Type Here to Get Search Results !

5th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


5th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

அகில இந்திய காவல்துறை தலைமை இயக்குநர்கள் (டிஜிபிக்கள்) / காவல்துறைத் தலைவர்கள் (ஐஜிக்கள்) மாநாடு
  • ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சர்வதேச மையத்தில் நடைபெறும் 2023-ம் ஆண்டுக்கான அகில இந்திய காவல்துறை தலைமை இயக்குநர்கள் (டிஜிபிக்கள்) / காவல்துறைத் தலைவர்கள் (ஐஜிக்கள்) மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார்.
  • ஜனவரி 5 முதல் 7 வரை நடைபெறும் இந்த மூன்று நாள் மாநாட்டில் இணையவெளிக் குற்றங்கள், காவல்துறையில் தொழில்நுட்பம், பயங்கரவாத எதிர்ப்பில் நிலவும் சவால்கள், இடதுசாரி தீவிரவாதம், சிறைச் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு காவல்துறை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும். மாநாட்டின் மற்றொரு முக்கிய அம்சமாக புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதற்கான செயல்திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
  • மேலும், செயற்கை நுண்ணறிவு, டீப்ஃபேக் எனும் உருமாற்றம் செய்தல் போன்ற புதிய தொழில்நுட்பங்களால் ஏற்படும் சவால்கள் மற்றும் அவற்றைக் கையாள்வதற்கான வழிமுறைகள் போன்ற காவல்துறை மற்றும் பாதுகாப்பில் எதிர்காலக் கருப்பொருள்கள் குறித்தும் இந்த மாநாடு விவாதிக்கும். 
  • உறுதியான நடவடிக்கை அம்சங்களை அடையாளம் காணவும், அவற்றின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் இந்த மாநாடு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் பிரதமரின் முன் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
  • அடையாளம் காணப்பட்ட கருப்பொருள்கள் குறித்து மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விரிவான கலந்துரையாடல்களின் உச்சகட்டமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. 
  • மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சிறந்த நடைமுறைகள் ஒவ்வொரு கருப்பொருளின் கீழும் மாநாட்டில் முன்வைக்கப்படும். இதனால் மாநிலங்கள் பரஸ்பரம் கற்றுக்கொள்ளவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த 2014ஆம் ஆண்டு முதல், காவல்துறை தலைமை இயக்குநர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி அதிக ஆர்வம் காட்டி வருகிறார். மாநாட்டின் அனைத்து முக்கிய அமர்வுகளிலும் அவர் பங்கேற்கிறார். அனைத்து உள்ளீடுகளையும் பொறுமையாகக் கேட்பது மட்டுமின்றி, புதிய யோசனைகள் வருவதற்காக சுதந்திரமான விவாதங்களை பிரதமர் மோடி ஊக்குவிக்கிறார். 
  • இந்த ஆண்டு மாநாட்டில் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு குறித்த கருப்பொருள் விவாதங்களுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டை பாதிக்கும் முக்கிய காவல்துறை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்சனைகள் குறித்து மூத்தக் காவல்துறை அதிகாரிகள் தங்கள் கருத்துக்களையும், பரிந்துரைகளையும் பிரதமரிடம் பகிர்ந்து கொள்ளவும் இதில் வாய்ப்பு கிடைக்கும்.
  • 2014ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் வருடாந்திர டிஜிபிக்கள் மாநாடுகளை ஏற்பாடு செய்வதையும் பிரதமர் ஊக்குவித்து வருகிறார். 
  • இந்த மாநாடு 2014ஆம் ஆண்டு கவுகாத்தியில் நடைபெற்றது. கடந்த 2023 ஆம் ஆண்டில் டெல்லியின் புசாவில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மாநாடு நடத்தப்படுகிறது.
  • இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உள்துறை இணை அமைச்சர், கேபினட் செயலாளர், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் டிஜிபி மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படைகள் மற்றும் மத்திய போலீஸ் அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
2024ம் ஆண்டிலும் வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா - ஐ.நா., அறிக்கை
  • 2024ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும். இதுவே 2023ம் ஆண்டு 6.3 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டில் உள்நாட்டு தேவை, உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளின் வளர்ச்சி காரணமாக இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெறும். 
  • 2024லும் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா திகழும்.அரசின் உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளால் உந்தப்பட்டு 2023ல் இந்தியா வலுவான முதலீட்டை பெற்றது. 
  • வளர்ந்த நாடுகளை காட்டிலும் வளரும் நாடுகளில் முதலீடு சிறப்பானதாக இருந்தது. 2023ல் தெற்கு ஆசியாவில் குறிப்பாக இந்தியாவில் முதலீடு வலுவாக இருந்தது. இவ்வாறு ஐ.நா.,வின் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
துவரம் பருப்பு கொள்முதல் இணையதளம் - அமித் ஷா தொடங்கி வைத்தாா்
  • துவரம் பருப்பு கொள்முதலுக்கான இணையதளத்தை மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா தொடங்கி வைத்தாா்.
  • இந்த இணைய தளத்தைப் பயன்படுத்தி இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு, இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பிடம் துவரம் பருப்பை விவசாயிகள் விற்பனை செய்ய முடியும். இதன் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலை அல்லது சந்தை விலை விவசாயிகளுக்கு கிடைக்கும்.
அயோத்தி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அயோத்தி விமானநிலையத்தை சர்வதேச விமானநிலையமாக மாற்றி, மகரிஷி வால்மீகி சர்வதேச விமானநிலையம், அயோத்திதாம் என்று அறிவிப்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருவதற்கு வழிவகை செய்யும் வகையிலும், முதன்மையான அயோத்தியின் பொருளாதார வளத்தை உணர்ந்தும், சர்வதேச ஆன்மீகத் தலம் என்ற அதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டும் அயோத்தி விமானநிலையம் சர்வதேச அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்படுகிறது.
  • ராமாயண காவியத்தை இயற்றிய மகரிஷி வால்மீகிக்கு புகழ்சேர்க்கும் வகையிலும், விமானநிலையத்தின் அடையாளத்துக்கு கலாசாரப் புகழ் அளிக்கும் வகையிலும் இந்த விமான நிலையத்துக்கு மகரிஷி வால்மீகி சர்வதேச விமானநிலையம், அயோத்திதாம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஹைட்ரோகார்பன் துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் கயானா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஹைட்ரோ கார்பன் துறையில் பரஸ்பரம் ஒத்துழைப்பு நல்குவது தொடர்பாக மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மற்றும் கயானா குடியரசின் இயற்கை வள அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக, கயானாவில் இருந்து கச்சா எண்ணெயைப் பெறுதல், கயானாவின் ஆய்வு மற்றும் உற்பத்தித் துறையில் இந்திய நிறுவனங்களின் பங்கேற்பு, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, திறன் மேம்பாடு, இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்துதல், இயற்கை எரிவாயு துறையில் ஒத்துழைப்பு, கயானாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் ஒழுங்குமுறை கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதில் ஒத்துழைப்பு உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் துறையின் முழுமையான அம்சங்களை உள்ளடக்கியது. 
  • உயிரி எரிபொருள் உள்ளிட்ட தூய்மையான எரிசக்தி மற்றும் சூரிய சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு ஆகியவையும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கியுள்ளது.
கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத நிலையை அடைய இந்திய ரயில்வேக்கு உதவி செய்ய சர்வதேச மேம்பாட்டு இந்தியாவுக்கான அமெரிக்கா - இந்தியா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2030-ம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத நிலையை அடைய இந்திய ரயில்வேக்கு உதவி செய்ய 2023 ஜூன் 14 அன்று இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே சர்வதேச வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து தெரிவிக்கப்பட்டது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் , ரயில்வே துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கு இந்திய ரயில்வேக்கு ஒரு தளத்தை வழங்குகிறது. 
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பயன்பாட்டு நவீனமயமாக்கல், மேம்பட்ட எரிசக்தி தீர்வுகள் மற்றும் அமைப்புகள், பிராந்திய எரிசக்தி மற்றும் சந்தை ஒருங்கிணைப்பு, தனியார் துறை பங்கேற்பு மற்றும் ஈடுபாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற குறிப்பிட்ட தொழில்நுட்பப் பகுதிகளை மையமாகக் கொண்ட பயிற்சி, ஆற்றல் செயல்திறன் மற்றும் அறிவுப் பகிர்வுக்கான பிற தொடர்புகள், கருத்தரங்குகள் / பட்டறைகளை எளிதாக்குகிறது. 
புவி அறிவியல் அமைச்சகத்தின் "பிரித்வி விஞ்ஞான் (பிரித்வி)" திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2021-26ஆம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ.4,797 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்காக புவி அறிவியல் அமைச்சகத்தின் "பிரித்வி விஞ்ஞான்" என்ற விரிவான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • இத்திட்டத்தில் "வளிமண்டலம் மற்றும் காலநிலை ஆராய்ச்சி கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் சேவைகளுக்கான முறைகள்", "பெருங்கடல் சேவைகள், மாதிரி செயல்முறை, வளங்கள் மற்றும் தொழில்நுட்பம்", "துருவ அறிவியல் மற்றும் கிரையோஸ்பியர் ஆராய்ச்சி", "பூகம்பவியல் மற்றும் புவி அறிவியல்", "ஆராய்ச்சி, கல்வி, பயிற்சி மற்றும் மக்கள் தொடர்பு" ஆகிய ஐந்து துணைத் திட்டங்கள் அடங்கும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு, மொரீஷியஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கவுன்சில் இடையே சிறிய செயற்கைக்கோளை கூட்டாக உருவாக்கும் ஒத்துழைப்புக்கு கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 
  • மொரீஷியஸ் குடியரசின் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு மற்றும் புத்தாக்க அமைச்சகத்தின் கீழ் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு மற்றும் மொரீஷியஸ் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கவுன்சில் இடையே நவம்பர் 01, 2023 அன்று மொரீஷியஸின் போர்ட் லூயிஸில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தெரிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் சிறிய செயற்கைக்கோளை கூட்டாக உருவாக்குவதற்கான ஒத்துழைப்பு தொடர்பானது.
பசுமை முயற்சிகளை ஊக்குவிக்கவும் எளிதாக்கவும் இந்திய ரயில்வே மற்றும் சிஐஐ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 
  • எரிசக்தி மற்றும் தண்ணீர் பயன்பாட்டைக் குறைக்க இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் (சி.ஐ.ஐ) இந்திய ரயில்வே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்திய ரயில்வே மற்றும் சி.ஐ.ஐ தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் புதுப்பித்துள்ளன.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2024, ஜனவரி 4, அன்று ரயில்வே வாரியத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி திரு சைலேந்திர சிங், சிஐஐ-யின் துணை தலைமை இயக்குநர் திருமதி சீமா அரோரா ஆகியோரால் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டது. 
  • ரயில்வே வாரியத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகார்ரியுமான திருமதி ஜெயா வர்மா சின்ஹா, வாரிய உறுப்பினர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
  • இந்திய ரயில்வே, இந்தியாவில் போக்குவரத்துத் துறையின் முக்கிய பங்களிப்பு செய்வதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் பொறுப்பைப் பகிர்ந்து கொண்டது. இந்திய ரயில்வே, 2030 ஆம் ஆண்டிற்குள் "நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு" இலக்கை நிர்ணயித்துள்ளது. 
  • இந்திய ரயில்வேயில் கணிசமான எண்ணிக்கையிலான ரயில் நிலையங்கள், உற்பத்திப் பிரிவுகள், பெரிய பட்டறைகள் மற்றும் பிற நிறுவனங்கள் உள்ளன, இதற்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கார்பன் தடங்களைக் குறைக்கும் நோக்கத்துடன் பல்வேறு பசுமை முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
  • இந்திய ரயில்வேயில் பசுமை முன்முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும் எளிதாக்குவதற்கும் சிஐஐ ஜூலை 2016 முதல் இந்திய ரயில்வேயுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. 
  • முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2016 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டது. அது காலாவதியான பின்னர் மேலும் 03 ஆண்டுகளுக்கு 2019 ஆம் ஆண்டில் மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேற்குறிப்பிட்ட 02 புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் கீழ் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.     
  • உற்பத்தி வசதிகள் மற்றும் ரயில்வே பணிமனைகளில் ஆற்றல் செயல்திறன் முன்முயற்சியின் விளைவாக 210 இலட்சம் கிலோவாட் எரிசக்தி சேமிப்பும், ரூ.16 கோடி பண சேமிப்பும் ஏற்பட்டதுடன், சுமார் 18,000 டன் கரியமில வாயு வெளியேற்றம் கணிசமாகக் குறைந்தது.
  • சுமார் 40 நிலையங்கள் பசுமை சான்றிதழைப் பெற்றுள்ளன. ஆண்டுக்கு 22 மில்லியன் கிலோவாட் ஆற்றலையும் 3 பில்லியன் லிட்டர் தண்ணீரையும் சேமிப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை வெளிப்படுத்தியுள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel