Type Here to Get Search Results !

28th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


28th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

கொலீஜியம் அமைப்பில் புதிய நீதிபதி நியமனம்
  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 பேர் கொண்ட கொலீஜியம் அமைப்பு பரிந்துரையின் பேரில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி நியமனம் செய்கிறார்.
  • இவ்வமைப்பில் இருந்த உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கடந்த சில தினங்களுக்கு முன் பணி நிறைவு பெற்றார். இதையடுத்து காலியாக உள்ள பதவிக்கு நீதிபதி அனிருத்தா போஸ் பெயர் பரிந்துரைக்கப்பட்டு கொலீஜியம் அமைப்பில் நியமிக்கப்பட்டார். 
  • இவர் 2024 ஏப்ரல் 10-ம் தேதிவரை பதவியில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்தில் நீதிபதிகள் சஞ்சீப் கண்ணா, பி.ஆர்.காவி, சூரியகாந்த், அனிருத்தா போஸ் என 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஃபட்டா 2 ஏவுகணை - பாகிஸ்தான் வெற்றிகர சோதனை
  • ஃபட்டா-2 ஏவுகணைத் தளவாடத்தின் சோதனை புதன்கிழமை நடைபெற்றது. அதில் அந்த ஏவுகணைகள் வெற்றிகரமாக செயல்பட்டன.
  • அதிநவீன மின்னணு சாதனங்களும், உயா்திறன் கொண்ட வழிகாட்டு கருவிகளும் அந்த ஏவுகணைத் தளவாடத்தில் பொருத்தப்பட்டுள்ளன.400 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளை இந்த ஏவுகணைகள் மிகவும் துல்லியமாகத் தாக்கக் கூடியவை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பாகிஸ்தானின் முப்படைகளையும் சோந்த அதிகாரிகள் இந்த ஏவுகணை சோதனையை நேரில் பாா்வையிட்டனா். ஏற்கெனவே, தனது கோரி ஏவுகணை தளவாடத்தை கடந்த அக்டோபா் மாதம் பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்துப் பாா்த்தது நினைவுகூரத்தக்கது.
  • தற்போது சோதித்துப் பாா்க்கப்பட்டுள்ள ஃபட்டா-2 தளவாடத்தின் முன்னோடியான ஃபட்டா-1 ஏவுகணைத் தளவாடம் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் முதல்முறையாக சோதிக்கப்பட்டது.
திரிபுராவில் கோவாய்-ஹரினா சாலையில் 135 கி.மீ தூரத்தை மேம்படுத்தவும் அகலப்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, திரிபுரா மாநிலத்தில் மொத்தம் 134.913 கி.மீ நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலை 208-இன் கோவாய் முதல் ஹரினா வரையிலான சாலையை மேம்படுத்தவும் அகலப்படுத்தவும் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இத்திட்டம் ரூ.2,486.78 கோடி முதலீட்டை உள்ளடக்கியது, இதில் ரூ.1,511.70 கோடி கடனாகும். அதிகாரபூர்வ மேம்பாட்டு உதவி திட்டத்தின் கீழ் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையிலிருந்து கடன் பெறப்படும். 
  • திரிபுராவின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே சிறந்த சாலை இணைப்பை எளிதாக்குவதற்கும், தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை 8 தவிர திரிபுராவிலிருந்து அசாம் மற்றும் மேகாலயாவுக்கு மாற்று அணுகலை வழங்குவதற்கும் இந்தத் திட்டம் உதவும்.
பீகாரின் திகாவையும் சோனேபூரையும் இணைக்கும் வகையில் கங்கை ஆற்றின் குறுக்கே 4.56 கி.மீ நீளமுள்ள 6 வழிப் பாலம் கட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கங்கை ஆற்றின் குறுக்கே (தற்போதுள்ள திகா-சோனேபூர் ரயில்-சாலைப் பாலத்தின் மேற்குப் பகுதிக்கு இணையாக) புதிதாக 4,556 மீட்டர் நீளமுள்ள, 6 வழி உயர்மட்ட / கூடுதல் அளவு கேபிள் பாலம் கட்டுவதற்கும், பீகார் மாநிலத்தில் பாட்னா மற்றும் சரண் (என்.எச்-139 டபிள்யூ) மாவட்டங்களில் இருபுறமும் அதன் அணுகு பாதைகளை அமைப்பதற்கும் ஒப்புதல் அளித்தது.
  • இத்திட்டத்திற்கான மொத்த செலவு ரூ.3,064.45 கோடியாகும், இதில் ரூ.2,233.81 கோடி சிவில் கட்டுமான செலவும் அடங்கும்.
  • இந்தப் பாலம் போக்குவரத்தை விரைவாகவும் எளிதாகவும் மாற்றுவதுடன், மாநிலத்தின், குறிப்பாக வடக்கு பீகாரில் ஒட்டுமொத்த வளர்ச்சி ஏற்படும்.
  • திகா (பாட்னா மற்றும் கங்கை ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ளது) மற்றும் சோனேபூர் (சரண் மாவட்டத்தில் கங்கை ஆற்றின் வடக்கு கரை) ஆகியவை தற்போது இலகுரக வாகனங்களின் இயக்கத்திற்காக ரயில் மற்றும் சாலை பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளன. 
  • எனவே, தற்போதைய சாலையை சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இது ஒரு பெரிய பொருளாதார தடையாகும். திகா மற்றும் சோனேபூருக்கு இடையில் இந்தப் பாலத்தைக் கட்டுவதன் மூலம் இந்தத் தடை நீக்கப்படும். இதன் மூலம் பிராந்தியத்தின் பொருளாதாரத் திறன் உயரும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel