Type Here to Get Search Results !

25th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


25th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஆட்டோ சவாரிக்குப் புதிய செயலியை அறிமுகப்படுத்தும் புதுச்சேரி அரசு
  • புதுச்சேரியில் ஆட்டோ சவாரிக்காக புதிய செயலியை போக்குவரத்துத்துறை அறிமுகப்படுத்தவுள்ளது. ஒழுங்கற்றக் கட்டண நிர்ணயத்தால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழும் புகார்களைக் குறைக்க இந்த முயற்சியை மேற்கொள்வதாகப் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
  • இந்த மொபைல் செயலியின் மூலம் ஒழுங்கான முறையில் கட்டணம் வசூலிக்கப்படுவதோடு ஆட்டோ ஓட்டுனர்களுக்குச் சமமான ஊதியம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், இதன் மூலம் பாதுகாப்பான மற்றும் நியாயமான முறையில் ஆட்டோ சவாரிகள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணக்கமற்ற மற்றும் தகுந்த அனுமதியின்றி இயக்கப்படும் ஆட்டோக்களுக்கும் அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. 
  • ஆட்டோ ஓட்டுனர்கள் 2016ல் வெளியிடப்பட்ட அரசாணையில் அறிவுருத்தப்பட்ட கட்டணங்களையே பெற வேண்டும். குறைந்தபட்சக் கட்டணமாக, முதல் 1.8 கிலோ மீட்டர்களுக்கு 35 ரூபாயும், அதற்கு மேல் ஒரு கிலோமீட்டருக்கு 18 ரூபாயும், அதைத்தவிர ஐந்து நிமிடத்திற்கு 5 ரூபாய் வீதமும் கட்டணங்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது புதுச்சேரியின் போக்குவரத்துத் துறை. 
சர்வதேச சர்க்கரை அமைப்பின் 2024 ஆம் ஆண்டிற்கான (ஐ.எஸ்.ஓ) தலைவராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது
  • லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச சர்க்கரை அமைப்பின் (ஐ.எஸ்.ஓ) 63-வது கவுன்சில் கூட்டத்தில், 2024ம் ஆண்டிற்கான இந்த அமைப்பின் தலைவராக இந்தியா தேர்வுசெய்யப்பட்டது. உலக அளவில் சர்க்கரைத் துறையை வழிநடத்துவதில் நாட்டிற்கு இது ஒரு பெரிய கௌரவமாகும். மேலும் இந்த துறையில் நாட்டின் முன்னேற்றத்தை இந்த தலைமைத்துவம் பிரதிபலிக்கிறது.
  • உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகளாவிய சர்க்கரை நுகர்வில் சுமார் 15 சதவீதத்தையும் உலகளாவிய சர்க்கரை உற்பத்தியில் சுமார் 20 சதவீதத்தையும் இந்தியா கொண்டுள்ளது.
  • சுமார் 90 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட சர்க்கரை தொடர்பான உச்ச சர்வதேச அமைப்பான ஐ.எஸ்.ஓவை வழிநடத்துவது இந்தியாவுக்கு பொருத்தமானதாக அமையும்.
  • அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்குப் பிறகு எத்தனால் உற்பத்தியில் உலகின் 3-வது பெரிய நாடாக உள்ளது. இந்தியாவில் பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு சதவீதம் 2019-20 ஆம் ஆண்டில் 5 சதவீதத்திலிருந்து 2022-23 ஆம் ஆண்டில் 12 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எத்தனால் உற்பத்தி 173 கோடி லிட்டரிலிருந்து 500 கோடி லிட்டருக்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.
  • விவசாயிகளுக்கு அதிக கரும்பு விலையை வழங்கும் நாடு என்ற தனிச்சிறப்பு இந்தியாவிற்கு உண்டு. அரசுக்கும் சர்க்கரைத் தொழில்துறைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு இந்திய சர்க்கரைத் தொழில்துறைக்கு புத்துயிர் அளித்துள்ளது. கடந்த 2022-23 ஆம் ஆண்டின் கரும்பு நிலுவைத் தொகை 98% க்கும் அதிகமானவை ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளன.
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து "உற்பத்தியாளர் கூட்டு செயல்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் பெண்களின் பொருளாதார மேம்பாடு" என்ற தலைப்பில் 4 -வது ஆலோசனைப் பயிலரங்கை
  • மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் தீனதயாள் அந்தியோதயா யோஜனா - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (டி.ஏ.ஒய்-என்.ஆர்.எல்.எம்) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து "உற்பத்தியாளர் கூட்டுச் செயல்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் பெண்களின் பொருளாதார மேம்பாடு" என்ற கருப்பொருளில் நான்காவது ஆலோசனை பயிலரங்கை நடத்தியது. 
  • தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய 7 மாநிலங்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள், அரசு, தனியார் மற்றும் சமூகத் துறை அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த பயிலரங்கில் பங்கேற்றனர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel