Type Here to Get Search Results !

பிசிசிஐ விருதுகள் 2019 - 2023 / BCCI AWARDS 2019 - 2023

  • பிசிசிஐ விருதுகள் 2019 - 2023 / BCCI AWARDS 2019 - 2023: கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு கோவிட் தொற்று காரணத்தால் இந்த விருதுகள் வழங்கும் விழா நடத்தப்படாமல் தடைபட்டநிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 2019-20, 2020-21, 2021-22, 2022-23 முதலிய ஆண்டுகளில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா தற்போது நடைபெற்றது.
  • ஹைதராபாத் நகரில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வில் இந்திய கிரிக்கெட் அணியின் இந்நாள், முன்னாள் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். 
  • அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான 'சி.கே.நாயுடு' விருது, ஆண்டின் சிறந்த வீரருக்கான 'பாலி உம்ரிகர்' விருது, அதிக ரன்கள், விக்கெட்டுகள் எடுத்தவருக்கான "திலீப் சர்தேசாய்" விருது, சிறந்த அறிமுக வீரருக்கான விருது என பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
  • அதன்படி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் ரவி சாஸ்திரி மற்றும் ஃபரூக் இன்ஜினியர் இருவருக்கும் 'சி.கே.நாயுடு' வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. 
  • மேலும், 2019-20ம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான 'பாலி உம்ரிகர்' விருது முகமது ஷமிக்கும், 2020-21ம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான 'பாலி உம்ரிகர்' விருது, தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும், 2021-22ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான 'பாலி உம்ரிகர்' விருது ஜஸ்பிரித் பும்ராவுக்கும், 2022-23ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான 'பாலி உம்ரிகர்' விருது சுப்மன் கில்லுக்கும் வழங்கப்பட்டன.
  • தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், 'பாலி உம்ரிகர்' மற்றும் "திலீப் சர்தேசாய்" என்ற இரண்டு விருதுகளை தட்டிச்சென்றார்.

பாலி உம்ரிகர் விருது

  • பிசிசிஐ விருதுகள் 2019 - 2023 / BCCI AWARDS 2019 - 2023: ஒவ்வொரு ஆண்டிலும் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வழங்கப்படும் விருதானது "பாலி உம்ரிகர் விருது". இது பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு அடுத்தப்படியான இரண்டாவது மிகப்பெரிய விருதாகும். 
  • அதன்படி 2020-2021ம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான 'பாலி உம்ரிகர்' விருது, தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது. 2021ம் ஆண்டில் 18 போட்டிகளில் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் 54 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, 3 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

திலீப் சர்தேசாய் விருது 

  • பிசிசிஐ விருதுகள் 2019 - 2023 / BCCI AWARDS 2019 - 2023: ஒரு தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் என சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வழங்கப்படும் திலீப் சர்தேசாய் விருதை அஸ்வின் 3வது முறையாக பெறுகிறார். 
  • 2022-2023ல் வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த அஸ்வின், ஒரே போட்டியில் 5 மற்றும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 2 போட்டிகள் கொண்ட தொடரில் மொத்தமாக 15 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

ENGLISH

  • BCCI AWARDS 2019 - 2023: After last year 2019 due to covid infection, this awards ceremony was not held, but after four years, the awards ceremony was held for the best players in the years 2019-20, 2020-21, 2021-22, 2022-23 etc.
  • Many former players, players and coaches of the Indian cricket team participated in this award ceremony held in Hyderabad. He was honored with various awards like 'CK Naidu' Award for Lifetime Achievement, 'Pali Umrikar' Award for Player of the Year, 'Dilip Sardesai' Award for Most Runs and Wickets, and Best Debutant Award.
  • Accordingly, former Indian cricket team players Ravi Shastri and Farooq Engineer were both honored with the 'CK Naidu' Lifetime Achievement Award. 
  • Also, the 'Bali Umrikar' award for the year 2019-20 went to Mohammed Shami, the 'Bali Umrigar' award for the year 2020-21 went to Tamil Nadu's Ravichandran Ashwin, the 'Bali Umrigar' award for the year 2021-22 went to Jasprit Bumrah, and for 2022-23 Subman Gill was also awarded the 'Bali Umrikar' Player of the Year Award.
  • Tamil Nadu player Ravichandran Ashwin bagged two awards, 'Pali Umrikar' and 'Dilip Sardesai'.

Pali Umrikar Award

  • BCCI AWARDS 2019 - 2023: "Pali Umrikar Award" is an award given to the best performing players every year. It is the second highest award after BCCI's Lifetime Achievement Award. 
  • Accordingly, the 'Bali Umrikar' award for the best player of the year 2020-2021 was given to Tamil Nadu player Ravichandran Ashwin. In 2021, Ravichandran Ashwin, who played 18 matches, captured 54 wickets and took 5 wickets 3 times.

Dilip Sardesai Award

  • BCCI AWARDS 2019 - 2023: Ashwin is the 3rd recipient of the Dilip Sardesai Award given to the player with the most runs and most wickets in a series. 
  • Ashwin, who was part of the Indian Test team that toured the West Indies in 2022-2023, was amazing by taking 5 and 7 wickets in the same match. He had taken a total of 15 wickets in the 2-match series.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel