16th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
9 ஆண்டுகளில் வறுமைக் கோட்டில் இருந்து வெளியேறிய 24.82 கோடி மக்கள் - நிதி ஆயோக் அறிக்கை
- NITI ஆயோக் விவாத கட்டுரையின்படி, இந்தியாவில் பல பரிமாணங்களில் வறுமையானது 2013-14 இல் 29.17% இல் இருந்து 2022-23 இல் 11.28% ஆகக் குறைந்துள்ளது.
- இந்த காலகட்டத்தில் சுமார் 24.82 கோடி மக்கள் வறுமை கோட்டிலிருந்து வெளியேறி உள்ளனர். தேசிய பரிமாண வறுமையானது சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகிய மூன்று முக்கியமான பிரிவுகளை கொண்டு இயங்குகிறது.
- அவை 12 நிலையான வளர்ச்சி இலக்குகள்-சீரமைக்கப்பட்ட குறிகாட்டிகளால் குறிப்பிடப்படுகின்றன. ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் இளம்பருவ இறப்பு, தாய்வழி ஆரோக்கியம், பள்ளிப்படிப்பு ஆண்டுகள், பள்ளி வருகை, சமையல் எரிபொருள், சுகாதாரம், குடிநீர், மின்சாரம், வீடு, சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் ஆகியவை இதில் அடங்கும்.
- நிதி ஆயோக்கின் தேசிய பரிமாண வறுமைக் குறியீடு (MPI) வறுமை விகிதங்களில் குறைவை மதிப்பிடுவதற்கு அல்கிர் ஃடர் முறையைப் பயன்படுத்துகிறது.
- இருப்பினும், தேசிய MPI 12 குறிகாட்டிகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் உலகளாவிய MPI 10 குறிகாட்டிகளை உள்ளடக்கியது. உத்தரப்பிரதேசத்தில், மாநில அளவில், 5.94 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியேறி முதலிடத்தில் உள்ளது.
- அதனை தொடர்ந்து பீகாரில் 3.77 கோடி பேரும், மத்தியப் பிரதேசத்தில் 2.30 கோடி பேரும் வறுமை நிலையில் இருந்து முன்னேறி உள்ளனர்.
ஊரக மின்மய நிறுவனம் (ஆர்.இ.சி) 61.1 பில்லியன் ஜப்பானிய யென் மதிப்பிலான பசுமைப் பத்திரங்களை வெளியிட்டுள்ளது
- மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான ஊரக மின்மய நிறுவனம் (ஆர்.இ.சி) 61.1 பில்லியன் ஜப்பானிய யென் (ஜே.பி.ஒய்) மதிப்பிலான 5 ஆண்டு, 5.25 ஆண்டு மற்றும் 10 ஆண்டுக்கான, அதன் முதலாவது பசுமைப் பத்திரங்களை வெளியிட்டுள்ளது.
- பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருமானம், இந்நிறுவனத்தின் பசுமை நிதிக் கட்டமைப்பு, ரிசர்வ் வங்கியின் வெளிநாட்டு வணிகக் கடன் வழிகாட்டுதல்கள் மற்றும் அவ்வப்போது வழங்கப்படும் ஒப்புதல்களுக்கு இணங்க தகுதிவாய்ந்த பசுமைத் திட்டங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும்.
- பரிவர்த்தனையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு
- சர்வதேசப் பத்திர சந்தையில் ஆர்.இ.சி நிறுவனத்தின் பதினோராவது முயற்சி மற்றும் தொடக்க யென் பத்திர வெளியீடு, இது இந்திய பொதுத்துறை நிறுவனம் வெளியிடும் முதலாவது யென் பசுமைப் பத்திரம் ஆகும்.
- 5 ஆண்டு, 5.25 ஆண்டு மற்றும் 10 ஆண்டு பத்திரங்கள் முறையே 1.76%, 1.79% மற்றும் 2.20% லாபத்தில் வெளியிடப்படுகின்றன.
- தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய யூரோ-யென் வெளியீடு
- இந்தியாவிலிருந்து மிகப் பெரிய யென்-குறியீட்டு வெளியீடு
- தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து இதுவரை இல்லாத மிகப்பெரிய யென்-குறியீட்டு வெளியீடு
- இந்தப் பரிவர்த்தனை ஜப்பானிய மற்றும் சர்வதேச கணக்குகள் இரண்டிலிருந்தும் ஆர்வத்தைக் கண்டது, ஒவ்வொன்றிலிருந்தும் ஆர்டர்களின் எண்ணிக்கை 50% ஆக இருந்தது, சர்வதேச ஒதுக்கீடு வேறு எந்த இந்திய யென் ஒப்பந்தத்திற்கும் மிக உயர்ந்த ஒன்றாகும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, தேசிய மனிதவள மேம்பாட்டுக் கட்டமைப்பு ஒப்பந்தம்
- கோவாவில் நடைபெற்ற சர்வதேச ஊதா விழாவின் நிறைவு நாளில், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, தேசிய மனிதவள மேம்பாட்டுக் கட்டமைப்பு ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- இந்த ஒத்துழைப்பு, பிஎம்-தக்ஷ்த் எனும் பிரதமரின் ஆற்றல் மற்றும் திறன் பயனாளி -மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்தல் துறை இணையதளம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புகளை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், இத்துறையின் மக்கள் தொடர்பை விரிவுபடுத்துவதற்கும், நாடு தழுவிய அளவில் மனிதவள நிபுணர்களுடனான தொடர்புகளை வளர்ப்பதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
- மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த வேலை வாய்ப்புகளை எளிதாக்குவதற்கான முயற்சிகளை அதிகரிப்பதும், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பலவகைத் தொழிலாளர்களை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும்.