27th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - 43 வயதில் சாம்பியன் பட்டம் வென்ற ரோஹன் போபண்ணா
- ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி - இத்தாலியின் சைமன் பொலேலி, ஆண்ட்ரியா வவாசூரி ஜோடியுடன் மோதியது.
- இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-0), 7-5 என்ற செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இரட்டையர் பிரிவில் 43 வயதாகும் போபண்ணா முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றுள்ளார். அதிக வயதில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றவர் ரோஹன் போபண்ணா என்பது குறிப்பிடத்தக்கது.
- அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார்.
- 75 வது குடியரசு தின கொண்டாட்டங்களை தொடர்ந்து நடக்கும் இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், "நமது அரசியலமைப்பின் 75 வது ஆண்டைக் குறிக்கும் வகையிலான 75 வது குடியரசு தின விழா முடிந்த அடுத்த நாளே நடைபெறும் இந்த மாநாடு கூடுதல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது" என அரசியலமைப்பு சபை உறுப்பினர்களுக்கு தனது மரியாதையை வெளிப்படுத்தினார்.