Type Here to Get Search Results !

4th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


4th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

மிசோரம் மாநில தேர்தல் முடிவு 2023
  • மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த நவ.,7ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 70 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (டிச.,4) காலை 8 மணிக்கு துவங்கியது. 
  • மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 10 தொகுதிகளில் மட்டுமே வென்றது. ஜோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 
  • பா.ஜ., 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வென்றன. கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 26 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கடல்சார் அமைப்பு - இந்தியா மீண்டும் தேர்வு
  • 2024-25 ஆம் ஆண்டிற்கான கடல்சார் அமைப்பின் நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது நடைபெற்ற தேர்தலில், இந்தியா அதிக எண்ணிக்கையிலான வாக்குகளுடன் சர்வதேச கடல்சார் அமைப்பின் (ஐ.எம்.ஓ) கவுன்சிலுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • "சர்வதேச கடல்வழி வர்த்தகத்தில் அதிக ஆர்வம் கொண்ட நாடுகள்" என்ற குழுவில் 10 நாடுகளின் பிரிவில் இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவுடன் ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகிய நாடுகளும் இந்த கவுன்சிலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel