Type Here to Get Search Results !

22nd DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


22nd DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை விடுவித்தது மத்திய அரசு
  • 2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையின்படி, மத்திய அரசு, மாநிலங்களுக்கு வரிப் பகிர்வாக இந்த நிதியாண்டில் ரூ.10.21 லட்சம் கோடியை பகிர்ந்தளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த நிலையில், மாநிலங்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர வரிப் பகிர்வில் கூடுதல் தவணையை மத்திய அரசு பகிர்ந்தளித்துள்ளது. அதன்படி, டிசம்பர் மாதத்தில் இரண்டாம் தவணை நிதியாக ரூ.72,961 கோடியை மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் இன்று விடுவித்துள்ளது. 
  • ஏற்கனவே டிசம்பர் 11ஆம் தேதியன்று டிசம்பர் மாதத்துக்கான முதல் வரிப் பகிர்வு தவணை அளிக்கப்பட்டிருந்தது. இதனையும் சேர்த்து மத்திய அரசு இந்த மாதத்தில் அளித்திருக்கும் வரிப் பகிர்வு ரூ.1.46 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு, பல்வேறு சமூக நல நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக மாநில அரசுகளின் கரங்களை வலுப்படுத்த ரூ .72,961.21 கோடி மதிப்புள்ள கூடுதல் தவணை வரிப் பகிர்வை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இந்தத் தவணை 2024, ஜனவரி 10 அன்று மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய வரிப் பகிர்வு தவணையாகும். 2023, டிசம்பர் 11 அன்று ஏற்கனவே விடுவிக்கப்பட்ட ரூ .72,961.21 கோடியை விட இது கூடுதலாகும். 
  • அதன்படி, அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு ரூ.13,088.51 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்துக்கு ரூ.7,338.44 கோடி, மத்தியப்பிரதேசத்துக்கு ரூ.5,727.44 கோடி, மேற்குவங்கத்துக்கு 5,488.88 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.4608.96 கோடி, ராஜஸ்தானுக்கு 4,396.64 கோடி, தமிழகத்துக்கு ரூ.2,976.10 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் 3 வெற்றியை பாராட்டும் விதமாக இஸ்ரோவுக்கு உயரிய பரிசளித்து கவுரவித்த ஐஸ்லாந்து
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. 
  • 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு சந்திரயான்-3 விண்களத்தின் லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி நிலவில் பத்திரமாக தரையிறங்கியது. இதனைத் தொடர்ந்து லேண்டரில் இருந்து வெளியே வந்து நிலவில் தரையிறங்கிய ரோவர் தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது.
  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் இந்த முயற்சிக்குக் கிடைத்த வெற்றியை உலகின் பல்வேறு நாடுகளும் பாராட்டின.இந்த நிலையில் சந்திரயான் 3 வெற்றியை பாராட்டும் விதமாக இஸ்ரோவுக்கு ஐஸ்லாந்து நாடு உயரிய பரிசை வழங்கி கவுரவித்திருக்கிறது. 
  • ஐஸ்லாந்து நாட்டின் ஹூசாவிக் நகர ஆய்வு அருங்காட்சியகம், இஸ்ரோவுக்கு ‘2023- லீப் எரிக்சன் லூனார்’ என்ற உயரிய பரிசை வழங்கியுள்ளது. இதனை இஸ்ரோ சார்பில், ஐஸ்லாந்த் நாட்டுக்கான இந்திய தூதர் பி.ஷியாம் பரிசை பெற்றார். 
பத்திரிகை பதிவு நடைமுறையை எளிதாக்கும் மசோதா நிறைவேற்றம்
  • பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவுக்கான நடைமுறையை எளிமைப்படுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
  • ஆங்கிலேயா் காலத்தில் இயற்றப்பட்ட பத்திரிகை மற்றும் புத்தகங்கள் பதிவுச் சட்டம், 1867-க்கு மாற்றாக இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
  • மாநிலங்களவையில் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் வியாழக்கிழமை குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel