31st DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தீயணைப்பு துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம்
- தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பணியாற்றும் பெண் அதிகாரி பிரியா ரவிசந்திரன், மாநில அரசு அல்லாத சிவில் சர்வீசஸ் (Non state Civil service) ஒதுக்கீட்டிலிருந்து ஐஏஎஸ்ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. மாநில அரசுப் பணியில் இருந்து 2022-ஆம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ்., பிரிவு அதிகாரியாக பிரியா தோவாகியுள்ளாா்.
- கடந்த 2003-ஆம் ஆண்டு தமிழக அரசின் குரூப் 1 அதிகாரியாக பிரியா பணியில்
- சோந்தாா். தீயணைப்புத் துறையில் பணியாற்றி, இணை இயக்குநராக நிலைக்கு அவர் உயா்ந்தாா். மாநில அரசின் பரிந்துரைப்படி ஆண்டுதோறும் காலியாக உள்ள குறிப்பிட்ட சில இடங்களுக்கு குரூப் 1 அதிகாரிகள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக நியமனம் செய்யப்படுவா்.
- இந்த நடைமுறையின்படி, 2022-ஆம் ஆண்டு காலியாகவுள்ள இடத்துக்கு தீயணைப்புத்
- துறை இணை இயக்குநா் பிரியா ரவிச்சந்திரன் தோவாகியுள்ளாா். தீயணைப்புத் துறையில் இருந்து ஒருவா் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தோவாகியிருப்பது தமிழகத்தில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 280 (1) பிரிவின்படி, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன், பதினாறாவது நிதிக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
- நித்தி ஆயோகின் முன்னாள் துணைத் தலைவரும், கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியருமான டாக்டர் அரவிந்த் பனகாரியா இதன் தலைவராக இருப்பார். பதினாறாவது நிதிக்குழு உறுப்பினர்கள் நியமனம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும். நிதிக்குழுவின் செயலாளராக திரு ரித்விக் ரஞ்சனம் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (31-12-2023) வெளியிடப்பட்ட அறிவிப்பில் பதினாறாவது நிதிக்குழுவுக்கான விதிமுறைகளும் இடம்பெற்றுள்ளன.
- பதினாறாவது நிதிக்குழு பின்வரும் அம்சங்கள் தொடர்பாக பரிந்துரைகளை வழங்கும்.
- அரசமைப்புச் சட்டத்தின் அத்தியாயம் 1, பகுதி 12-ன் கீழ் பிரிக்கப்பட வேண்டிய வரிகளின் நிகர வருவாயை மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே பகிர்ந்தளித்தல் மற்றும் அத்தகைய வருவாயில் அந்தந்த பங்குகளை மாநிலங்களுக்கு இடையே ஒதுக்கீடு செய்தல்;
- இந்திய ஒருங்கிணைந்த நிதியிலிருந்து மாநிலங்களின் வருவாயை மானியமாக வழங்குவது மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் 275 வது பிரிவின் கீழ் மாநிலங்களுக்கு அவற்றின் வருவாயின் உதவி மானியமாக வழங்கப்பட வேண்டிய தொகைகளை அந்த சட்டப்பிரிவு (1)-ன் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைத் தாண்டி வேறு நோக்கங்களுக்காக நிர்வகிக்க வேண்டிய கொள்கைகள்; மற்றும்
- மாநில நிதிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் நிதி ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக மாநில ஒருங்கிணைந்த நிதியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள்.
- பதினாறாவது நிதிக்குழு, பேரிடர் மேலாண்மைச் சட்டம் -2005-ன் (2005-ன் 53) கீழ் அமைக்கப்பட்ட நிதி தொடர்பாக, பேரிடர் மேலாண்மை முன்முயற்சிகளுக்கு நிதியளிப்பதற்கான தற்போதைய ஏற்பாடுகளை மறுஆய்வு செய்து, அதன் மீது பொருத்தமான பரிந்துரைகளை வழங்கும்.
- பதினாறாவது நிதிக்குழு 2026 ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி 2025 அக்டோபர் 31 ஆம் தேதி வரையிலான ஐந்து ஆண்டு காலத்திற்கானதாகும்.