Type Here to Get Search Results !

26th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


26th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

3 புதிய குற்றவியல் தடுப்பு சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
  • சமீபத்தில் 150-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருந்தபோது மூன்று புதிய குற்றவியல் தடுப்புச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
  • இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். 
  • 1898 ஆம் ஆண்டு சட்டத்திற்கு பாரதிய நியாய சன்ஹிதா என்றும் 1860 ஆம் ஆண்டு சட்டத்திற்கு பாரதிய சுரக்ஷா சன்ஹிதா என்றும் 1872 ஆம் ஆண்டு சட்டத்திற்கு பாரதிய சாக்‌ஷிய அதினியம் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
யூ-டியூப்பில் 2 கோடி சப்ஸ்கிரைபர்களை எட்டிய முதல் உலகத் தலைவர் பிரதமர் மோடி
  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது தனிப்பட்ட யூடியூப் சேனலில் 2 கோடி சப்ஸ்கிரைபர்களை குவித்த முதல் மற்றும் ஒரே உலகத் தலைவராக தனது பெயரை டிஜிட்டல் வரலாற்றுப் புத்தகங்களில் செதுக்கியுள்ளார்.
  • அவரது யூ-டியூப் பக்கம் 450 கோடி வீடியோ பார்வைகளையும் ஈர்த்துள்ளது.
  • இந்த குறிப்பிடத்தக்க மைல்கல், டிஜிட்டல் தளங்களில் பிரதமரின் திறமையான பயன்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுவது மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களின் சக்தியைப் பயன்படுத்தி மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் அரசியல் தகவல்தொடர்புகளில் ஒரு முன்னுதாரண மாற்றத்தையும் குறிக்கிறது.
  • பிரதமருக்கு அடித்தப்படியாக பிரேசில் அதிபர் 2ஆவது இடத்திலும், உக்ரைன் அதிபர் 3ஆவது இடத்திலும் உள்ளது. உலக வல்லரசான அமெரிக்க அதிபர் 4ஆவது இடத்தில் உள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் யூ-டியூப் சேனல் 10ஆவது இடத்தில் உள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு என்.எல்.சி இந்தியா நிறுவனம் ரூ.4.30 கோடி நன்கொடை வழங்கியது
  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும், தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலியில் சமீபத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும் இந்த நிதி வழங்கப்பட்டது.
  • ரூ.4.30 கோடிக்கான காசோலையை என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான திரு. பிரசன்ன குமார் மொட்டுபள்ளி தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர். ஷிவ் தாஸ் மீனா முன்னிலையில் தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வழங்கினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel