Type Here to Get Search Results !

17th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


17th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

கொச்சியில் ரூ.4,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி 
  • கேரள மாநிலத்திற்கு 2 நாள் பயணமாக வந்துள்ள பிரதமர் மோடி குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், குருவாயூர் கோயிலில் நடந்த முன்னாள் பாஜக எம்பியான நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். 
  • இதனைத் தொடர்ந்து கொச்சியின் வில்லிங்டன் தீவில் ரூ.4,000 கோடி மதிப்பிலான கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் சர்வதேச கப்பல் பழுதுபார்க்கும் மையம் மற்றும் புதிய கப்பல்துறையைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
2023 நவம்பரில் ஒட்டுமொத்த கனிம உற்பத்தி 6.8% அதிகரிப்பு
  • 2023-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சுரங்க, குவாரித் துறையின் கனிம உற்பத்தி குறியீடு (அடிப்படை: 2011-12 = 100) 131.1 ஆக உள்ளது, இது 2022-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 6.8% அதிகமாகும். 
  • இந்திய சுரங்க பணியகத்தின்  (ஐபிஎம்) தற்காலிக புள்ளிவிவரங்களின்படி, 2023-24-ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 9.1% சதவீதமாகும்.     
  • 2023-ம் ஆண்டு நவம்பரில் முக்கியமான கனிமங்களின் உற்பத்தி அளவு: நிலக்கரி 845 லட்சம் டன், பழுப்பு நிலக்கரி 33 லட்சம் டன், இயற்கை எரிவாயு (பயன்படுத்தப்பட்டது) 2991 மில்லியன் டன், பெட்ரோலியம் (கச்சா) 24 லட்சம் டன், பாக்சைட் 2174 ஆயிரம் டன், குரோமைட் 135 ஆயிரம் டன், காப்பர் கான்ச் 9 ஆயிரம் டன், தங்கம் 85 கிலோ, இரும்புத் தாது 250 லட்சம் டன், ஈயம் 29 ஆயிரம் டன், மாங்கனீசு 29 ஆயிரம் டன். துத்தநாகம் 136 ஆயிரம் டன், சுண்ணாம்புக்கல் 352 லட்சம் டன், பாஸ்போரைட் 101 ஆயிரம் டன், மேக்னசைட் 98 ஆயிரம் டன்.
2023ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருது
  • சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ஆண்டு தோறும் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கெளரவிப்பது வழக்கம்.
  • இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் என்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மெஸ்ஸி மற்றும் நார்வே மற்றும் மான்செஸ்டர் சிட்டி வீரர் எர்லின் ஹாலாந்து இடையே கடும் போட்டி நிலவியது. இதில் இருவரும் 48 புள்ளிகளுடன் சமமான நிலையில் இருந்தனர்.
  • இதில் தேசிய கால்பந்து அணிகளின் கேப்டன் அளித்த வாக்கின் மூலம் ஹாலாந்தை விட கூடுதலாக 5 புள்ளிகள் பெற்று மெஸ்ஸி 2023ம் ஆண்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். 2வது வீரராக எர்லிங் ஹாலண்ட் மற்றும் மூன்றாவது இடத்தை கைலியன் எம்பாப்பே பெற்றுள்ளார்.
  • தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பிரான்ஸ் விளையாட்டு பத்திரிகையின் தங்கப்பந்து விருதை 8 முறை கைப்பற்றி மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
  • அதேபோல், 2023ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீராங்கனையாக அய்ட்னா பொன்மாட்டி தேர்வு செயப்பட்டுள்ளார். ஸ்பெயின் தேசிய அணிக்காவும், மகளிர் பார்சிலோனா அணிக்காகவும் விளையாடி வரும் இவர் முதல் முறையாக சிறந்த கால்பந்து வீராங்கனை என்ற பட்டத்தை வென்றுள்ளார். அதேபோல், இந்த ஆண்டின் தங்கப்பந்து விருதையும் அவர் கைப்பற்றியுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel