15th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
எலக்ட்ரானிக்ஸ்' ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்
- நடப்பு நிதியாண்டில், ஏப்., முதல் அக்., வரையிலான காலத்தில், இந்தியாவில் இருந்து மாநில வாரியாக, எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி தொடர்பான தரவுகள் வெளியாகியுள்ளன.இந்த காலத்தில், தமிழகம், 39,600 கோடி ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்து, நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.
- மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு, 31 சதவீதம். இரண்டாம் இடத்தில் உள்ள மாநிலத்தை விட, தமிழகத்தின் ஏற்றுமதி இரு மடங்கு அதிகம். நடப்பு முழு நிதியாண்டில், தமிழகத்தின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி மதிப்பு, 66,400 கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
- இது, முந்தைய ஆண்டில், 44,500 கோடி ரூபாயாக இருந்தது.தமிழக அரசின் கொள்கைகள், திறமையான பணியாளர்கள், வலுவான உள்கட்டமைப்பு ஆகியவற்றினால், ஏற்றுமதி அதிகரித்துள்ளது. எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழகத்தின் வளர்ச்சி பாதை வெறும் புள்ளி விபரம் மட்டும் அல்ல, மாநிலத்தின் வளர்ச்சி அடைந்து வரும் சுற்றுச்சூழல் அமைப்புக்கான சான்று.
- நடப்பு நிதியாண்டில் அக்., வரை இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி மதிப்பு, 1.28 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அதில், 21,400 கோடி ரூபாய் மதிப்புடன் உ.பி., இரண்டாவது இடத்திலும்; 19,000 கோடி ரூபாயுடன் கர்நாடகா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
- நம் அண்டை நாடான இலங்கை, கடந்தாண்டு துவக்கத்தில் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதனால், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்ததுடன், அவற்றை வெளிநாடுகளில் இருந்து வாங்க முடியாத நிலையில், அரசின் நிதிநிலை மோசமாக இருந்தது.
- பொருளாதாரத்தை மீட்கவும், கடன்களில் இருந்து மீளவும், சர்வதேச நிதியத்தின் உதவியை இலங்கை நாடியது. இதை ஏற்று, கடன்களை சீரமைக்க, இலங்கைக்கு, 3,000 கோடி ரூபாய் கடன் வழங்குவது தொடர்பாக ஆய்வுகள் நடந்து வந்தது.
- இதைத் தொடர்ந்து, 48 மாதங்களில் இந்தக் கடனை திருப்பி செலுத்தும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு மொத்தமாக, 24,000 கோடி ரூபாய் கடன் அளிக்க சர்வதேச நிதியம் முன் வந்துள்ளது.
- இலங்கையின் மொத்த கடனில், 52 சதவீதம் சீனாவிடம் இருந்து வாங்கியதே. கடனைத் திருப்பி செலுத்துவது தொடர்பாக, இலங்கை மற்றும் சீனா இடையே பேச்சு நடந்து வந்தது.
- இதில் இழுபறி நீடித்ததால், சர்வதேச நிதியம், இலங்கைக்கு கடன் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, 3,000 கோடி ரூபாய் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது. இதையும் சேர்த்து, சர்வதேச நிதியம், இலங்கைக்கு மொத்தம், 5,500 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபையில் ஐ.நா.வின் 28-ஆவது பருவநிலை பாதுகாப்பு மாநாடு கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்தது.
- இதன் முடிவில் எரிசக்திக்காக நிலக்கரி பயன்பாட்டைக் குறைக்க வலியுறுத்தும் சா்வதேச ஒப்பந்தம் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டது.
- இந்த ஒப்பந்தத்தின்படி புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்ஷியஷுக்குள் கட்டுப்படுத்தும் வகையில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- இதற்காக புதைபடிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது உள்பட 8 அம்ச திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- எரிசக்திக்காக நிலக்கரியைப் பெருமளவில் பயன்படுத்தும் நாடுகளான இந்தியா, சீனாவுக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.
- ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவி, கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் ஆலைகள், கழிவுகளிலிருந்து பொருள்களை பிரித்தெடுக்கும் வசதிகள், பிளாஸ்டிக் கழிவுகளை பதப்படுத்தும் வசதிகள் உள்ளிட்ட கழிவு மேலாண்மை வசதிகளை மேம்படுத்திட ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திடக்கழிவு மேலாண்மையில், சர்வதேச அளவில் பின்பற்றப்படும் வழிமுறைகள், புது தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்தல், பருவநிலை மற்றும் பேரிடர் எதிர்ப்பு முறைகளை கையாளுதல் ஆகியவற்றை அறிமுகப்படுத்த தூய்மை இந்தியா திட்டம் இலக்காக கொண்டுள்ளதாகவும், 8 மாநிலங்களை உள்ளடக்கிய 100 நகரங்களில், கழிவு மேலாண்மை வசதிகளை மேம்படுத்திடவும், தூய்மைப் பணிகளில், தனியார் துறை பங்களிப்பை ஈடுபடுத்திடவும், பெண்கள் பங்களிப்பை வலுப்படுத்திடவும் தூய்மை இந்தியா திட்டம் இலக்காக கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கூடுதலாக, சமூக பயன்பாட்டுகான கழிவறைகள் கட்டுமானத்திற்கும், இந்த நிதியுதவி பயனளிக்கும் எனவும், கடனுதவியைத் தவிர்த்து, ஆசிய வளர்ச்சி வங்கி கூடுதல் தொகையாக, 3.15 மில்லியன்(31.50 லட்சம்) டாலர்கள் அளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதன்மூலம், 2026ஆம் ஆண்டுக்குள் அனைத்து நகரங்களையும் குப்பையில்லா நகரமாக மாற்ற தூய்மை இந்தியா திட்டம் வழிவகுக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
- ஆசியான்-இந்தியா சிறுதானிய திருவிழாவை மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
- இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர்கள் கைலாஷ் சவுத்ரி, சுஷ்ரி ஷோபா கரந்தலாஜே, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் மனோஜ் அஹுஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு, விழிப்புணர்வை அதிகரிப்பதையும், சிறுதானியங்கள் மற்றும் சிறுதானியங்கள் சார்ந்த பொருட்களுக்கு ஒரு பெரிய சந்தையை நிறுவுவதையும் இந்த விழா நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இவ்விழாவில் கலந்து கொண்ட இந்தியா, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா, தானியங்களின் உற்பத்தி மற்றும் நுகர்வை மேம்படுத்துவதற்கான அரசின் கொள்கைகள் மற்றும் சந்தை கண்டுபிடிப்புகளை எடுத்துரைத்தார்.
- தெலங்கானா மாநிலத்தில் உள்ள முலுகுவில் சம்மக்கா சாரக்கா மத்தியப் பழங்குடியினர் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக மத்தியப் பல்கலைக்கழகங்கள் சட்டம், 2009-ஐ மேலும் திருத்துவதற்கான மத்தியப் பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா, 2023 மாநிலங்களவையில் டிசம்பர் 13, 2023 அன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- இப்பல்கலைக்கழகம் ரூ.889.07 கோடி செலவில் அமைக்கப்படும். இப்பல்கலைக்கழகத்தில் 11 துறைகளைக் கொண்ட 5 பள்ளிகளின் கீழ் பட்டப்படிப்பு, முதுகலை மற்றும் முனைவர் நிலை படிப்புகள் இருக்கும். இந்தப் பழங்குடியினர் பல்கலைக்கழகத்தின் முதல் ஏழு ஆண்டுகளில் மொத்தம் 2790 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் பணியாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- இப்பல்கலைக்கழகம் நிறுவப்படுவதன் மூலம் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும். தவிர, வெளியிடப்பணி/ ஒப்பந்த அடிப்படையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இதன் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகள் பல்வேறு சேவைகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் மூலம் மேம்படுத்தப்பட்டு மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
- தெலங்கானாவின் பழங்குடி சமூகங்களைப் பாதுகாக்க அனுப்பப்பட்ட ஆதி பராசக்தியின் வெளிப்பாடுகள் என்று நம்பப்படும் தாய் மற்றும் மகள், சம்மக்கா மற்றும் சரலம்மா (பொதுவாக சாரக்கா என்று அழைக்கப்படுகிறார்கள்) ஆகியோரின் நினைவாக இப்பல்கலைக்கழகத்திற்கு "சம்மக்கா சாரக்கா மத்தியப் பழங்குடிப் பல்கலைக்கழகம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.