27th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ரூ.155 கோடியில் ஆயிரம் புதிய வகுப்பறை கட்டடங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
- ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.800 கோடி மதிப்பில் 6 ஆயிரம் புதிய வகுப்பறைகளும், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.250 கோடியில் 1,200 வகுப்பறைகளும் என மொத்தம் ரூ.1,050 கோடியில் 7,200 வகுப்பறைகள் கட்டப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
- அதன்படி, கடந்த நிதியாண்டில் ரூ.800 கோடியில் 5,653 புதிய வகுப்பறைகளை கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. இந்தத் திட்டம் குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் என்று ஊரகப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- இந்தத் திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக 37 மாவட்டங்களிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டி முடிக்கப்பட்ட ஆயிரம் வகுப்பறைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், கடந்த செப்டம்பரில் திறந்துவைத்தாா்.
- இப்போது இரண்டாம் கட்டமாக, 34 மாவட்டங்களில் ரூ.155.42 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வகுப்பறைகளை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்தாா்.
- தமிழகத்தில் 21 மாவட்டங்களில் ரூ.20.54 கோடியில் கட்டப்பட்டுள்ள 50 கிராமச் செயலகங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இந்தக் கட்டடங்களில் கிராம ஊராட்சித் தலைவருக்கான அறை, செயலருக்கான அறை, கிராம நிா்வாக அலுவலருக்கான அறை, கூட்ட அறை, இணையதள வசதி, பொதுமக்கள் அமா்வதற்கான வசதி, குடிநீா், கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
- அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தேசிய கிராம சுயாட்சி திட்டம் ஆகியவற்றின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் 102 கிராம ஊராட்சி மன்றக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களை காணொலி வழியாக முதல்வா் திறந்து வைத்தாா்.
- மேலும், நாமக்கல் மாவட்டம் பரமத்தி, தேனி மாவட்டம் போடிநாயக்கனூா், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம், திருச்சி மாவட்டம் மணச்சநல்லூா், கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஆகிய இடங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
- அந்தக் கட்டடங்களையும் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்தாா்.
- சொந்த வாகனம் இல்லாமலேயே வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வாகனங்களை ஓட்டிக் காட்டி, உரிமம் பெறும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக வாங்கப்பட்ட புதிய வாகனங்களை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில், முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
- இலகு ரக வாகன ஓட்டுநா் உரிமம் பெற விரும்பும் பொது மக்களில் பலா், சொந்த வாகனம் இல்லாத காரணத்தால், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளியை அணுக வேண்டிய நிலை உள்ளது.
- இதைத் தவிா்க்கும் பொருட்டு, புதிய திட்டத்தை சட்டப் பேரவையில் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, வட்டாரப் போக்குவரத்து மற்றும் பகுதி அலுவலகங்களில் ஓட்டுநா் உரிமத் தோ்வுக்கென தனி வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.
- அந்த அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் 54 பகுதி அலுவலகங்களை உள்ளடக்கிய 145 அலுவலகங்களில் ஓட்டுநா் தோ்வு நடத்தும் வகையில், 145 இலகு ரக வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய அரசுக்கும் இத்தாலி அரசுக்கும் இடையே குடிபெயர்வு மற்றும் போக்குவரத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு ஏற்பளிப்பதற்கான வெளியுறவு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இந்த ஒப்பந்தம் மக்களுக்கு இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதோடு, மாணவர்கள், திறமையான தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்களின் புலம்பெயர்தலை ஊக்குவிக்கும். மேலும் இரு தரப்பினருக்கும் இடையிலான ஒழுங்கற்ற இடம் பெயர்தல் தொடர்பான பிரச்சினைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும்.
- இத்தாலியில் கல்வி / தொழிற்பயிற்சி முடித்த பின்னர், ஆரம்ப தொழில்முறை அனுபவத்தைப் பெற விரும்பும் இந்திய மாணவர்களுக்கு இத்தாலியில் 12 மாதங்கள் வரை தற்காலிக வசிப்பிடம் வழங்கப்படலாம்.
- இந்திய மாணவர்கள் / பயிற்சியாளர்கள் இத்தாலிய திறன் / பயிற்சி தரங்களில் அனுபவத்தைப் பெற அனுமதிக்கும் தொழில்முறை பயிற்சி, கூடுதல் பாடத்திட்ட களப்பயிற்சி மற்றும் பாடத்திட்ட களப்பயிற்சி தொடர்பாக விரிவான விதிகள் இத்தாலி தரப்பில் உள்ளன.
- 2023-2025 முதல் பருவகால மற்றும் பருவகாலம் அல்லாத தொழிலாளர்களுக்கு கூடுதல் ஒதுக்கீடுகளை இத்தாலி வழங்கியுள்ளது. கூடுதலாக, இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கும் இத்தாலிக்கும் இடையே போக்குவரத்து பாதைகளை மேம்படுத்துவதற்கான கூட்டுப் பணிகளை முறைப்படுத்துகிறது,
- மேலும் சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவை துறைகளில் இந்தியாவின் தகுதிவாய்ந்த தொழில் வல்லுநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒப்பந்தங்கள் மூலம் இது கூட்டுப் பணிக் குழுவின் கீழ் விவாதிக்கப்படும்.
- முறையற்ற குடியேற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இந்திய துணைத் தூதரகம் திறக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- ஆக்லாந்தில் இந்திய துணைத் தூதரகம் திறப்பது இந்தியாவின் ராஜீய தடத்தை அதிகரிக்கவும், இந்தியாவின் அதிகரித்து வரும் உலகளாவிய ஈடுபாட்டைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் தூதரக உறவு பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தவும் உதவும்.
- இந்த நடவடிக்கை இந்தியாவின் உத்திசார் பாதுகாப்பு மற்றும் வணிக நலன்களை மேம்படுத்தவும் ஆக்லாந்தில் உள்ள இந்திய சமூகத்தின் நலனுக்கு சிறப்பாக சேவை செய்யவும் உதவும்.
- 12 மாத காலத்திற்குள் தூதரகம் திறக்கப்பட்டு முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2023 நவம்பர் 07 அன்று கையெழுத்திடப்பட்ட பிரசார் பாரதி, மலேசியாவின் ரேடியோ டெலிவிஷன் மலேசியா இடையேயான ஒலிபரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இது ஒலிபரப்பு, செய்திப் பரிமாற்றம், ஒலி-ஒளி நிகழ்ச்சிகள் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், அந்நாட்டுடனான இந்தியாவின் நட்புறவைக் கணிசமாக அதிகரிக்கவும் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு நாடுகளுடன் பிரசார் பாரதி கையெழுத்திட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
- நாட்டைக் கட்டமைப்பதில் பிரசார் பாரதி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அனைவருக்கும் அர்த்தமுள்ள, துல்லியமான நிகழ்ச்சிகளை வழங்குவதில் தொடர்ச்சியான கவனம் செலுத்துகிறது.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்ற நாடுகளில் நிகழ்ச்சிகளை விநியோகிப்பதிலும், சர்வதேச ஒலிபரப்பாளர்களுடன் கூட்டாண்மையை வளர்ப்பதிலும், புதிய தொழில்நுட்பங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான புதிய உத்திகளை ஆராய்வதிலும் முக்கியமானதாக இருக்கும்.
- கலாச்சாரம், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, செய்தி மற்றும் பிற துறைகளில் இலவச / இலவசமற்ற அடிப்படையில் திட்டங்களை பரிமாறிக்கொள்வது புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதன் மூலம் ஏற்படும் முக்கிய நன்மையாகும்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2024 –ம் ஆண்டு பருவத்தில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- விவசாயிகளுக்கு லாபகரமான விலையை வழங்குவதற்காக, அனைத்து கட்டாய பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை அகில இந்திய அளவில் உற்பத்தி செலவை விட குறைந்தது 1.5 மடங்கு அளவில் நிர்ணயிக்கப்படும் என்று 2018-19-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் அரசு அறிவித்தது.
- அரவை கொப்பரையின் நியாயமான சராசரி தரத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.11,160/- ஆகவும், அரவைக்கு முந்தைய கொப்பரை குவிண்டாலுக்கு ரூ.12,000/- ஆகவும் 2024 பருவத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இதன் மூலம், அரவை கொப்பரைக்கு, 51.84 சதவீதமும், அரவைக்கு முந்தைய கொப்பரைக்கு, 63.26 சதவீதமும் லாபம் கிடைக்கும். இது, அகில இந்திய சராசரி உற்பத்தி செலவை விட, 1.5 மடங்கு அதிகமாகும்.
- அரவைக் கொப்பரை எண்ணெயைப் பிரித்தெடுக்கவும், அரவைக்கு முந்தைய / சமையல் கொப்பரை உணவுக்கும் மத நோக்கங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் மில்லியன் கணக்கான கொப்பரை உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
- 2024 பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அரவை கொப்பரைக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.300/- மற்றும் அரவைக்கு முந்தைய கொப்பரைக்கு முந்தைய பருவத்தை விட குவிண்டால் ஒன்றுக்கு ரூ.250/- அதிகரித்துள்ளது.
- கடந்த 10 ஆண்டுகளில், அரவை கொப்பரை மற்றும் அரவைக்கு முந்தைய கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை 2014-15 -ம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,250 ஆகவும், ரூ.5,500 லிருந்து 2024-25-ம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.11,160 ஆகவும், 2024-25-ம் ஆண்டில் குவிண்டாலுக்கு ரூ.12,000 ஆகவும் அரசு உயர்த்தியுள்ளது.
- அதிக குறைந்தபட்ச ஆதரவு விலை தென்னை விவசாயிகளுக்கு சிறந்த லாபகரமான வருமானத்தை உறுதி செய்வதோடு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வளர்ந்து வரும் தேங்காய் பொருட்களின் தேவையை பூர்த்தி செய்ய கொப்பரை உற்பத்தியை விரிவுபடுத்த விவசாயிகளை ஊக்குவிக்கும்.
- நடப்பு 2023-ம் ஆண்டில், ரூ.1,493 கோடி செலவில் 1.33 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரையை அரசு கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் சுமார் 90,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். நடப்பு பருவத்தில் கொள்முதல் முந்தைய பருவத்தை (2022) விட 227 சதவீதம் அதிகரித்துள்ளது.