Type Here to Get Search Results !

23rd JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


23rd JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
 • தொழில் துறையின் சார்பில், பல்வேறு புதிய நிறுவனங்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டன. ஏற்கெனவே, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6 லட்சம் கோடிக்கு அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. 
 • சமூக நலத்துறையைப் பொறுத்தவரையில், ஏற்கெனவே மாநில மகளிர் வரைவுக் கொள்கை வெளியிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், இன்று நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 • இந்த மாநில மகளிர் கொள்கை என்பது பெண்கள் புகார் அளித்தால் 24 மணி நேரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு தலைமைப் பொறுப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். 
 • அரசியலுக்கு வர விரும்பும் பெண்களுக்கு 6 மாத கால பயிற்சி என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்களைக் கொண்டது. இந்தக் கொள்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் வெளியிடவுள்ளார்.
 • கலால் துறை சார்ந்த முக்கிய முடிவுகளும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்தல், டாஸ்மாக் மதுபானங்கள் மீதான வரியை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 
 • மேலும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டசபைக் கூட்டத்தொடருக்கு ஆயத்தமாவது, ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசுடன் BIG TECH நிறுவனம் ஒப்பந்தம்
 • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று (23.1.2024) தலைமைச் செயலகத்தில், அமெரிக்காவைச்சேர்ந்த கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் (Corning International Corporation) மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் லிமிடெட் (Optiemus Infracom Limited) ஆகிய நிறுவனங்களின் கூட்டுநிறுவனமான பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் பிரைவேட் (Bharat Innovative Glass Technologies Private Limited - BIG TECH) நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட்- பிள்ளைப்பாக்கம் தொழிற் பூங்காவில், 1003 கோடி ரூபாய் முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், உலகத்தரம் வாய்ந்த மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை நிறுவுவதற்கு, தமிழ்நாடுஅரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான 'Guidance' மற்றும் 'BIG TECH' இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
உலக பங்குச்சந்தை தரவரிசையில் 4வது இடத்திற்கு ஏற்றம் கண்ட இந்தியா
 • அயோத்தியில் ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு, இன்று வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வர்த்தகமாகின. வர்த்தகம் துவக்கத்தில் சென்செக்ஸ் 551.09 புள்ளிகள் உயர்ந்து 71,974.74 ஆக வர்த்தகமானது. 
 • நிப்டி 158 புள்ளிகள் உயர்ந்து 21,729.80 புள்ளிகளுடன் வர்த்தகமாகின.இதன்மூலம் இந்திய பங்குச்சந்தை மதிப்பு 4.33 டிரில்லியன் டாலராக அதிகரித்து சாதனை படைத்துள்ளது. 
 • மேலும், உலக பங்குச்சந்தை தரவரிசையில் இந்திய பங்குச்சந்தை ஹாங்காங்கை பின்னுக்கு தள்ளி 4வது இடத்திற்கு முன்னேறியது. ஹாங்காங் பங்குச்சந்தை மதிப்பு 4.28 டிரில்லியன் டாலராக உள்ளது
எஸ்எஸ்பி-யின் புதிய தலைவராக தல்ஜித் சிங் நியமனம்
 • மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துணை ராணுவ அமைப்பான சாஸ்த்ரா சீமா பால் அமைப்பிற்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டார்.
 • உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 1990 ஆம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான தல்ஜித் சிங் சௌதரி செவ்வாய்க்கிழமை எஸ்எஸ்பி எனப்படும் சாஸ்த்ரா சீமா பால் அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றார். 
 • மத்திய ரிசர்வ் காவல் படையின் தலைவரும், எஸ்எஸ்பி அமைப்பின் தற்காலிக தலைவருமான அனீஷ் தயாள் சிங் இப்பொறுப்பை தல்ஜித் சிங் சௌதரியிடம் ஒப்படைத்தார்.
 • புதுதில்லியில் உள்ள சாஸ்த்ரா சீமா பால் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்பு நிகழ்வு நடைபெற்றது. தல்ஜித் சிங் சௌதரி 2025 நவம்பர் மாதம் வரை இப்பதவியை வகிக்க உள்ளார்.
 • முன்னதாக, எஸ்எஸ்பி தலைவராக சௌதரியை நியமனம் செய்யக்கோரிய மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்கு, அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து இதற்கான உத்தரவு ஜன.19ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. 
 • மத்திய ராணுவ அமைப்புகளில் ஒன்றான சாஸ்த்ரா சீமா பால் அமைப்பு நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் எல்லையைப் பாதுகாப்பதற்கு பொறுப்பான அமைப்பாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel