Type Here to Get Search Results !

17th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


17th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

காசி தமிழ் சங்கமம் 2023-ஐப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
  • காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வை வாரணாசியில் உள்ள நமோ படித்துறையில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 
  • இரண்டு கலாச்சாரங்களுக்கும் இடையிலான பண்டைய அறிவுசார், கலாச்சார, ஆன்மீக மற்றும் கைவினை இணைப்பை மீண்டும் கண்டுபிடித்து வலுப்படுத்தும் நோக்கத்தையும் இந்த விழா கொண்டுள்ளது. 
  • 15 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், தமிழகம் மற்றும் வாரணாசியைச் சேர்ந்த பல்வேறு கலைக்குழுவினர் காசியில் கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
உலகிலேயே மிகப்பெரிய வைரச் சந்தையை திறந்துவைத்த பிரதமர் மோடி
  • உலகிலேயே மிகப்பெரிய வைரச் சந்தையை குஜராத் மாநிலம் சூரத்தில் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்தியாவில் அதிகளவில் வைர நகைகள் தயாரிக்கும் மையமாக சூரத் திகழ்கிறது.
  • இங்கு சுமார் 36 ஏக்கர் பரப்பளவில் 3 ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட வைர வர்த்தக மையம் கட்டப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, சூரத் டைமண்ட் போர்ஸ் என்று அழைக்கப்படும் இந்த வைரச் சந்தையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
  • அதன்பிறகு அந்த வைர வர்த்தக மையத்தின் மாதிரி தோற்றத்தையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்த வைர வர்த்தக மையத்தில் 175 நாடுகளைச் சேர்ந்த 4,200 வர்த்தகர்கள் தங்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. 
  • இதன் மூலம் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டடமாக சுமார் 80 ஆண்டுகள் இருந்த அமெரிக்காவின் பென்டகன் கட்டடத்தை இந்த வைர அலுவலக கட்டட அலுவலகம் முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய் ஹசாரே டிரோபி - முதல்முறையாக கோப்பை வென்று வரலாறு படைத்த ஹரியானா
  • உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் முக்கிய தொடரான விஜய் ஹசாரே தொடர் கடந்த நவம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்திய தலைநகரங்களை மையமாகக் கொண்ட 38 அணிகள் இந்த தொடரில் 5 பிரிவுகளின் கீழ் பங்கேற்றது. 
  • ஹரியானா மற்றும் ராஜஸ்தான் அணிகள் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தின. நடைபெற்ற கோப்பைக்கான பைனலில் முதலில் பேட்டிங் செய்த ஹரியானா அணி, தொடக்க வீரர் அன்கிட் குமார் (88 ரன்கள்) மற்றும் கேப்டன் மெனரியாவின் (70) அபாரமான ஆட்டத்தால் 287 ரன்கள் என்ற நல்ல டோட்டலை எட்டியது. 
  • 288 ரன்கள் என்ற சற்று கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 257 ரன்னுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ராஜஸ்தான் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 
  • பெரிய நட்சத்திர வீரர்கள் இல்லையென்றாலும் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹரியானா அணி முதல்முறையாக விஜய் ஹசாரே டிரோபியை வென்று வரலாறு படைத்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel