Type Here to Get Search Results !

மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் 2023-ம் ஆண்டு செயல்பாடுகள் / Ministry of Electronics and Information Technology Activities 2023


  • மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் 2023-ம் ஆண்டு செயல்பாடுகள் / Ministry of Electronics and Information Technology Activities 2023: மூன்று நாள் செமிகான் இந்தியா 2023-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார், மேலும் தனது சிறப்பு உரையில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் செமிகண்டக்டர்களின் பங்கு மற்றும் செமிகான் இந்தியா திட்டத்தின் கீழ் செமிகண்டக்டர் உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க இந்தியா எவ்வாறு உறுதிபூண்டுள்ளது என்பதை வலியுறுத்தினார். 
  • இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு மற்றும் ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மின்னணு உற்பத்தியில், குறிப்பாக செமிகண்டக்டர்களில் கவனம் செலுத்தி ஒவ்வொரு துறையையும் மாற்றியமைப்பதில் பிரதமரின் பங்களிப்பை எடுத்துரைத்தார். குஜராத் முதலமைச்சர் திரு. பூபேந்திர படேல் கூட்டத்தில் உரையாற்றினார், உற்பத்தி நிலப்பரப்பில், குறிப்பாக மின்னணு, செமிகண்டக்டர்கள் குறித்து பிரதமரின் தொலைநோக்கு வழிகாட்டுதலைப் பாராட்டினார்.
  • மின்னணுத் துறையில் கவனம் செலுத்தி தொழில்நுட்ப புரட்சியை இந்தியா முன்னெடுத்து வருகிறது. புரட்சியின் ஒரு பகுதியாக, செமிகண்டக்டர்கள் ஒரு தவிர்க்க முடியாத பாத்திரத்தை வகிக்கின்றன மற்றும் தகவல்தொடர்பு, பாதுகாப்பு, வாகன உற்பத்தி, கணினி சாதனங்கள் உள்ளிட்டவை அனைத்து துறைகளிலும் பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. நாட்டின் முன்னேற்றத்தின் முக்கிய தூணான 'மின்னணு' தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை வலுப்படுத்துவதன் மூலம், இந்தியா அதன் மதிப்பு விநியோகத்தை விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும், உலகத் தரம் வாய்ந்த செமிகண்டக்டர் உற்பத்தி சூழலை எளிதாக்கவும் தயாராக உள்ளது.
  • இந்தியா செமிகண்டக்டர் இயக்கம் ஜூலை 2023-ல் செமிகான் இந்தியா 2023 மாநாட்டை 'இந்தியாவின் செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் அமைப்பு' என்ற கருப்பொருளுடன் நடத்தியது. இந்த மாநாட்டில் 23 நாடுகளைச் சேர்ந்த 8,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். செமிகான் இந்தியா 2023-ல் மைக்ரான் டெக்னாலஜி, அப்ளைடு மெட்டீரியல்ஸ், ஃபாக்ஸ்கான், கேடன்ஸ், ஏஎம்டி போன்ற முக்கிய உலகளாவிய நிறுவனங்களின் தொழில்துறை தலைவர்கள் மற்றும் தொழில்துறை சங்கமான செமி ஆகியவற்றின் தொழில்துறை தலைவர்கள் பங்கேற்றனர்.
  • புதுதில்லியில் மூன்று நாள் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய கூட்டாண்மை கண்காட்சியில் 150-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் மற்றும் தயாரிப்புகளை காட்சிப்படுத்தின.
  • செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய கூட்டாண்மையின் உள்வரும் ஆதரவுத் தலைவராக இந்தியா முன்னணியில் உள்ளது, வருடாந்திர ஜிபிஏஐ உச்சிமாநாட்டை 2023 டிசம்பர் 12 முதல் 14 வரை புதுதில்லியில் நடத்தியது. ஜிபிஏஐ உச்சிமாநாடு 28 உறுப்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளை ஒன்றிணைக்கத் தொடங்கியது, செயற்கை நுண்ணறிவின் வளர்ந்து வரும் நிலப்பரப்பை வடிவமைக்கும் அவசர விஷயங்கள் குறித்து ஆழமான விவாதங்களுக்கு ஒரு அசாதாரண தளத்தை உருவாக்கியது.
  • ஜி.பி.ஏ.ஐ புதுதில்லி பிரகடனம் பாதுகாப்பான, நம்பகமான செயற்கை நுண்ணறிவை முன்னெடுப்பது, ஜி.பி.ஏ.ஐ திட்டங்களின் நிலைத்தன்மையை ஆதரிப்பதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றில் ஜி.பி.ஏ.ஐ உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கியது.
  • செயற்கை நுண்ணறிவு திறமை மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான சிந்தனைகள் துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.
  • செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியா திகழ்கிறது.
  • முதல் இந்தியா ஸ்டாக் டெவலப்பர் மாநாடு ஜனவரி 2023 இல் நடைபெற்றது
  • முதல் இந்தியா ஸ்டாக் டெவலப்பர் மாநாட்டை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் தொழில் சங்கங்கள், தொழில்துறை, கணினி ஒருங்கிணைப்பாளர்கள், புத்தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் தலைவர்கள் பங்கேற்றனர்.
  • பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2022 ஏப்ரல் முதல் ஒரு வருட காலத்திற்கு ரூபே டெபிட் கார்டுகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள பீம்-யூபிஐ பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • 2022-23 நிதியாண்டில் ரூபே டெபிட் கார்டுகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள பீம்-யுபிஐ பரிவர்த்தனைகளை (பி 2 எம்) ஊக்குவிப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ரூ .2,600 கோடி நிதி ஒதுக்கீடு உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், கையகப்படுத்தும் வங்கிகளுக்கு முந்தைய 2022-23 நிதியாண்டில் ரூபே டெபிட் கார்டுகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள பீம்-யுபிஐ பரிவர்த்தனைகள் (பி 2 எம்) ஆகியவற்றைப் பயன்படுத்தி பாயிண்ட்-ஆஃப்-சேல் (பிஓஎஸ்) மற்றும் இ-காமர்ஸ் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க நிதி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  • ஜி 20-டிஜிட்டல் கண்டுபிடிப்பு கூட்டணி (டிஐஏ) திட்டம்:மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2023 ஆகஸ்ட்17 முதல் 19வரை பெங்களூரில் ஜி 20-டிஜிட்டல் கண்டுபிடிப்பு கூட்டணி திட்டத்தை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சியை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சரும், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளரும் தொடங்கி வைத்தனர். 23 நாடுகளைச் சேர்ந்த 109 புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் துறை வாரியாக அமர்வுகள் நடைபெற்றன.
  • நிறைவு விழாவில் சிறந்த 30 புத்தொழில் நிறுவனங்களுக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மற்றும் பிற பிரமுகர்கள் விருது வழங்கினர்

ENGLISH

  • Ministry of Electronics and Information Technology Activities 2023: The three-day Semicon India 2023 was inaugurated by the Prime Minister Shri. Narendra Modi inaugurated and in his keynote address emphasized the role of semiconductors in people's daily lives and how India is committed to building a semiconductor manufacturing ecosystem under the Semicon India programme. Mr. Ashwini Vaishnav, Minister of Electronics and Information Technology, Communications and Railways, Government of India highlighted the Prime Minister's contribution in transforming every sector in electronics manufacturing, especially semiconductors. Gujarat Chief Minister Mr. Addressing the gathering, Bhupendra Patel appreciated the Prime Minister's visionary guidance in the manufacturing landscape, especially electronics and semiconductors.
  • India is leading a technological revolution with a focus on the electronics sector. As part of the revolution, semiconductors are playing an indispensable role and have applications in all sectors including communication, defense, automotive manufacturing, computer equipment. India is poised to expand and deepen its value delivery and facilitate a world-class semiconductor manufacturing environment by reinforcing the vision of an 'electronic' self-reliant India as a key pillar of the country's progress.
  • The India Semiconductor Movement organized the Semicon India 2023 conference in July 2023 with the theme 'India's Semiconductor Ecosystem'. More than 8,000 people from 23 countries attended the conference. SemiconIndia 2023 was attended by industry leaders from key global companies such as Micron Technology, Applied Materials, Foxconn, Cadence, AMD and industry association Semi.
  • Over 150 industrial companies and leading technology companies showcased their artificial intelligence applications and products at the three-day Global Partnership for Artificial Intelligence Expo in New Delhi.
  • India takes the lead as the incoming support leader of the Global Partnership for Artificial Intelligence, hosting the annual GPAI Summit 2023 from December 12 to 14 in New Delhi. The GBAI Summit began bringing together representatives from 28 member states and the European Union, creating an extraordinary platform for in-depth discussions on the urgent issues shaping the emerging landscape of artificial intelligence.
  • The GPAI New Delhi Declaration created a consensus among GPAI members on advancing safe, reliable artificial intelligence and a commitment to support sustainability of GPAI projects.
  • India plays a leading role in the field of artificial intelligence talent and ideas related to artificial intelligence.
  • India is a global hub for artificial intelligence innovation.
  • The first India Stack Developer Conference was held in January 2023
  • The first India STOCK Developer Conference was inaugurated by Mr Rajeev Chandrasekhar, Minister of State for Electronics and Information Technology and Skill Development, Entrepreneurship. More than 100 digital leaders from trade associations, industry, IT integrators, and innovation companies participated in the event.
  • Prime Minister Mr. The Union Cabinet meeting chaired by Narendra Modi approved the incentive scheme to promote RuPay debit cards and low-value BIM-UBI transactions for a period of one year from April 2022.
  • In the financial year 2022-23, there is an allocation of Rs 2,600 crore for the approved incentive scheme to promote RuPay debit cards and low-value BEAM-UPI transactions (P2M). Under the scheme, acquiring banks will be given financial incentives to promote point-of-sale (POS) and e-commerce transactions using RuPay debit cards and low-value BEAM-UPI transactions (P2M) in the preceding financial year 2022-23.
  • G20-Digital Innovation Alliance (DIA) Program: The Ministry of Electronics and Information Technology organized the G20-Digital Innovation Alliance Program in Bangalore from 17th to 19th August 2023. The event was inaugurated by the Minister of State for Electronics and Information Technology and the Union Secretary for Information Technology. 109 industrial companies from 23 countries participated in the event and sector-wise sessions were held.
  • At the closing ceremony, the Minister of Electronics and Information Technology and other dignitaries presented awards to the top 30 industrial companies

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel