Type Here to Get Search Results !

ஒரே நாடு ஒரே கல்வி அட்டை / APAAR CARD

  • ஒரே நாடு ஒரே கல்வி அட்டை / APAAR CARD: 'ஒரே நாடு ஒரே கல்வி அட்டை' என்ற அடிப்படையில் APAAR அட்டையை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இந்த புதிய அட்டை ஆதார் அட்டை போல இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
  • இந்த புதிய அட்டையில் மாணவர்களுக்கு தனித்துவமான ஐடி இருக்கும். அதனை ஸ்கேன் செய்யும் போது மாணவர்களின் கல்வி பற்றிய அனைத்து தகவல்களையும் அறியலாம். இந்த அட்டைக்கு Automated Permanent Academic Account Registry (APAAR) என்று பெயர் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாக் உள்ளது.
  • கல்வியை தடையற்றதாகவும் திறமையானதாகவும் மாற்றுவதற்கு மாணவர்கள், பள்ளிகள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையே ஒரு இணைப்பு பாலமாக APAAR அட்டை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 
  • மாணவர்கள் எந்தப் பள்ளி படித்திருந்தாலும் அல்லது எந்த கல்லூரியில் படித்தாலும், அவர்களின் கற்றல் பயணம் மற்றும் கல்வி முன்னேற்றத்தைக் கண்காணிக்க இது உதவும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களை மாணவர்கள் அனைத்து இடங்களுக்கும் கட்டாயம் எடுத்துச் செல்வதற்கான தேவையை இந்த அட்டையின் மூலம் குறைக்க உதவுகிறது. இந்த அட்டை அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படும்
  • அதே போல அபார் அடையாள அட்டை பள்ளியிலிருந்து வேறு பள்ளிகளுக்கு மாறுவதற்கும் மற்றும் கல்லூரிகளுக்கு மாறுவதையும் எளிமையாக்கும். இது குறித்த மேலதிக தகவல்களுக்கு abc.gov.in இணையதளத்தை பார்க்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ENGLISH

  • APAAR CARD: The central government is going to bring APAAR card on the basis of 'One Nation One Education Card'. This new card will be issued to all students across India like Aadhaar card.
  • This new card will have a unique ID for the students. When you scan it, you can know all the information about the student's education. It is reported that this card will be named as Automated Permanent Academic Account Registry (APAAR).
  • The central government has announced that the APAAR card will be introduced as a bridge between students, schools and governments to make education seamless and efficient.
  • It is also said to be designed to help students track their learning journey and academic progress, regardless of which school they attend or which college they attend.
  • This card helps reduce the need for students to carry documents such as mark sheets and certificates everywhere. This card will be issued to both government and private school students
  • Similarly, Aabar ID card will facilitate transfer from school to other schools and transfer to colleges. For more information on this, please visit the website abc.gov.in, the central government said.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel