Type Here to Get Search Results !

ஆயுஷ் அமைச்சகத்தின் 2023-ம் ஆண்டு செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் / 2023 Activities and Achievements of Ministry of AYUSH

  • ஆயுஷ் அமைச்சகத்தின் 2023-ம் ஆண்டு செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் / 2023 Activities and Achievements of Ministry of AYUSH: ஆயுஷ் அமைச்சகம் தேசிய மற்றும் சர்வதேச நிலைகளில் தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் குறிக்கோள்களை செயல்படுத்துவதில் 2023-ம் ஆண்டில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. 
  • இந்த ஆண்டு இந்திய பாரம்பரிய மருத்துவ கலாச்சாரம் உலக அளவில் அதிகம் பரவியுள்ளது.

2023-ம் ஆண்டு செயல்பாடுகள் மற்றும் சாதனைகள்

  • ஆயுஷ் அமைச்சகத்தின் 2023-ம் ஆண்டு செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் / 2023 Activities and Achievements of Ministry of AYUSH: ஆயுஷ் அமைச்சகத்தின் 2023-ம் ஆண்டின் முதல் சிந்தனை முகாம் பிப்ரவரி மாதம் அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டது. 
  • ஆயுஷ் மருத்துவ முறையில் டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம், எதிர்கால முன்முயற்சிகள், சவால்கள், ஆயுஷ் கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம், ஆயுஷ் மருந்து தொழில்கள், ஆயுஷ் தயாரிப்புகளைத் தரப்படுத்தல், பொது சுகாதாரத்தில் ஆயுஷ், போன்றவை குறித்த அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
  • பாரம்பரிய மருந்துகள் தொடர்பான அம்சம் புதுதில்லி ஜி 20 தலைவர்கள் உச்சிமாநாட்டு பிரகடனத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
  • நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடந்த 2023-ம் ஆண்டு சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். முன்னெப்போதும் இல்லாத வகையில், இரண்டு கின்னஸ் உலக சாதனைகள் இதில் நிகழ்த்தப்பட்டன.
  • 9வது சர்வதேச யோகா தினத்தின் சிறப்பம்சமாக ஓஷன் ரிங் ஆஃப் யோகா என்ற தனித்துவமான அம்சம் நடத்தப்பட்டது. இதில் 19 இந்திய கடற்படை கப்பல்களில் சுமார் 3500 கடற்படை வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச கடல்களில் யோகா தூதர்களாக 35,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்தனர்.
  • ஆர்க்டிக் முதல் அண்டார்டிகா வரையிலான யோகா இந்த ஆண்டு யோகா தினத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.
  • குஜராத் பிரகடனம் - பாரம்பரிய மருத்துவம் குறித்த முதல் உலகளாவிய உச்சி மாநாடு (17-18 ஆகஸ்ட் 2023) உலக சுகாதார அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவம் மற்றும் அதை நோக்கி செயல்படுவதற்கான உலக சுகாதார அமைப்பின் உறுதிப்பாட்டை வலியுறுத்தி குஜராத் பிரகடனம் வெளியிடப்பட்டது.
  • ஜி 20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தின் போது "பாரம்பரிய மருத்துவம் குறித்த ஜி 20 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மாநாடு" நடைபெற்றது, இதன் மூலம் ஜி 20 நாடுகள் தங்கள் நாடுகளில் பாரம்பரிய மருத்துவத்தின் செயல்பாடுகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து பேசின.
  • பிரதமர் திரு நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் 'ஆயுஷ் துறைகள்' பற்றி குறிப்பிட்டது அதன் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை அளித்தது.
  • நவம்பர் 10, 2023 அன்று 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயுர்வேத தினம் அனுசரிக்கப்பட்டதால் ஆயுர்வேதம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பிரபலமடைந்துள்ளது.
  • ஆயுஷ் அமைச்சகம் பாரம்பரிய மருத்துவத் துறையில் உலக சுகாதார அமைப்புடன் திட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த நடவடிக்கை உலகளாவிய உத்தி சார் செயல்திட்டத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆயுஷ் விசா அறிமுகம் - ஆயுஷ் விசா அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை பெற இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினருக்கு சிறப்பு விசா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுஷ் விசா மருத்துவ பயணத்தை அதிகரிக்கும் என்பதுடன் இந்தியாவை ஒரு மருத்துவ மையமாக மாற்றும்.
  • தேசிய ஆயுஷ் இயக்கம் - தேசிய ஆயுஷ் இயக்கத்தின் முதன்மைத் திட்டம் ஆயுஷ், சுகாதார சேவைகளின் அடிப்படையில் நீண்டகால தாக்கத்தைக் கொண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 6.91 கோடி மக்கள் ஆயுஷ் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் மூலம் பயனடைந்தனர்.
  • ஆயுஷ் அமைச்சகம் அதன் பல்வேறு திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பல்வேறு உச்சி மாநாடுகள் மற்றும் மாநாடுகள், ஆயுஷ் பர்வ் மற்றும் எக்ஸ்போ போன்றவற்றின் மூலம் வடகிழக்கு பிராந்தியத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை விரைவுபடுத்துவதில் கணிசமான பங்களிப்பை வழங்கியது.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதலாவது ஆயுஷ் மாநாடு குவஹாத்தியில் மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 19 நாடுகளைச் சேர்ந்த 56-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்றனர்.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதலாவது ஆயுஷ் மாநாட்டில் ரூ. 590 கோடி வர்த்தக நடவடிக்கைகள் நடைபெற்றன. இந்த மாநாட்டின் போது வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையே 50 க்கும் மேற்பட்ட நேருக்கு நேர் சந்திப்புகள் நடத்தப்பட்டன.
  • பிப்ரவரி 11, 2023 அன்று, புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் யுனானி தினம் கொண்டாடப்பட்டது. யுனானி தினத்தை முன்னிட்டு யுனானி மருத்துவம் குறித்த சர்வதேச மாநாட்டையும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் தொடங்கி வைத்தார்.
  • உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு, ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சில் சார்பில், ஒரு நாள் அறிவியல் மாநாடு, தில்லியில் நடைபெற்றது. ஒட்டுமொத்த குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான ஆதார அடிப்படையில் ஹோமியோபதி சிகிச்சையை ஊக்குவித்தல் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டது.
  • ஆயுஷ் ஆராய்ச்சிகளை ஆவணப்படுத்துதல் - ஆயுஷ்துறையில் பல்வேறு தரப்பினர் மேற்கொள்ளும் விரிவான ஆராய்ச்சி பணிகளின் மிகப்பெரிய தொகுப்பு பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆயுஷ் ஆராய்ச்சி தளத்தி்ல் 28.12.2023 வரை, 41,743 ஆராய்ச்சி வெளியீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தத் தளம் ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சிக் கவுன்சில் (சி.சி.ஆர்.ஏ.எஸ்) மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

ENGLISH

  • 2023 Activities and Achievements of Ministry of AYUSH: The Ministry of AYUSH has achieved a significant milestone in the year 2023 in implementing visionary programs and objectives at national and international levels. This year Indian traditional medicine culture has become more global.

2023 Activities and Achievements

  • 2023 Activities and Achievements of Ministry of AYUSH: The Ministry of AYUSH's first Ideation Camp of 2023 was organized in Assam's Kaziranga National Park in February. Sessions were organized on Digital Health and Technology in AYUSH Medical System, Future Initiatives, Challenges, AYUSH Education, Skill Development, Employment Generation, AYUSH Pharmaceutical Industries, Standardization of AYUSH Products, AYUSH in Public Health, etc.
  • An aspect related to traditional medicines was incorporated in the New Delhi G20 Leaders' Summit Declaration.
  • Prime Minister Shri. Narendra Modi participated. In an unprecedented manner, two Guinness World Records were held.
  • The highlight of the 9th International Day of Yoga was a unique feature called Ocean Ring of Yoga. In this, around 3500 naval personnel in 19 Indian Navy ships traveled more than 35,000 km as yoga ambassadors in national and international waters.
  • Yoga from the Arctic to Antarctica is another highlight of this year's Yoga Day.
  • Gujarat Declaration - First Global Summit on Traditional Medicine (17-18 August 2023) organized by WHO. In this the Gujarat Declaration was issued emphasizing the importance of traditional medicine and the World Health Organization's commitment to work towards it.
  • During the G20 Health Ministers' Meeting, the "G20 Health Ministers' Conference on Traditional Medicine" was held, through which the G20 countries discussed the activities and prospects of traditional medicine in their countries.
  • Prime Minister Shri Narendra Modi's mention of 'AYUSH Sectors' in Manat's Voice program contributed significantly to its development.
  • With Ayurveda Day being observed in more than 100 countries on November 10, 2023, Ayurveda has gained unprecedented popularity.
  • The Ministry of AYUSH has signed a Program Cooperation Agreement with the World Health Organization in the field of Traditional Medicine. The initiative aims to develop a global strategic plan of action.
  • Introduction of AYUSH Visa - With the introduction of AYUSH Visa, a special visa scheme has been introduced for foreigners coming to India to seek treatment under Indian medical systems. AYUSH visa will increase medical travel and make India a medical hub.
  • National AYUSH Movement - AYUSH, the flagship program of the National AYUSH Movement, has long-term impact in terms of health services. In the first 10 months of 2023, 6.91 crore people benefited from AYUSH Health and Wellbeing Centres.
  • The Ministry of AYUSH has contributed significantly in accelerating the pace of socio-economic development of the North East region through its various schemes, infrastructure development and various summits and conferences, AYUSH Parv and Expo etc.
  • The first AYUSH conference of the Shanghai Cooperation Organization was held in Guwahati in March. More than 56 exhibitors from 19 countries participated in this conference.
  • In the first AYUSH Conference of Shanghai Cooperation Organization Rs. 590 crores of business transactions were conducted. More than 50 face-to-face meetings between buyers and sellers were held during the conference.
  • On February 11, 2023, Unani Day was celebrated at Vigyan Bhawan, New Delhi. AYUSH Minister Mr. Sarbananda Sonowal also inaugurated the International Conference on Unani Medicine on the occasion of Unani Day.
  • On the occasion of World Homeopathy Day, a one-day scientific conference was held in Delhi by the Central Homeopathic Research Council under the Ministry of AYUSH. The conference was held with the aim of promoting evidence-based homeopathic treatment for the health and well-being of the entire family.
  • Documenting AYUSH Research - The largest collection of comprehensive research work carried out by various parties in the field of AYUSH is uploaded on a dedicated website. As on 28.12.2023, 41,743 research publications have been registered on AYUSH Research Platform. This site is managed by Central Council of Ayurvedic Research (CCRAS), Ministry of AYUSH.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel