24th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட் - மத்திய அரசு நடவடிக்கை
- இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக இருந்த பா.ஜ., எம்.பி., பிரிஜ் பூஷன் சிங், பாலியல் புகாரில் சிக்கினார். இவருக்கு எதிராக, மல்யுத்த நட்சத்திரங்கள் வினேஷ் போகத், சாக் ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.
- இதனிடையே சமீபத்தில் நடந்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலில் பிரிஜ் பூஷன் ஆதரவாளர்கள் மொத்தமுள்ள 15 பதவிகளில் 13ல் வெற்றி பெற்றனர். பிரிஜ் பூஷனுக்கு நெருக்கமான சஞ்சய் சிங் தலைவர் ஆனார். இதற்கு மல்யுத்த வீரர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.
- சாக்ஷி மாலிக் மல்யுத்த போட்டியில் இருந்து விலகினார். பஜ்ரங் புனியா ' பத்ம ஸ்ரீ விருதை திருப்பி கொடுத்தார். வீரேந்தர் சிங்கும் ' பத்ம ஸ்ரீ' விருதை திருப்பித் தர முடிவு செய்துள்ளார்.
- இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வான சஞ்சய் சிங், 15 மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிகள் உ.பி.,யின் கோண்டாவில் உள்ள நந்தினி நகரில் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.
- இதனிடையே, இந்திய மல்யுத்த கூட்டமைப்பை, மத்திய அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. கூட்டமைப்பிற்கு தேர்வான அனைவரும் பிரிஜ் பூஷன் கட்டுப்பாட்டில் தான் உள்ளனர் என தெரிவித்துள்ள மத்திய அரசு, கூட்டமைப்பின் விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.
- இந்திய கடற்படையின் மும்பை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் ரகசியமாக ஊடுருவும் ஸ்டெல்த் தொழில்நுட்ப வழிகாட்டுதலுடன் கட்டமைக்கப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல் பணியில் ஈடுபடுவதற்கு தயார் நிலையில் உள்ளது.
- இந்தக் கப்பலை 2023 டிசம்பர் 26 அன்று பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைக்க உள்ளார்.
- இந்த நிகழ்வின் மூலம் மொத்தம் உள்ள நான்கு ‘விசாகப்பட்டினம் கிளாஸ்’ அழித்தொழிப்பு போர்க் கப்பல்களில் மூன்றாவது கப்பல் நாளை மறுநாள் கடற்படையில் முறையாக இணைக்கப்பட உள்ளது.
- இந்தப் போர்க்கப்பல் முழுக்க, முழுக்க இந்தியக் கடற்படையின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டது. இந்த வடிவமைப்பின் அடிப்படையில் மும்பையின் மசாகன் டாக் நிறுவனத்தின் மூலம் கப்பல் கட்டப்பட்டது.