6th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
விலங்குகளை விண்ணுக்கு அனுப்பிய ஈரான்
- மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் உள்ள ஈரான், தற்போது விலங்குகளைக் கொண்ட விண்கலன் ஒன்றினை விண்ணுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
- சுற்றுவட்டப்பாதையில் 130 கிலோமீட்டர் தொலைவுக்கு அந்த விண்கலன் அனுப்பப்பட்டதாகத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் இஸா சரேபூர் தெரிவித்துள்ளார்.
- 500 கிலோ எடை கொண்ட அந்த விண்கலனில் என்ன விலங்குகள், எத்தனை விலங்குகள் அனுப்பப்பட்டன என்பதைக் குறிப்பிடவில்லை.
- ஈரான் 2013-ல் விண்கலன் மூலம் குரங்கு ஒன்றினை வெற்றிகரமாக விண்ணுக்குச் சென்றுவரச் செய்ததாகத் தெரிவித்தது. கடந்த செப்டம்பர் மாதத்தில், தரவுகளைச் சேகரிக்கும் செயற்கைக்கோள் ஒன்றினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாகத் தெரிவித்தது. விரைவில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
- ஆப்பிரிக்க நாடான கென்யாவின் அதிபா் வில்லியம் சமோய் ருடோ, 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு கடந்த திங்கள்கிழமை வந்தாா். இந்தியா-கென்யா இடையிலான ஒட்டுமொத்த உறவுகளையும் விஸ்தரிக்கும் நோக்குடன் அவா் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளாா்.
- இரு நாடுகளும் வேளாண் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டவை. கென்யாவில் வேளாண் துறை நவீனமயமாக்கலுக்காக 250 மில்லியன் அமெரிக்க டாலா்கள் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2,084 கோடி) கடனுதவியை இந்தியா வழங்கவுள்ளது.
- இந்தியா-கென்யா இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு, இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் பொதுவான முன்னெடுப்புகளுக்கு உத்வேகம் அளிக்கும்.
- மனித குலம் எதிா்கொண்டுள்ள மிகத் தீவிரமான சவால் பயங்கரவாதம் என்பதில் இந்தியாவும் கென்யாவும் ஒரே பாா்வையைக் கொண்டுள்ளன. பயங்கரவாதத்தைத் தடுப்பதில் ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்துள்ளோம்.
- இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பின் முழுத் திறனையும் எட்டும் புதிய வாய்ப்புகள் தொடா்ந்து ஆராயப்படும். இரு நாடுகளின் பாதுகாப்பு உற்பத்தி தொழில் துறையை ஒருங்கிணைப்பதோடு, கூட்டு ராணுவப் பயிற்சிகள் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
- கென்யாவில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சுமாா் 80,000 போ் வாழ்கின்றனா். கென்யாவை தங்களது இரண்டாவது வீடாக கருதும் அவா்கள், இருதரப்பு உறவின் மிகப் பெரிய வலிமையாக திகழ்கின்றனா் என்றாா் பிரதமா் மோடி.
- இரு தலைவா்களின் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, இந்தியா-கென்யா இடையே பாதுகாப்பு, வா்த்தகம், எரிசக்தி, எண்ம பொது உள்கட்டமைப்பு, சுகாதாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த 5 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின என்று இருதரப்பு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கென்யாவில் சிறுதானியங்களை விளைவிக்கும் வகையில், அந்நாட்டின் சட்டங்களுக்கு உள்பட்டு இந்திய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு நிலம் ஒதுக்கப்பட உள்ளதாகவும், இந்தியாவின் கடனுதவிக்காக கென்யா தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டதாகவும் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- 2024-2027 கல்வியாண்டிற்கான ஏஐசிடிஇ அங்கீகார நடைமுறைக் கையேட்டை புதுதில்லி சாஸ்திரி பவனில் உள்ள பத்திரிகைத் தகவல் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏஐசிடிஇ-யின் தலைவர் பேராசிரியர் டி.ஜி. சீதாராம், துணைத் தலைவர் டாக்டர் அபய் ஜெர் மற்றும் உறுப்பினர் செயலாளர் பேராசிரியர் ராஜீவ் குமார் ஆகியோர் வெளியிட்டனர்.
- அங்கீகார நடைமுறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சில புதிய மாற்றங்கள் பின்வருமாறு,
- சிறப்பாகச் செயற்படும் நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகள் வரை அனுமதியை நீடிப்பதற்கான ஏற்பாடு.
- ஏற்கெனவே சிறப்பாக செயல்படும் நிறுவனங்களால் வழங்கப்படும் படிப்புகளில் சேர்க்கைக்கான உச்ச வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், சேர்க்கையைக் கோருவதற்கு முன்பு நிறுவனங்கள் தரமான உள்கட்டமைப்பு மற்றும் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- இணைப்புப் பல்கலைக்கழகங்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடமிருந்து ஆவணங்கள் மற்றும் தடையில்லா சான்றிதழ் தொடர்பான செயல்பாடுகளைக் குறைத்தல்.
- தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்வதற்காக இளங்கலை படிப்புகளான பி.சி.ஏ போன்றவையும் மேலாண்மைப் படிப்புகளான பி.பி.ஏ போன்றவையும் ஏஐசிடிஇ-யின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
- திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி, இணையவழிக் கற்றல் போன்றவற்றுக்கான ஒப்புதல் செயல்முறை குறித்த கூடுதல் தெளிவு தரப்பட்டுள்ளது.
- 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை ஒரு தொழில்நுட்ப மையமாக மாற்ற நாட்டில் முழுமையான, தரமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் எளிதில் அணுகக்கூடிய தொழில்நுட்பக் கல்வியை ஊக்குவிக்க ஏஐசிடிஇ உறுதிபூண்டு செயல்பட்டு வருகிறது.
- இதய நுரையீரல் புத்துயிரூட்டல் எனப்படும் சிபிஆர் (Cardiopulmonary Resuscitation - CPR) பயிற்சி குறித்து தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (என்பிஇஎம்எஸ்) ஏற்பாடு செய்த நாடு தழுவிய பொது விழிப்புணர்வு நிகழ்ச்சியை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று (06-12-2023) புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
- மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர்கள் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகெல், டாக்டர் பாரதி பிரவீன் பவார் ஆகியோரும் பங்கேற்றனர்.
- ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு சட்டம், மாநில அரசு பதவிகளில் நியமனம் மற்றும் தொழில்முறை நிறுவனங்களில் சேர்க்கை, சில இட ஒதுக்கீடு பிரிவுகளுக்கு இடஒதுக்கீடு வழங்குகிறது.
- பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு தொழில் நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
- ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம்-2019, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த மசோதா ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டப் பேரவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கையை 83ல் இருந்து 90 ஆக அதிகரிக்கிறது.
- மேலும் இது ஏழு இடங்களை பட்டியலிடப்பட்ட சாதியினருக்கும், ஒன்பது இடங்களை பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கும் ஒதுக்குகிறது. இந்த மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
- இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.