10th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தீயணைப்புப் படை வீராங்கனைகளாக முதல்முறையாக பெண்கள்
- பாலின பாகுபாடிற்கு எதிரான முயற்சியாக தீயணைப்புப் படை வீராங்கனைகள் நியமிக்கப்படுவதாக வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.
- வங்கதேச தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில் இதற்கு முன்பு பெண்கள் பணிபுரிந்துள்ளனர். எனினும், தீயணைப்புப் படை வீராங்கனைகளாக பெண்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
- தலைநகர் தாகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 15 வீராங்கனைகள் தீயணைப்புப் படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- உடல் தகுதி, மருத்துவ பரிசோதனை, எழுத்துத் தேர்வு மூலம் 2,707 விண்ணப்பங்கள் தீயணைப்புப் படை வீராங்கனைகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் முதல் கட்டமாக 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.
- டெல்லி ராஜ்காட் அருகே உள்ள காந்தி தர்ஷனில் 10 அடி உயர மகாத்மா காந்தி சிலையை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2023 டிசம்பர் 10, அன்று திறந்து வைத்தார்.