Type Here to Get Search Results !

தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் தேர்வு ரிசல்ட் தேதி வெளியீடு / TNSTC DRIVER & CONDUCTOR EXAM RESULT DATE 2023

தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் தேர்வு ரிசல்ட் தேதி வெளியீடு / TNSTC DRIVER & CONDUCTOR EXAM RESULT DATE 2023

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் உடன் நடத்துநர் பதவிக்கான காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட எழுத்து தேர்விற்கான விடைக் குறிப்பு (Answer Key) மற்றும் தேர்வு மதிப்பெண் நாளை மறுநாள் (27-11-2023) வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஒட்டுநர் உடன் நடத்துநர் பதவிக்கான காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக நிரப்பும் பொருட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்டு தகுதி பெற்றவர்களுக்கும், (ஆன்லைன்) இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களில் தகுதி பெற்றவர்களுக்கும் என மொத்தம் 11,117 நபர்களுக்கு சாலை போக்குவரத்து நிறுவனம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய எழுத்துத் தேர்வு 19.11.2023 அன்று தமிழகத்தின் 10 மாவட்டங்களிலுள்ள 20 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

மேற்படி எழுத்துத் தேர்வில் 9,352 நபர்கள் பங்கேற்றுள்ளனர். 1765 நபர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்கவில்லை மேலும் எழுத்துத்தேர்வுக்குரிய விடைக் குறிப்பு அண்ணா பல்கலைக் கழக இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் எழுத்துத் தேர்வில் பங்கேற்ற நபர்களின் மதிப்பீடு செய்யப்பட்ட OMR விடைத்தாள் மற்றும் மதிப்பெண் www.arasubus.tn.gov.in வழியாக மேற்படி இணையதளத்திலேயே 27.11.2023 அன்று காலை 09.30 மணியளவில் வெளியிடப்படும் என்றும், எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்கள் தங்களது (Application no) (Registration no)- உபயோகித்து OMR விடைத்தாளை சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

எழுத்துத் தேர்வு மதிப்பெண் வெளியீட்டிற்கு பின்னர், அரசாணை (நிலை) எண்.25, போக்குவரத்து (சி1) துறை, நாள் 14.02.2023-ல் குறிப்பிட்டுள்ளபடி சான்றிதழ் சரிபார்ப்பு, ஓட்டுநர் நடைமுறை தேர்வு மற்றும் நேர்காணல் மேற்கொள்ளப்படும். 

சான்றிதழ் சரிபார்ப்பின் போது கல்வி தகுதி, வயது, சாதி, ஒட்டுநர் மற்றும் நடத்துநர் உரிமம் மற்றும் உடல் தகுதி ஆகியவற்றில் தருதியானவர்கள் மட்டுமே ஓட்டுநர் நடைமுறை தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel