Type Here to Get Search Results !

4th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


4th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தென்னை நார் கொள்கை 2024யை வெளியிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் போட்டிகளை உணர்ந்தும், தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திடவும் தயாரிக்கப்பட்டுள்ள "தென்னை நார் கொள்கை 2024"-யை வெளியிட்டார்.
  • தென்னை நார் கொள்கையானது, தென்னை நார் தொழில் நிறுவனங்களின் தேவைகளை நிறைவேற்றுவது, அந்நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதி செய்வது மற்றும் தொழிற் நிறுவன சங்கங்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதன்படி நடவடிக்கை மேற்கொண்டு இத்துறையின் வளர்ச்சியில் முதலீடு செய்த அனைத்து பங்குதாரர்களையும் பயன்பெறச் செய்வது ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். 
  • இக்கூட்டு அணுகுமுறையானது, இத்தொழில்துறையின் தேவைகளை நிறைவேற்றுவது மற்றும் அதன் முன்னேற்ற இலக்கை அடைவதற்கான தீர்வுகளை வழங்குவதையும் உறுதி செய்கிறது.
ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் செய்ய ரூ.802 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டது
  • ஜுபிடர் வாகனங்கள் நிறுவனத்துடன் 473 கோடி ரூபாய் செலவில் க்யூடி-697 போகி ஓபன் மிலிட்டரி (பிஓஎம்) வாகனங்கள் வாங்குவதற்கும், பை (இந்தியன்-ஐடிடிஎம்) பிரிவின் கீழ் 329 கோடி ரூபாய் செலவில் க்யூட்டி-56 மெக்கானிக்கல் மைன்ஃபீல்டு மார்க்கிங் உபகரணம் – 2 (எம்எம்எம்இ) கொள்முதல் செய்வதற்கும் பாதுகாப்பு அமைச்சகம் புதுதில்லியில் 2024, ஜனவரி 4 அன்று இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. 
  • பிஓஎம் வாகனங்கள், எம்எம்எம்இ ஆகியவை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்பட்ட உபகரணங்கள் மற்றும் துணை அமைப்புடன் தயாரிக்கப்படும்.
  • இது உள்நாட்டு உற்பத்தி, பாதுகாப்பு உற்பத்தியில் தனியார் துறையின் பங்கேற்பை ஊக்குவித்து, தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும்.
  • ஆராய்ச்சி வடிவமைப்பு தரநிலை அமைப்பு (ஆர்.டி.எஸ்.ஓ) வடிவமைத்த போகி ஓபன் மிலிட்டரி (பி.ஓ.எம்) வாகனங்கள், ராணுவ குழுக்களை அணிதிரட்டுவதற்கு இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்படும் சிறப்பு வாகனங்கள் ஆகும். 
  • இலகுரக வாகனங்கள், பீரங்கி துப்பாக்கிகள், பி.எம்.பி.க்கள், பொறியியல் உபகரணங்கள் போன்றவற்றை அவற்றின் இடங்களிலிருந்து செயல்பாட்டு பகுதிகளுக்கு கொண்டு செல்ல பிஒஎம் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel