19th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி 2024 தொடக்கம்
- தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை பிரதமா் நரேந்திர மோடி இன்று மாலை தொடக்கி வைத்தார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
- 19ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியிருக்கும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் வரும் 31-ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெறவிருக்கின்றன.
- இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. பிரதமர் விழாவை தொடக்கி வைக்க, விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.
- மத்திய இளைஞா் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா், மத்திய இணையமைச்சா் நிசித் பிரமாணிக், தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றுள்ளனர்.
- கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் பல்வேறு வகையான விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. கால்பந்து, கபடி, கைப்பந்து, ஜூடோ, பளு தூக்குதல், வில்வித்தை, குத்துச்சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கிச்சுடுதல், யோகா, மல்யுத்தம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றுள்ளன.
- மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் உயரிய அமைப்பான 'ஸ்கோப் ' சார்பில் ஆண்டுதோறும் சிறந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.
- இவ்விருது முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான குழுவால் மதிப்பிடப்படுகிறது.இவ்விருது கடுமையானபோட்டி செயல்முறைகள் மூலம் நிர்ணயிக்கப்பட்டு பொதுத்துறை நிறுவனங்களின் சிறந்த சாதனைகள் நிறுவன வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த தேசிய பொருளாதாரத்தில் ஆற்றிய பங்களிப்பு ஆகியவற்றிற்காக வழங்கி கவுரவித்து வருகிறது.
- இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா புதுடில்லியில் நடந்தது. துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் தலைமை தாங்கினார். டிஜிட்டல் மாற்றத்திற்கான பிரிவில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சாதனை புரிந்தமைக்காக ' ஸ்கோப் எமினென்ஸ் விருது ' வழங்கப்பட்டது.
- விருதினை என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும்செயலாக்கத்துறை இயக்குநர் மோகன் ரெட்டி மற்றும் முதன்மை பொதுமேலாளர் சாலமன் லுாதர்கிங் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
- ரிசர்வ் வங்கியின் ஜனவரி மாத அறிக்கையில், துணை ஆளுநர் மைக்கேல் தேபப்ரதா பத்ரா தலைமையிலான குழு 'பொருளாதாரத்தின் நிலை' என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில், 'உலக பொருளாதாரம் மாறுபட்ட வளர்ச்சியை எதிர்கொள்ளும் நிலையில், நுகர்வு கட்டத்தில் இருந்து முதலீட்டிற்கு மாறிக் கொண்டிருக்கும் இந்திய பொருளாதாரம் 2023-24ல் எதிர்பார்ப்பதை விட வலுவான வளர்ச்சியை பதிவு செய்யும்.
- அரசின் மூலதனச் செலவுகள் தனியார் முதலீட்டில் குவியத் தொடங்கி உள்ளன. அடுத்த நிதியாண்டிலும் வலுவான பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை இந்தியா தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில், ஜிடிபியில் குறைந்தது 7 சதவீத வளர்ச்சியைப் பெற வேண்டும்.
- ஆசியாவின் மிகப்பெரிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் நான்கு நாள் "விங்ஸ் இந்தியா 24" திருவிழா ஹைதராபாத்தில் இன்று தொடங்கியது.
- "அமிர்த காலத்தில் இந்தியாவை உலகுடன் இணைத்தல்: இந்திய சிவில் விமானப் போக்குவரத்து @ 2047 -க்கான தளத்தை அமைத்தல்" என்ற கருப்பொருளில் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட் விமான நிலையத்தில் நடைபெற்ற உலகளாவிய விமானப் போக்குவரத்து உச்சிமாநாட்டை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து, எஃகுத் துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கிவைத்தார்.