Type Here to Get Search Results !

8th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


8th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம்
  • திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா மக்களவையில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப, தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே புகாா் அளித்தாா். 
  • இந்தப் புகாரை விசாரிக்க மக்களவை நெறிமுறைகள் குழுவுக்கு ஓம் பிா்லா பரிந்துரைத்தாா். அதன்படி, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு இதுகுறித்து விசாரித்து வந்தது.
  • தொடர்ந்து, நெறிமுறைகள் குழு, மஹுவாவை எம்.பி. பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்து அறிக்கை ஒன்றை தயார் செய்தது. அந்த அறிக்கையை குழுவின் தலைவா் வினோத் குமாா் சோன்கா் மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்தார். அப்போது அமளி காரணமாக பிற்பகலுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. 
  • இன்று பிற்பகல் அந்த அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, மக்களவையில் இருந்து திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ராவை நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
  • இதையடுத்து மக்களவையில் இருந்து திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா நீக்கப்பட்டதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். 
மிசோரம் முதல்வராக பதவியேற்றார் லால்துஹோமா
  • மிசோரம் முதல்வராக சோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமா இன்று (டிச. 8) பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில், ஆளுர் ஹரிபாபு கம்பம்பட்டி லால்துஹோமவுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். 
  • மேலும், 11 மக்கள் இயக்கத்தின் தலைவர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர். இந்த விழாவில் மிசோரம் தேசிய முன்னணி தலைவரும், முதல்வருமான ஜோரம்தங்கா கலந்துகொண்டார். 
  • மேலும், எம்எல்ஏக்கள், சட்டமன்றக் கட்சித் தலைவர் லால்சந்தமா ரால்டே உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முன்னாள் முதல்வர் லால் தன்ஹாவ்லாவும் உடனிருந்தார்.
  • டிசம்பர் 5-ம் தேதி (செவ்வாயன்று) சோரம் மக்கள் இயக்கத்தின் சட்டமன்றக் கட்சி அதன் தலைவராக லால்துஹோமாவையும், துணைத் தலைவராக கே. சப்தங்காவையும் தேர்ந்தெடுத்தனர்.
உத்தராகண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2023ஐப் பிரதமர் தொடங்கி வைத்தார்
  • உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்று வரும் 'உத்தராகண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2023'-ஐப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அங்கு கண்காட்சியையும் அவர் திறந்துவைத்தார். 
  • வலிமையான உத்தராகண்ட் என்ற புத்தகத்தையும், ஹவுஸ் ஆஃப் ஹிமாலயாஸ் என்ற வணிகக்குறியீட்டையும் பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த மாநாட்டின் கருப்பொருள் 'அமைதி முதல் செழிப்பு வரை' என்பதாகும்.
மத்திய அமைச்சரவையில் மாற்றம்
  • மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மத்திய அமைச்சர்கள் போட்டியிட்டிருந்தனர். பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பலருக்கு ஐந்து மாநில தேர்தலில் போட்டியிட்டிருந்தனர்.
  • அதில் பலர் வெற்றி பெற்றிருந்தனர்.
  • இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர தோமர், பிரகலாத் படேல், ரேணுகா சிங் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் காரணமாக தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்தனர்.
  • இந்நிலையில் அமைச்சர் நரேந்திர தோமர் ராஜினாமாவை அடுத்து, அர்ஜூன் முண்டாவுக்கு வேளாண் அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 
  • விவசாயிகள் போராட்டம் நடத்திய போது நரேந்திர சிங் தோமர் தலைமையிலான விவசாயத்துறை அமைச்சகம்தான் அதைக் கையாண்டது. இத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட அமைச்சராகத்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஷோபா கரந்த்லாஜே உணவு பதப்படுத்தும் தொழில்துறை இணையமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜீவ் சந்திரசேகர் ஜல் சக்தி துறையின் இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரகலாத் படேல் ஜல்சக்தித் துறை அமைச்சராக இருந்தார்.
  • ரேணுகா சிங் பழங்குடியின விவகார அமைச்சகத்தின் இணையமைச்சராக இருந்த நிலையில் அவரது பதவியை ராஜினாமா செய்த நிலையில் பாரதி பவார் இணையமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
முதலாவது இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு நிகழ்ச்சி 2023 ஐ டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தொடங்கி வைத்தார்
  • தில்லி செங்கோட்டையில் முதலாவது இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்ச்சி  2023 ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். 
  • இந்நிகழ்ச்சியின் போது, செங்கோட்டையில் தற்சார்பு இந்தியா வடிவமைப்பு மையத்தை' பிரதமர் திறந்து வைத்தார். நினைவு தபால் தலை ஒன்றையும் அவர் வெளியிட்டார். விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை பிரதமர் திரு மோடி பார்வையிட்டார்.
  • இந்நிகழ்ச்சியில், மத்திய கலாச்சாரத் துறை இணையமைச்சர்கள் திரு. ஜி. கிஷன் ரெட்டி, திரு அர்ஜுன் ராம் மேக்வால், திருமதி மீனாட்சி லேகி மற்றும் கட்டிடக்கலைஞர்களின் முதன்மை கட்டிடக் கலைஞர் திருமதி டயானா கெல்லாக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரூ. 5 லட்சம் வரை UPI பரிவர்த்தனை - ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு
  • கடந்த 2016 ஆம் ஆண்டில் இந்தியாவில் யுபிஐ எனப்படும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவுமுறை இந்திய தேசிய பேமண்ட் கார்ப்பரேசன் நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது.
  • யுபிஐ மூலம் எந்த வங்கிக் கணக்கிற்கும் மொபைல் மூல்ம நாம் பணம் அனுப்ப முடியும். இதற்கு வங்கிக் கணக்கு போன்ற விவரங்கள் தேவையில்லை. இதனால் மக்கள் இப்போ பே, பேடிஎம், பாரத் பே, கூகுள் பே போன்ற ஆப்கள் மூலம் எளிதாக அனுப்பி வருகின்றனர்.
  • இந்த நிலையில், மருத்துவமனை, கல்வி நிலையங்களில் இனிமேல் யுபிஐ மூலம் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. முன்னதாக ரூ.1 லட்சம் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மீன்வள பல்கலைக்கு புதிய துணை வேந்தர் நியமனம்
  • தமிழ் நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தரை நியமித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
  • நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகத்தின் புதிய துணை வேந்தராக பேராசிரியர் பெலிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 
  • இவர் 3 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார். பேராசிரியர் பெலிக்ஸ், 32 ஆண்டுகள் கல்வி மற்றும் நிர்வாக பணியில் அனுபவம் வாய்ந்தவர். மீன்வள பல்கலைக் கழகத்தின் பொறுப்பு துணை வேந்தராகவும் இருந்து வருகிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel