11th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
விண்மீன் வெடிப்பு குறித்த தரவுகள் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் சேகரிப்பு
- இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்கான செயற்கைக்கோளை வடிவமைத்து, பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் உதவியுடன், விண்ணில் நிலைநிறுத்துகிறது.
- ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., - சி58 ராக்கெட், 469 கிலோ எடை உடைய, 'எக்ஸ்போசாட்' செயற்கைக்கோளை சுமந்தபடி, ஜனவரி 1ம் தேதி காலை, 9:10 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
- பூமியில் இருந்து புறப்பட்ட, 22வது நிமிடத்தில் ராக்கெட் திட்டமிடப்பட்ட, 650 கி.மீ., துாரம் உள்ள புவி வட்ட பாதையில், எக்ஸ்போசாட் செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.
- பின், 'ஆப்' செய்யப்பட்ட ராக்கெட் இன்ஜின் மீண்டும் இயக்கப்பட்டு, 350 கி.மீ., தொலைவுக்கு கீழே எடுத்து வரப்பட்டு, 10 ஆய்வு கருவிகளை உடைய சிறிய செயற்கைக்கோள், அந்த பாதையில் நிறுத்தப்பட்டது.
- இந்நிலையில் ஜன.,1ம் தேதி இஸ்ரோ அனுப்பிய எக்ஸ்போ சாட் செயற்கைக்கோள் விண்மீன் வெடிப்பு குறித்த தரவுகளை சேகரித்து உள்ளது.
- சூரிய குடும்பத்திற்கு வெளியே விண்மீன் வெடிப்பு குறித்த தரவுகளை இஸ்ரோ முதல் முறையாக சேகரித்துள்ளது. தரவுகள் படி, கால்சியம், சல்பர், மெக்னீசியம், சிலிக்கான், ஆர்கான், நியான், இரும்பு ஆகியவை இருப்பது தெரியவந்துள்ளது.
- 2023-24ம் ஆண்டு சட்டசபையில் பட்ஜெட் உரையில் பருவநிலை மாற்றம் மற்றும் பெருகிவரும் மக்கள் தொகையால் ஏற்படும் அழுத்தம் காரணமாக கடலோர சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் கடலோர மக்களின் வாழ்வாதாரம் ஆகியவை எதிர்காலத்தில் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் தமிழ்நாடு கடற்கரை மறுசீரமைப்பு பணியை உலக வங்கி உதவியுடன் அரசு செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.
- இதற்காக கடல் அரிப்பை தடுப்பது, கடல் மாசுபாட்டை குறைப்பது மற்றும் கடல் பல்லுயிரியலை பாதுகாப்பது ஆகிய நோக்கங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 1675 கோடி செலவில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
- அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு பணியை தொடங்க தமிழ்நாடு அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. ரூ.1675 கோடி செலவில் கடலோர மறுசீரமைப்பு பணிகள் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- அதேபோல் கடல் வளத்தை பாதுகாக்க, ரூ.2,000 கோடியில் திட்டம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டங்கள் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த உடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார்.
- இதற்கு முன்னதாக கடந்த 1989- 91 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் தமிழக அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகவும், 1996-2001 திமுக ஆட்சிக்காலத்தில் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராகவும் பதவி வகித்துள்ள இவர், திமுக எம்பியாகவும் பதவி வகித்துள்ளார்.
- இந்த நிலையில், வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தானாகவே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞரான பி.எஸ்.ராமனை நியமிக்க அரசு முடிவு செய்தது.
- இதற்கான பரிந்துரை ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு அரசு தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் பொறுப்பேற்க உள்ளார்.
- தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு உட்பட ஏராளமான வழக்குகள் அவருக்கு சவாலாக காத்திருக்கிறது. இவர் கடந்த 2006 - 2011 காலகட்டத்தில் திமுக அரசால் தலைமை வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டு பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான துப்பாக்கி சுடுதல் ஆசிய தகுதி சுற்று இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் நான்சி 252.8 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார்.
- மற்றொரு இந்திய வீராங்கனையான இளவேனில் வாலறிவன் 252.7 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ருத்ராங்ஷ் பாட்டீல் 228.7 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
- 1984ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ்., கேடரான சஞ்சய் குமார் மிஸ்ரா கடந்த 2018-ம் ஆண்டு முதல் அமலாக்கத்துறை இயக்குநராக இப்பதவியில் இருந்து வருகிறார். இவரது பதவி காலத்தை நீட்டித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
- மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து இவரது பதவி காலம் கடந்தாண்டு செப்.15-ல் நிறைவடையும் எனஅறிவித்தது.
- இந்நிலையில் புதிய இயக்குநராக ராகுல் நவீன் என்பவரை தற்காலிக இயக்குனராக கடந்தாண்டு செப்டம்பரில் மத்திய அரசு நியமித்தது.
- இந்நிலையில் ஏசிசி எனப்படும் மத்திய அமைச்சரவையின் நியமன கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் அமலாக்கத்துறை இடைக்கால இயக்குநராக பணியாற்றிவரும் ராகுல் நவீன், அதிகாரப்பூர்வமாக புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- 1993-ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ்., கேடரான இவர் அமலாக்கத்துறையில் பல்வேறு உயர் பதவிகள் வகித்து வந்துள்ளார். புதிய இயக்குநராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
- சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ், அந்த நாட்டு அதிபா் ஷி ஜின்பிங்கை புதன்கிழமை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
- அதன் முடிவில், பல்வேறு துறைகளில் நல்லுறவை மேம்படுத்துவற்கான 20 முக்கிய ஒப்பந்தங்கள் சீனாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையே புதன்கிழமை கையொப்பமாகின.
- இரு நாட்டு அதிபா்களும் இந்த நிகழ்ச்சியை நேரில் பாா்வையிட்டனா் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுலா, பேரிடா் மேலாண்மை, கடல்சாா் பொருளாதாரம், எண்மப் பொருளாதாரம், வா்த்தக வழித்தடம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடா்பாக இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- மாலத்தீவில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில், இந்தியாவுக்கு எதிரானவராகவும், சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவராகவும் அறியப்படும் முகமது மூயிஸ் வெற்றி பெற்றாா். அவா் அதிபராகப் பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையிலான உறவில் பின்னடைவு ஏற்பட்டு வருவதாரக் கூறப்படுகிறது.
- 2023-ம் ஆண்டிற்கான "சிறந்த சாதனையாளர்" என்ற பிரிவில் "ஆண்டின் சிறந்த சாதனையாளர்" விருதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு (இஸ்ரோ), மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், வழங்கினார்.
- தேசிய தொலைக்காட்சி சேனல் நிறுவிய இந்த விருதை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத், சந்திரயான் 3 திட்ட இயக்குநர் டாக்டர் பி.வீரமுத்துவேல் ஆகியோர் புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் பெற்றுக் கொண்டனர்.
- விண்வெளி ஆராய்ச்சியின் எல்லைகளை விரிவாக்கம் செய்வதில் இஸ்ரோவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரித்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
- 2023-ம் ஆண்டு சந்தேகத்திற்கு இடமின்றி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சவால்களை எதிர்கொள்வதில் ஈடு இணையற்ற ஆற்றலையும் மீள்திறனையும் வெளிப்படுத்திய காலமாக வரலாற்றுப் புத்தகங்களில் பொறிக்கப்படும்.
- 2023-ம் ஆண்டில் இஸ்ரோவின் சாதனைகளின் உச்சமாக, சந்திரயான் -3 நிலவின் அறியப்படாத தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக மென்மையாக தரையிறங்கியது.