Type Here to Get Search Results !

நாட்டின் பாதுகாப்பான நகரம் 2023 / INDIA'S SAFEST CITY 2023

  • நாட்டின் பாதுகாப்பான நகரம் 2023 / INDIA'S SAFEST CITY 2023: தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்திய அறிக்கையின்படி, மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதல் இடத்தைப் பெற்றுள்ளது. 78.2 என்ற குற்ற விகிதத்துடன் (IPC rate) இந்தியாவின் பாதுகாப்பான நகரமாக நீடிக்கிறது.
  • இந்தியாவில் பல நகரங்கள் பாதுகாப்பாக வசிக்கும் அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. இந்த நகரங்கள் குறைந்த குற்ற விகிதங்கள் அடிப்படையில் பாதுகாப்பானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை அங்கு வசிப்பவர்களுக்கு ஒட்டுமொத்த பாதுகாப்பு உணர்வை அளிக்கின்றன.
  • சட்ட அமலாக்கம், சமூக ஈடுபாடு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் போன்றவை இந்த நகரங்களின் சிறப்பு அம்சங்களாக உள்ளன. இதனால், குற்றங்கள் மிகக் குறைவாக இருப்பது மட்டுமின்றி பாதுகாப்பு உணர்வும் ஏற்படுகிறது.
  • தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) என்பது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் உள்ளூர் சட்டங்கள் (SLL) ஆகியவற்றின் அடிப்படையில் குற்றம் தொடர்பான தகவல்களைச் சேகரித்து ஆய்வு செய்யும் பணியில் உள்ள அரசாங்க அமைப்பாகும். இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது. இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
  • கொல்கத்தாவுக்கு அடுத்த 2வது பாதுகாப்பான நகரமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை விளங்குகிறது. சென்னையில் குற்ற விகிதம் 178.5 ஆக உள்ளது. மூன்றாவது இடத்தையும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு நகரமான கோயம்புத்தூர் பிடித்துள்ளது. கோவையில் குற்ற விகிதம் 211.2 ஆக உள்ளது.

ENGLISH

  • INDIA'S SAFEST CITY 2023: According to the latest report by the National Crime Records Bureau (NCRB), Kolkata, the capital of the state of West Bengal, has topped the list for the third year in a row. It remains the safest city in India with a crime rate (IPC rate) of 78.2.
  • Many cities in India have safe living features. These cities are identified as safe based on low crime rates. These provide an overall sense of security to the residents there.
  • Law enforcement, community involvement and crime prevention activities are the special features of these cities. Thus, not only crime is very low but also a sense of security.
  • The National Crime Records Bureau (NCRB) is a government agency tasked with collecting and analyzing crime-related information under the Indian Penal Code (IPC) and Local Laws (SLL). Its headquarters is located in New Delhi. It functions under the Union Ministry of Home Affairs.
  • Chennai, the capital of Tamil Nadu, is the 2nd safest city after Kolkata. The crime rate in Chennai is 178.5. Coimbatore, another city in Tamil Nadu, has taken the third place. The crime rate in Coimbatore is 211.2.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel