30th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
- சென்னை கோயம்பேடு பகுதி, ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள வசதியாகவும் 393 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
- மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு 'கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்' என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.
- இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த பேருந்து நிலையத்தினை திறந்துவைத்தார். மேலும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த பேருந்து நிலையத்தினை பேட்டரி காரில் சென்று பார்வையிட்டார் முதல்வர்.
- சா்வதேச அளவிலான சுற்றுச்சூழல், செயல்பாடு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்டம் 1க்கு ‘ஐஎஸ்ஓ 9001’ தர மேலாண்மை மற்றும் ‘ஐஎஸ்ஓ 14001’ சுற்றுச்சூழல் மேலாண்மை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
- இந்த சான்றிதழை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் மெட்ரோ ரயில் நிா்வாகத்தின் மேலாண்மை இயக்குநா் மு.அ.சித்திக்கிடம், ஐஎஸ்ஓ சான்றளிப்பு அமைப்பான ‘பீரோ வெரிட்டாஸ்’ நிறுவனத்தின் மேலாளா் வின்ஸ்டன் ஐசக் வழங்கினாா்.
- அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் வளர்ச்சிக்காக சுமார் ரூ.11,100 கோடி மதிப்பிலான திட்டங்களும், உத்தரப்பிரதேசம் முழுவதும் உள்ள மற்ற திட்டங்களுக்கு சுமார் ரூ.4600 கோடி மப்பிலான திட்டங்களும் இதில் அடங்கும்.
- இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மறுவடிவமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தை திறந்து வைத்தார். அதன்பின்னர் இரண்டு அமிர்த பாரத் மற்றும் ஆறு வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- அதன்படி, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா-புது டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; அமிர்தசரஸ்-டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; கோவை-பெங்களூரு கான்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; மங்களூர்-மட்கான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; ஜல்னா-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் அயோத்தி கான்ட்-ஆனந்த் விஹார் டெர்மினஸ் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கவுள்ளது.
- இந்த 6 வந்தே பாரத் ரயில்களில் 2 ரயில்கள் தெற்கு ரயில்வேயில் இணைந்துள்ளது.
- உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அயோத்தி ராமர் கோயில் நாட்டின் மிகப் பெரிய கலாச்சார மையமாகத் திகழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதனைத் தொடர்ந்து அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்.
- இந்த விமான நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் ரூ. 1,450 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம், ஆண்டுக்கு 10 லட்சம் பயணிகளை கையாளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விமான நிலைய முனைய கட்டிடத்தின் முகப்பு அயோத்தி ராமர் கோயில் கட்டிடத்தை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உள்புற சுவர் ஓவியங்கள் ராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் வரையப்பட்டுள்ளன.
- இந்த விமான நிலையத்தில் மழைநீர் சேகரிப்பு, நீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சூரிய மின் உற்பத்தி நிலையம் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.