9th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்த ஐ.நாவில் கொண்டு வந்த தீர்மானம் நிராகரித்த அமெரிக்கா
- இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே அக்டோபர் 7 ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,147 பேர் உயிரிழந்தனர்.
- மேலும் இஸ்ரேலில் இருந்து 247 பேரை பணய கைதிகளாக காசாமுணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். போரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் சுமார் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- மேலும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அத்தியாவசிய பொருட்கள் கூட இன்றி தவித்தனர்.
- இதற்கிடையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்து வரும் போர் 4 நாட்கள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த 4 நாட்களில் ஹமாஸ் தரப்பில் பணயக்கைதிகளாக இருப்பவர்களை விடுவிக்க ஒப்புதல் அளித்தது.
- அதேபோல் இஸ்ரேல் தரப்பிலும் ஹமாஸ் அமைப்பின் நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 4 நாட்கள் போர் நிறுத்தம் இரு தரப்பினராலும் முறையே கடைபிடிக்கப்பட்டதால் மேலும் இரண்டு நாட்கள் நீடிக்கப்பட்டது.
- அதன்படி 6 நாட்கள் போர் நிறுத்தத்தின் பயணாக ஹமாஸ் தரப்பில் 105 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் 81 பேர் இஸ்ரேலியர்கள், 23 பேர் தாய்லாந்தை சேர்ந்தவர் மற்றும் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்.
- அதே சமயம் மேலும் 137 பேர் ஹமாஸ் தரப்பினரிடம் பணயக் கைதிகளாக உள்ளனர். இதனிடையே தற்காலிக போர் நிறுத்தம் டிசம்பர் 1 ஆம் தேதி காலை 7 மணியுடன் நிறைவடைந்தது.
- கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தரப்பில் போர் நிறுத்தத்தை நீடிக்க இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை என்பதாலும், போர் நிறுத்தம் விதிமுறையை ஹமாஸ் குழுவினர் முறையாக பின்பற்றவில்லை என்றும், எல்லையில் ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நட்த்தியதால் மீண்டும் இஸ்ரேல் மீண்டும் போரை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மீண்டும் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
- இஸ்ரேல் ஹமால் இடையே 3 மாதங்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் அதனை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது. இதனிடையே ஐ.நா சபையில் போர் முடிவுக்கு கொண்டு வரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
- இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்தது. இந்த தீர்மானத்தில் இங்கிலாந்து நாடு பங்கேற்கவில்லை. அதேசமயம் அமெரிக்க தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை நிராகரித்தது.
- ஐஐஎம் லக்னோ மற்றும் புதுடெல்லியில் உள்ள தொழில்துறை கூட்டு நிறுவனமான ஜேகே அமைப்பு சார்பில் 2022-23 ஐஐஎம் லக்னோ தேசிய தலைமை விருதுகள் வழங்கும் விழா புதுடெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
- இதில், 'அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தலைவர்' என்ற பிரிவில் லஷ்மிபத் சிங்கானியா விருதுக்கு டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் வி.மோகன் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
- அவருக்கு, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, லஷ்மிபத் சிங்கானியா விருதை வழங்கி கவுரவித்தார். இந்த பிரிவில் விருது பெறும் இரண்டாவது இந்திய மருத்துவர் என்ற பெருமையையும் டாக்டர் மோகன் பெற்றுள்ளார்.
- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் இன்று (9-12-2023) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
- இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். வெள்ள சேதம் குறித்தும், வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகை குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
- இதனடிப்படையில், மிக்ஜம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
- அதுமட்டுமின்றி, புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 இலட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்;
- சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500/-லிருந்து, ரூபாய் 17 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும்;
- பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, ரூபாய் 22,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும்;
- மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,410/-லிருந்து, ரூ.8,500/- ஆக உயர்த்தி வழங்கிடவும்;
- எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30,000/- என்றிருந்ததை, ரூ.37,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும்; வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.3,000/- என்றிருந்ததை, ரூ.4,000/- உயர்த்தி வழங்கிடவும்;
- சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளைப் பொறுத்தவரையில், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட), ரூ.32,000/-லிருந்து, ரூ.50 ஆயிரமாகவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாகவும், முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 75 ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஒரு இலட்சமாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 5 இலட்சத்திலிருந்து, ரூபாய் 7.50 இலட்சமாகவும் உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும்; முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.