டி.என்.பி.எஸ்.சி 'குரூப் - 4' தேர்வு 2024 அறிவிப்பு வெளியானது / TNPSC GROUP 4 EXAM 2024 NOTIFICATION OUT
TNPSCSHOUTERSJanuary 30, 2024
0
தமிழக அரசு துறைகளில், குரூப் - 4 பதவிகளில் காலியிடங்களை நிரப்பும் தேர்வு, இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்த காலகட்டத்தில் 2,000 காலியிடங்கள், ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வின் 'ரிசர்வ்' பட்டியல் அடிப்படையில் நிரப்பப்பட்டன.
இதையடுத்து, 6,244 காலியிடங்களை நிரப்ப, அரசின் பல்வேறு துறைகளில் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன. மொத்த காலியிடங்களில் 81 இடங்கள் விளையாட்டுப் பிரிவில் ஒதுக்கப்படும்.
மீதமுள்ள 6,244 காலியிடங்கள் மட்டும் போட்டி தேர்வு வழியே நிரப்பப்படும். இதற்கான குரூப் - 4 தேர்வு, ஜூன் 9ம் தேதி நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கான விண்ணப்ப பதிவு இன்று துவங்குகிறது; ஏப்., 28 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
தேர்வின் முடிவுகள் அக்டோபரில் வெளியாகும். நவம்பரில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த தேர்வுக்கு 25 லட்சம் பேர் பதிவு செய்ய வாய்ப்புள்ளது.
காலியிடங்கள்
குரூப் - 4 தேர்வில் 5,255 இடங்கள் நிரப்பப்படும் என, ஆண்டு நியமன உத்தேச பட்டியலில் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதை விட அதிகமான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் வீட்டு வசதி வாரிய பணிகளுக்கு, முதல்முறையாக டி.என்.பி.எஸ்.சி., வழியே, இளநிலை உதவியாளர், வரி தண்டலர், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் இளநிலை உதவியாளர், என நிரப்பப்பட உள்ளன.
மற்ற துறைகளில், கிராம நிர்வாக அலுவலரான வி.ஏ.ஓ., 108; இளநிலை உதவியாளர், 2422; வரி வசூலிப்பவர், 50. தட்டச்சர், 2,108; சுருக்கெழுத்து தட்டச்சர் மூன்றாம் நிலையில், 1,024; ஸ்டோர் கீப்பர், 1 என, மொத்தம், 6,244 இடங்களுக்கு போட்டி தேர்வு நடத்தப்பட உள்ளது.
தேர்வில் எந்தவித முறைகேடுகளும் நடக்காத அளவுக்கு, தேவையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அதன்பின், குறைந்த எண்ணிக்கையிலான தேர்வர்கள் உள்ள தேர்வுகள், கணினி வழி தேர்வாக நடத்த பரிசீலிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஜூன் 9ம் தேதி காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை, மூன்று மணி நேரம் தேர்வு நடத்தப்படும். முதல் 100 கேள்விகள் சரியான பதிலை தேர்வு செய்யும் வகையில், 'மல்டிபிள் சாய்ஸ்' வகையாக இருக்கும்.
இந்த கேள்விகள் தமிழில் மட்டுமே இடம் பெறும். அடுத்த பிரிவில், 75 கேள்விகள், பொதுப்பாட வகையிலும்; 25 கேள்விகள், திறனறிதல் வகையை சேர்ந்ததாகவும் இருக்கும்.
இரண்டாவது பிரிவில், ஆங்கிலம் மற்றும் தமிழில் கேள்விகள் இடம் பெறும். மொத்தம் 200 கேள்விகளும் ஒரே வினாத்தாளில் இடம் பெறும்.
இதற்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.தமிழ் கட்டாயம் என்ற சட்டத்தின் அடிப்படையில், தமிழ் கேள்விகள் அடங்கிய 'அ' பிரிவில், மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு, 40 சதவீதமான 60 மதிப்பெண் பெற்றால் மட்டுமே, தேர்வர்களின் அடுத்த வினா பிரிவுக்கான விடைகள் மதிப்பீடு செய்யப்படும்.
தமிழ் கட்டாய தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, தமிழ் உட்பட அனைத்து பிரிவு கேள்விகளுக்குமான மொத்த மதிப்பெண்கள், தரவரிசை பட்டியலுக்கு கணக்கில் எடுக்கப்படும். இந்த தேர்வில் மொத்தம், 300க்கு 90 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சியாகும்.
தேர்ச்சி பெற்றவர்களில் அதிகபட்ச மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு, அரசின் இட ஒதுக்கீடு விதிகளின்படி, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, பணி நியமனம் வழங்கப்படும்.