMCG) நிறுவனத்துக்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையொப்பம் ஆனது.
சூரியனை ஆராய விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் சாதனை - ஒளிவட்ட பாதையில் நிலைநிறுத்தம்
  • இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நிறுவனமான இஸ்ரோ கடந்த ஆண்டு சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி நிலவில் விண்கலனை தரையிறக்கி சாதனை படைத்தது. 
  • அடுத்த கட்டமாக சூரியனை ஆராயும் ஆதித்யா எல்-1 திட்டம் மற்றும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.
  • அதில் தற்போது ககன்யான் திட்டத்தில் முதல் கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 4 கட்ட சோதனைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel