Type Here to Get Search Results !

8th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


8th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

குறுகிய தூர 'பிரளயம்' ஏவுகணை சோதனை வெற்றி
  • நிலத்தில் இருந்து நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்ல, குறுகிய தூர 'பிரளயம்' ஏவுகணையை மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்பிஓ) தயாரித்துள்ளது. 
  • இந்த ஏவுகணை ஒடிசாவில் பாலசோர் கடற்கரை அருகில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து பரிசோதனைக்காக நேற்று காலை 9.50 மணிக்கு ஏவப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்தது. 
  • பிரளயம் ஏவுகணை 350 கி.மீ. முதல் 500 கி.மீ. வரை சென்று இலக்கைதாக்க வல்லது. 500 கிலோமுதல் 1,000 கிலோ வரையிலானஎடையை தாங்கிச் செல்லக்கூடியது. 
  • இந்தியா - பாகிஸ்தான் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் இந்தியா - சீனா இடையிலான உண்மையான கட்டுப்பாட்டு கோட்டில் நிறுத்துவதற்காக இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஏவுகணை, இடைமறிக்கும் ஏவுகணைகளை முறியடிக்கும் திறன் கொண்டது. மேலும் ஒரு குறிப்பிட்ட தூரத்தை நடுவானில் கடந்த பிறகு தனது பாதையை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டது.
சூரிய கதிர்வீச்சின் ஒளி அலையை பதிவுசெய்த ஆதித்யா - இஸ்ரோவின் ஆய்வு தரவுகள் வெளியீடு
  • சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஆதித்யாஎல்-1 விண்கலத்தை அனுப்பியுள்ளது. 
  • இது சூரியனின் எல்-1 பகுதியை நோக்கி சீரான வேகத்தில் பயணித்து வருகிறது. இந்நிலையில் ஆதித்யாவிண்கலம் தனது பயணத்தின்போது மேற்கொண்ட சில ஆய்வு முடிவுகளை இஸ்ரோ நேற்று வெளியிட்டது. 
  • ஆதித்யாவில் உள்ள ஹெல்1ஒஎஸ் எனும் எக்ஸ்ரேஸ்பெக்ட்ரோமீட்டர் கருவியானது அக்டோபர் 29-ம் தேதி சூரிய கதிர்வீச்சின் ஒளி அலையை பதிவு செய்துள்ளது. 
  • இவை அமெரிக்காவின் ஜிஒஇஎஸ் விண்கலம் ஏற்கெனவே வழங்கிய தரவுகளுடன் ஒத்துப்போகிறது. இந்த தகவல்கள்சூரிய கதிர்வீச்சின் மூலம் வெளிப்படும் ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் தொடர்பான ஆய்வை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
  • ஹெல்1ஒஎஸ் கருவி சூரியனில் இருந்து வெளியேறும் எக்ஸ்ரே கதிர்களை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது. அந்த கதிர்களின் வாயிலாக உருவாகும் வெப்ப ஆற்றலையும் அதன்மூலம் அறிய முடியும். பெங்களூர் யூஆர்ராவ் செயற்கைக்கோள் மையம் இந்த கருவியை தயாரித்தது''என்று கூறப்பட்டுள்ளது.
  • இதற்கிடையே புவியில் இருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள சூரியனின் எல்-1பகுதி அருகே சென்றதும் விண்கலம் அதை மையமாக கொண்ட சூரிய ஒளிவட்டப் பாதையில் (Halo Orbit) நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சி.பி.ஐ இணை இயக்குனராக சந்திரசேகர் நியமனம்
  • சி.பி.ஐ., இணை இயக்குனராக குஜராத்தைச் சேர்ந்த வி. சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை நியமன கமிட்டி ஒப்புதல் அளித்தது. இவர் 2000ம் ஆண்டு ஐ.பி.எஸ்., கேடர் ஆவார்.
75% இட ஒதுக்கீடு - பீகார் அமைச்சரவை ஒப்புதல்
  • பீகார் மாநில அமைச்சரவை  செவ்வாய்க்கிழமை மாலை 60 சதவீத இடஒதுக்கீட்டை (பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 சதவீதம் உட்பட) 75 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்த இடஒதுக்கீடு மசோதா தற்போது நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளது.
  • மேலும், மாதம் ரூ. 6,000க்கும் குறைவான வருமானம் உள்ள 94 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் ஐந்தாண்டுகளுக்கு வழங்கவும், 67 லட்சம் நிலமற்ற குடும்பங்களுக்கு ஒரு முறை ரூ.1 லட்சம் வழங்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதனால், மாநில அரசின் கருவூலத்தில் ஆண்டுக்கு ரூ.50,000 கோடி கூடுதல் சுமை ஏற்பட உள்ளது. 
  • முன்மொழியப்பட்ட இடஒதுக்கீடு மசோதா, தற்போதுள்ள 10 சதவீத பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஒதுக்கீட்டைத் தவிர, ஓ.பி.சிகளுக்கு 18 சதவீத இடஒதுக்கீட்டையும், ஈ.பி.சிகளுக்கு 25 சதவீதத்தையும், பட்டியலிட்ட சாதி பிரிவினருக்கு (எஸ்.சி) 20 சதவீதத்தையும், பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு (எஸ்.சி) 2 சதவீதத்தையும் வழங்க வாய்ப்புள்ளது. 
  • பீகார் மாநிலங்களில் தற்போது 50 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே வழக்கத்தில் உள்ள நிலையில், அதில், எஸ்.சி-க்கு 14 சதவீதம், எஸ்.டி-க்கு 10 சதவீதம், ஈ.பி.சி-க்கு 12 சதவீதம், ஓ.பி.சி-க்கு 8 சதவீதம், பெண்கள் மற்றும் பொது பிரிவில் உள்ள ஏழைகளுக்கு தலா 3 சதவீதம் வழங்கப்படுகிறது. அதனுடன் 10 சதவீத பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஒதுக்கீட்டை சேர்த்தால், தற்போதைய ஒதுக்கீடு 60 சதவீதமாக வருகிறது.
  • சுமார் 13 கோடி பீகார் மாநில மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் ஏழைகள் (ஒரு நாளைக்கு ரூ.200 அல்லது ஒரு மாதத்தில் ரூ.6,000க்கு குறைவாக வருமானம் ஈட்டுபவர்கள்) என்று கணக்கெடுப்பு அறிக்கை காட்டுகிறது.
இந்தியாவும், நெதர்லாந்தும் மருத்துவ தயாரிப்பு ஒழுங்குமுறை மற்றும் மருத்துவ தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்துவதில் ஒத்துழைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் 
  • நெதர்லாந்தின் ஹேக்கில் மருத்துவ தயாரிப்பு ஒழுங்குமுறை மற்றும் மருத்துவ தயாரிப்புகள் மற்றும் சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும், நெதர்லாந்தும் கையெழுத்திட்டுள்ளன.
  • நெதர்லாந்தின் சுகாதாரம், நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. எர்னஸ்ட் குய்பர்ஸுடன் மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் திரு. பகவந்த் குபா நடத்திய சந்திப்பின் போது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • நவம்பர் 6 முதல் 8 வரை நெதர்லாந்தில் நடைபெறும் இரண்டாவது உலக உள்ளூர் உற்பத்தி மன்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திரு குபா தலைமையிலான இந்திய தூதுக்குழு நெதர்லாந்து சென்றுள்ளது. 
  • உலக உள்ளூர் உற்பத்தி தளம் என்பது மருந்துகள் மற்றும் பிற சுகாதார தொழில்நுட்பங்களுக்கான அணுகலை அதிகரிக்கும் நோக்கத்துடன் உலக சுகாதார அமைப்பின் முன்முயற்சியில் உருவாக்கப்பட்ட ஒரு தளமாகும் இது.
கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையத் தலைவர் 'உள்ளூர் குரல்' என்ற கருப்பொருளில் ஐந்து நாள் 'தீபாவளி விழாவை' தொடங்கி வைத்தார்
  • 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் 106-வது பகுதியில் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, பண்டிகை நாட்கள் மற்றும் சிறப்பு தருணங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 
  • அவரது தலைமையின் கீழ் “உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்” என்ற உணர்வை வலுப்படுத்தும் வகையில், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு மனோஜ் குமார் புதுதில்லி, கன்னாட் பிளேஸில் உள்ள கதர் துறை கட்டிடத்தில் ஐந்து நாள் 'தீபாவளி விழாவை'  தொடங்கி வைத்தார்.
  • பிரதமரின் வேண்டுகோளுடன் தில்லி மக்களை இணைக்கும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் சாமானிய மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, 'தீபாவளி விழாவின்போது சிறப்பு அளவிலான உள்ளூர் தயாரிப்புகள் கிடைக்கின்றன. 
  • கதர் பொருட்கள் விற்கப்படும்போது, அவை கிராமப்புற இந்தியாவில் பணிபுரியும் கைவினைஞர்களுக்கு பொருளாதார தற்சார்பை வழங்குகின்றன.
தமிழ்நாட்டுக்கு 2,976 கோடி - ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு
  • ஒன்றிய அரசின் நவம்பர் மாத நிதி பங்கீடை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. மொத்தமாக ரூ.72,961 கோடியை ஒன்றிய அரசு விடுவித்த நிலையில், இதில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்துக்கு ரூ.13,088.51 கோடியும், பீகாருக்கு ரூ.7,338.44 கோடியும், மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.5,727.44 கோடியம், மேற்கு வங்கத்துக்கு ரூ.5,488.88 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.4,396.64 கோடியும், மகாராஷ்டிராவுக்கு ரூ.4,608.96 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அதே நேரம் தமிழ்நாட்டுக்கு ரூ.2,976.1 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் பரப்பளவு, மக்கள் தொகை, வரி வருவாய், தனிநபர் வருவாய், காடுகளின் பரப்பளவு ஆகியவற்றுக்கு ஏற்ப வரிப் பகிர்வு தொகை அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது என்று சொல்லப்பட்டாலும், மக்கள் தொகையை மட்டுமே கணக்கீடாக வைத்து ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel